Wednesday 15 February 2017

மொழிப்பெயர்க்கப்படாதவைகள்!

பாறையின் மௌனமாய்
நதியாழத்தின் நிசப்தமாய்
நீள் மரத்து வேரின் புழுக்கமாய்
நெடு நடைப்பாதையின் வெறுமையாய்

எந்நெஞ்சுக் குழிக்குள்ளும்
இன்னும் இருக்கிறது
மொழிப் பெயர்க்கப்படாத நினைவுகள்.!

Monday 13 February 2017

நினைவுத் தூவல் !

அரிசிகளை வீசிடும்போது
பறந்து கலைந்து விட்டு
மீண்டும் குழுமி அரிசிகளை கொத்திடும் புறாக்களைப் போல்!

உன் நினைவுகளை மனதில் தூவி விட்டு கொஞ்சம் காத்திருந்துப் பார்த்தால்
அங்கே கவிதைகள் மொய்த்துக் கொண்டு இருக்கிறது !

Friday 10 February 2017

எனக்குத்தான் தெரியும்.!!

உன்னை
கவிதையாக்க முடியாமல் ,
தவிக்கும் எனக்குத்தான் தெரியும்.
நீ எப்படிப்பட்ட அழகு என்று.!!