Wednesday 21 March 2012

படகு!

படகு ஓடியது-
ஆத்து தண்ணியில!

மணல் லாரி ஓடுது -
தண்ணியில்லாத
ஆத்துல!
------------------------
அளவுக்கு மீறிய-
பயணிகளால்-
படகு விபத்து!

அறிவு கெட்ட-
நடத்தையால்-
கரு கலைப்பு!
-----------------------
கட்டு மரம்!

படகு!

கப்பல் !

அறிவின் வளர்ச்சி!

கூட்டு குடும்பம்!

தனி குடித்தனம்!

முதியோர் இல்லம்!

அநாதை இல்லம்!

மனிதாபிமானத்தின்-
வீழ்ச்சி!
--------------------------
ஆறு தாங்குது-
சுமையான -
படகை!

தண்ட சோறு-
மகனையும்- 
விட்டு கொடுக்காதவ-
தாய்!
-----------------------
அலைகளில்-
 அலைக்கழிக்கபடுது-
துடுப்பில்லாத-
படகு!

சீர்கேட்டில்-
அழியும்- 
ஒழுக்கம்-
இல்லாதவன்-
வாழ்வு!
---------------------

ஆத்து தண்ணி-
வத்தி போச்சி!

படகும்-
கரையில-
ஒதுங்கிடுச்சி!

"நமக்கும் " -
சுய நலம்-
பெருகிடுச்சி!

கூட்டு குடும்ப -
வாழ்வும்-
உடஞ்சிடுசி!
-------------------
ஓட்டை படகை-
பயன் படுத்துபவன்-
முட்டாள் என்கிறான்!

இதயத்தை-
ஓட்டையாக்கும்-
"புகை" இழுப்பது-
ஸ்டைலுங்குறான்!
-----------------------
சுமப்பது-

வரலாறா! ?
குடும்ப-
தகறாரா!?
தெரியாது!- 
ஆனாலும்-
சுமக்குது-
கர்ப்ப பை!

சுமப்பது-
நல்லவனா!,?
கெட்டவனா!?
பார்க்காது-
படகு!
----------------
கடற்கரை படகு-

மறையவும்-
உதவும்-
காதலர்களுக்கு!

ஆபத்தாகவும்-
முடியும்!-
கற்புக்கு!
---------------------

12 comments:

  1. ஒரு குறிப்பிட்ட புள்ளியைச் சுற்றி சுற்றி வந்து
    நீங்கள் நேர்த்தியாகப் படைக்கும்
    கவிதைக் கோலங்கள் அருமையிலும் அருமை
    மனம் கவர்ந்த பதிவு
    தொட்ர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. Ramani ayya!

      ungal varavukkum-
      karuthukkum mikka nantri!

      Delete
  2. படகு
    என்று தலைப்பிட்டு
    நிறைய விஷயங்களை
    அழகாய் ஆழமாய் சொல்லிடீக நண்பா

    நல்ல கவிதைகள் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. seythali ungal varavukkum-
      karuthukkum mikka nantri!

      Delete
  3. படகில் தொடங்கி படு குழியில் கவிழா வண்ணம் படகை செலுத்திய விதம் அருமை .

    ReplyDelete
    Replies
    1. sasikala!

      ungal varavukkum-
      karuthukkum-
      mikka nantri!

      Delete
  4. super seenuuuuuuuuuu

    ReplyDelete
  5. //படகு ஓடியது-
    ஆத்து தண்ணியில!

    மணல் லாரி -
    ஓடுது - தண்ணியில்லாத
    ஆத்துல!//

    சூப்பர் ! ;)

    ReplyDelete
    Replies
    1. Gopala krishnan ayya!
      ungal varavukkum-
      karuthukkum mikaa nantri!

      Delete
  6. ஆரம்பமே அசத்தல் எப்பவும்போல !

    ReplyDelete
    Replies
    1. Hemaa!
      ungal varavukkum-
      karuthukkum mikka nantri!

      Delete