Sunday 22 April 2012

எல்லா புகழும் இறைவனுக்கு! (2)



நீயெல்லாம் -
உருப்படவா?-
தந்தை!

வினா தாள்-
கஷ்டமாடா-?
தாய்!
-தேர்வு தோல்வியின் போது!

இவனுக்கெல்லாம் -
'இது' ஒரு கேடா?-
சொந்தக்காரன்!

'இதுகெல்லாம்'-'
கவலையாடா?-
நட்புகாரன்!
-காதல் தோல்வியின் போது!

'விளங்கும்'-
விளங்காதவர்களின் பேச்சு!

'விளங்குது'-
விபரம் அறிந்தவர்களின் -
பேச்சு!
-எழுத ஆரமபித்தபோது!

கை தட்டியவர்களும்-
உண்டு!
கை கொடுப்பவர்களும்-
உண்டு-
விழுந்த போது!

வாசம்-
விஷம்-உண்டு
பூக்களிலே!

அரவணைப்பும் -
கழுத்தறுப்பும்-
உண்டு!
-வாழ்க்கையிலே!

ஒளிர் விடும்-
தீபம்!
கடலில் ஒளிர்ந்து இருக்கும்-
முத்து!

இவைகளெல்லாம்-
சொல்லி கொள்வதில்லை-
தனது-
பேர்களை!

யாராவது ஒருவர்-
அதை உணர்த்தாமல் -
இருப்பதில்லை!

என்னை எனக்கே-
அடையாளமும்-
அங்கீகாரமும்-
தந்தவர்கள்!



கதிஜா எனது-
முதல் வாசகி!

முதல் விருதளித்த-
யுவராணி!

இரண்டாம் விருதளித்த-
ஹேமா!

உங்களது-
அங்கீகாரத்துக்கு -
நன்றிகள் மா!

(கதிஜா எனும் சகோதரி-
பரங்கி பேட்டையை சேர்ந்தவர்)

21 comments:

  1. நினைவுகள்....

    நினைத்து கொண்டு பகிர்ந்தமைக்கு பாராட்டுக்கள்

    ReplyDelete
    Replies
    1. mana saatchi!

      ungal varavukkum-
      karyuthukkum mikka nantri!

      Delete
  2. குட்டுக்களும்,தட்டுகளும்,வாழ்க்கையின் ஒரு பகுதி.திறமைக்கு அங்கீகாரம் எப்போதும் உண்டு.

    ReplyDelete
    Replies
    1. ayya!

      ungal karuthukkum-
      varavukkum mikka nantri!

      Delete
  3. சுப்பர் சீனு!

    ஹேமா அக்கா விருதையும் உங்கட ப்லோக்கில் வைத்துக் கொள்ளுங்கள் யுவா கொடுத்த விருதை வைத்ததைப் போல் !!
    அங்கே எழுதிய கவிதையும் இங்கே பகிரலாமே

    ReplyDelete
    Replies
    1. kalai;

      ungaludaya varavukku-
      mikka nantri!

      ivvalavu naal varaathamaikku-
      varuththam -
      enakku!

      ungal aasaiyai pola-
      enakkumthaan asai!

      theriyavillai-
      aanaalum
      meendu muyarxhikkiren!

      Delete
    2. சீனு வரமால் எல்லாம் இருக்கோணும் நினைக்கவில்லை ...கொஞ்சம் வேலை அப்புடம் ஹேமா அக்கா யோகா மாமா ரீவேரி அண்ணா ரீரீ(தனிமரம்) அண்ணா மற்றும் அம்பலத்தார் அங்கிள் வோடு ரொம்ப நேரம் கதைச்சி கொண்டே இருப்பினம் ..ஜாலி யா இருக்கும் டைம் போறதே தெரியாது ...அப்புறம் என்ட குரு வும் அண்டார்ட்டிக்கா சென்று இருக்கங்கல்லோ அவவின் ப்லோக்கையும் நான் தான் பார்க்குறான் அங்கடையும் எல்லாருக்கும் பின்னூட்டம் கொடுக்கிறான் ...அதான் வர முடியல சீனு ...சாரி ..


