Saturday 5 April 2014

பிறந்த மண் !(44)

1930 இரண்டாம் உலக யுத்தம்!

உலகெங்கும் ஒப்பாரி அவலம்!

உலக யுத்தத்திற்கு வித்திட்டவர்கள்!
ஹிட்லரும்!
முசோலினியும்!

இவ்விருவர் கைகள் ஓங்க நாடுகளை விழுங்கினர்!

நேச நாடுகள் அவர்களது கைகளை அடக்கினர்!

ஹிட்லர் தற்கொலை செய்துக்கொண்டான்!

நேச நாடுகளால் முசோலினி தூக்கிலிடப்பட்டான்!

ஒரு வாரமாக அனாதையாக தொங்கியது சடலம்!

பின்னர் பிணங்களோடு பிணமாக புதைக்கப்பட்டது முசோலினி சடலம்!

அதனைத்தொடர்ந்து லிபியா நேச நாடுகள் வசம்!

கழிந்தது சில கால கட்டம்!

பிறகு விடுதலையானது!

சுதந்திர காற்றை சுவாசித்தது!

உமருக்கும்,முசோலினிக்கும் கிடைத்ததென்னவோ தூக்குதான்!

உயர்ந்த மரியாதை யாருக்கு..!?

ஒருவன் வாழ்ந்த காலம் சிறப்பானதா..!?

விடை சொல்லிடும் இறந்திடும் காலம்!

உமர் போராடியது மண்ணை மீட்க!

முசோலினி துடித்தது பிறர் மண்ணை ஆக்கிரமிக்க!

இருவரின் வரலாறும் உலகம் படிக்கிறது!

இன்றைய அநீதியாளர்கள் ''பாடம்''படித்துக்கொண்டால் நல்லது!

-----------முற்றும்---------
எனது இந்த வரலாற்றுப்பயணத்தில் உந்துதலாக கருத்துக்களிட்டு என்னை உற்சாகமூட்டியவர்களுக்கு என் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.அப்பெருமக்கள்;-

1.சகோதரர் திண்டுக்கல் தனபாலன் அவர்கள்!
http://dindiguldhanabalan.blogspot.com/?m=1

2.சகோதரி கிரேஸ் அவர்கள்!
http://thaenmaduratamil.blogspot.sg/?m=1

3.சகோதரர் சுரேஷ் அவர்கள்!
http://thalirssb.blogspot.sg/2014/02/mokka-jokes-2.html?m=1

4.சகோதரர் நாகராஜ் அவர்கள்!
http://venkatnagaraj.blogspot.sg/?m=1

இப்பெருமக்களுக்கும்.படித்து விட்டு கருத்திடாமல் சென்ற உறவுகளுகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.

10 comments:

  1. உமர் நம் மனதில் நீங்கா இடம் பெற்றுவிட்டார்! சிறப்பானதொரு வரலாற்று தொடர்! சிறப்பாக நிறைவு பெற்றுள்ளது! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. சகோ ,சுரேஷ்!

      தொடர்ந்து வந்தமைக்கும் கருத்திற்கும் நன்றி!

      Delete
  2. #இன்றைய அநீதியாளர்கள் ''பாடம்''படித்துக்கொண்டால் நல்லது!#
    முத்தாய்ப்பாக நீங்கள் சொன்ன கருத்து அருமை !

    ReplyDelete
    Replies
    1. Bagawanjee..!
      கருத்திற்கு நன்றி!

      Delete
  3. வணக்கம் சீனி ...நலமா ....நான் எப்போவாது வந்து அட்டெண்டன்ஸ் போடுற ஆளு மன்னிச்சிடுங்க ....என்னோட சின்னதொரு கருத்து இதை அப்படியே மின்னூல் வடிவம் கொடுத்தால் என்ன???? அனைவருக்கும் பயன்படும் ......முயற்சித்து பார்ப்போமா .....

    ReplyDelete
  4. சகோ., கலை !
    முயற்சிக்கலாமே..
    அதனை விபரம் தெரிந்தவர்களிடம் கேட்டுப்பார்க்கிறேன்

    உங்களுக்கு தெரியுமானால் எனது மின்னஞ்சல் வாயிலாக பதிலளியுங்களேன்.

    ReplyDelete
  5. உமர் முசோலினியை வேண்டிக்கொள்ளச் சொன்னாரே..தூக்குத் தண்டனை கிடைக்காமல் இருக்க..அதுதான் பின்னர் நடந்திருக்கிறது....
    அநீதியாளர்கள் பாடம் படிக்க எத்தனை ஹிட்லர், எத்தனை முசோலினி தேவையோ!!!! அருமையாக ஒரு வரலாற்றுக் கதையை கவிதை வடிவில் கொடுத்ததற்கு நன்றி, வாழ்த்துகள் சீனி!
    Blog to Book மாற்றுவது எப்படி என்று தனபாலன் சகோதரர் பகிர்ந்திருக்கிறார் பாருங்கள்...
    http://dindiguldhanabalan.blogspot.com/2014/01/Ethics-and-e-Books.html

    ReplyDelete
    Replies
    1. கிரேஸ் சகோ..!
      முயற்சி பண்ணுகிறேன்!
      தொடர்ந்து வந்தமைக்கும் கருத்திற்கும் நன்றி!

      Delete
  6. உமர் அவர்களின் வாழ்க்கையிலிருந்து முசோலினி கற்றுக் கொண்டாரோ இல்லையோ இன்றைய மக்களும் கற்றுக் கொள்ளாமல் இருக்கிறார்கள் என்று தான் தோன்றுகிறது.

    தொடர்ந்து சிறப்பான விஷயங்களை பகிர்ந்து கொள்ளும் உங்களுக்கு வாழ்த்துகள். மேலே எனது வலைப்பூவின் பெயரையும் குறிப்பிட்டதற்கு நன்றி! எனது பெயர் வெங்கட். என்னுடைய தந்தை பெயரான நாகராஜன் என்பதைத் தான் நாகராஜ் என என் பெயர் பின்னால் சேர்த்து இருக்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. சகோ வெங்கட்!

      தொடர்ந்து வந்தமைக்கும் கருத்திற்கும் நன்றி!

      இனி பெயரை மாற்றி விடுகிறேன் !

      Delete