Saturday 22 March 2014

பிறந்த பூமி !(30)

கூட்டத்திலிருந்து-
ஓரிரு குரல் ஒலித்தது!

உமர் முக்தாருக்கு-
இருக்கை அளிக்கும்படி வேண்டியது!

நீதிபதிகள் ஆலோசித்தனர்!

இருக்கை வழங்க அனுமதித்தனர்!

நன்றி சொல்லி அமர்ந்தார்!
உமர் முக்தார்!

குறிப்பெடுக்க பேனாக்கள் பணித்தது!

அத்தனை கண்களும் முக்தாரை பார்த்தது!

''அளவற்ற அருளானனும்,நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் ஆரம்பிக்கிறேன்!

எனது வாக்குமூலத்தின் மூலம்!

எனக்கு கருணையோ , இரக்கமோ காட்டிட வேண்டியல்ல என்பதை தெரியப்படுத்திக்கொள்கிறேன் இதன் மூலம்!

எல்லா மனிதர்களுமே அடிமைப்படுவதை விரும்புவதில்லை!

அடக்கு முறைகள் கட்டவிழ்த்துவிடும்பொழுது எதிர்ப்புகள் இல்லாமலும் இருந்ததில்லை!

அன்றைக்கு இத்தாலியை சர்தீனியாவின் இரண்டாம் மன்னர் எமானுவேல் அடக்கி ஆண்டார்!

அதற்காக எதிர்ப்பையும் சந்தித்தார்!

இத்தாலிக்கு சுதந்திரம் வேண்டி ''மாஜினி'''கவூர்''கர்பால்டி''போன்றவர்கள் போராடவில்லையா..!?

இன்றைக்கு மக்கள் அவர்களை வீரர்கள் என போற்றவில்லையா..!?

அதுபோலாகவே இன்றைய அதிபர் முசோலினி அவர்கள் மூன்றாம் எமானுவேலை எதிர்க்கவில்லையா..!?

அம்மன்னருக்கு எதிராக மக்கள் புரட்சி நடத்தவில்லையா..!.?

இத்தனைக்கும் நீங்கள் அனைவரும் ஒரே மதம்,ஒரே மொழியுடையவர்கள்!

இங்கோ நீங்களும் நாங்களும் மதத்தாலும்,மொழியாலும் வேறுப்பட்டவர்கள்!

உங்களது மண்ணிற்காக நீங்கள் போரடினால்  தியாகியா..!?

எங்களது மண்ணிற்காக நாங்கள் போராடினால் தேசத்துரோகியா..!?

சட்டத்திற்கு முன் நிறுத்தப்பட்டுள்ளேன்!
இச்சட்டமே உங்களால் இயற்றப்பட்டதுதான்  
 என்பதையும் நினைவுப்படுத்த கடமைப்பட்டுள்ளேன்!

இதில் எப்படி சுதந்திரத்திற்காக போராடுபவர்களுக்கு சாதகமாக சட்டம் இருக்கும்!?''

நீதிபதி குறுக்கிட்டார்!

''அப்படியானால்-
ராணுவ வீரர்களை கொன்றது!?
உணவில் விஷம் கலந்தது...!?
இதற்கெல்லாம் என்ன செய்வது..!?

கேள்வியொன்று  உமர் முக்தார் முன் நின்றது!

(தொடரும்...!!)





3 comments:

  1. என்ன சொல்லப் போகிறார்...? பதில்களை அறிய தொடர்கிறேன்...

    ReplyDelete
  2. என்ன சொல்வார் உமர் முக்தார்..... தொடர்கிறேன்.

    ReplyDelete
  3. உமர் முக்தாரின் பதில் என்ன? தொடர்கிறேன்! நன்றி!

    ReplyDelete