      அம்மாடி கேட்ட ஒருக கேள்விக்கு இம்புட்டு எக்ஸ்ப்லானஷன் ஆ ன்னு நினைக்கதிங்கோ ... நானாலம் அப்புடித்தன் ...

      ஒன்னு கேட்டா ஓராயிரம் சொல்லுவனாம் அப்புடி ன்னு என்ட அம்மாச்சி சொல்லுவினம் என்னை பத்தி

      Delete
    3. சீனு ஹேமா அக்காள் கொடுத்த விருதினை வைக்கிறது எப்புடி எண்டு எனக்கு தெரிஞ்சதை சொல்லுரணம் ...முயற்சி செய்துப் பாருங்கோ

      ௧.முதலில் ஹேமா அக்கா ப்லோக்கில் இருக்கும் அந்த விருது படத்தை ரைட் கிளிக் செய்து டவுன்லோட் பண்ணி உங்கட கம்ப்புடேரில் சேவ் செய்யுங்கள் ...

      ௨.அப்புறம் உங்கட ப்லோக்கை ஓபன் பண்ணி design il add a gadget எண்டு இருக்கும் அதனுள் செண்டு டைட்டில் கவிதை தந்த விருது எண்டு கொடுங்கோ ..பின்னரம் அப்லோட் இருக்கும் இடத்தில் சூஸ் ய பைலில் உங்கட கம்ப்யூட்டரில் சேவ் பண்ணிய இமேஜ் அப்லோட் பண்ணி சேவ் பண்ணுங்க ..அவ்வளவு தான் ...எதேனுமேண்டல் கேளுங்க

      Delete
    4. kala;
      ungaludaya aarvathirkkum-
      meendum enKku vazhangiya arivuraikkum-
      marupadiyum vanthamaikkum-
      mikka nantri!

      meendum muyarchikkiren!
      ungalukku meendu nantrikal!

      Delete
  4. வாழ்த்துக்கள் நினைவுகளை பகிர்ந்தமைக்கு .

    ReplyDelete
    Replies
    1. sasikala;

      ungal varavukkum-
      karuthukkum nantri!

      Delete
  5. விருது என்பது ஒரு ஊட்டச்சத்து.அழகான கவிதை தந்தீர்கள் சீனி.இன்னும் இன்னுமெழுத என் அன்பான வாழ்த்துகள் !

    ReplyDelete
    Replies
    1. hemaa!

      mikka nantrikal !
      ungaludaya aatharavukku-
      nampikkaikku!

      Delete
  6. கை தட்டியவர்களும்-
    உண்டு!
    கை கொடுப்பவர்களும்-
    உண்டு-
    விழுந்த போது!
    >>
    கைக்கொடுப்பவர்களை காட்டிலும் , நாம் வீழும்போது கைத்தட்டுபவர்களே அதிகம் இவ்வுலகில் சகோ

    ReplyDelete
    Replies
    1. raji!

      ungaludaya varukaikku-
      karuthukku mikka nantri!

      Delete
  7. வாழ்த்துகள் நண்பா

    ReplyDelete
    Replies
    1. sadish!
      ungal muthal varavukku-
      mikka nantri!

      Delete
  8. விருதுகள் பெறும் வீரரே.. தொடரட்டும் உங்கள் கவிதைச் சாரல்.
    இட ஒதுக்கீடு பற்றி இனிமையாக எழுதி எங்களின் உள்ளத்தில் ஒரு இட ஒதுக்கீட்டைப் பெற்றுவிட்டீர்கள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. asarath!
      ungaludaya karuthukkum-
      varukaikkum mikka nantri!

      Delete
  9. நல்லாத்தான் சிந்திக்கிறீங்கள் சீனி.... வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. puthiya thentral!
      ungal varavukkum-
      karuthukkum mikka nantri!

      Delete