Sunday 16 March 2014

பிறந்த பூமி !(24)

உமர் தாக்கப்பட்டிருந்தார்!

ரத்தக்கசிவினால் சிகப்புத்தாடியுடன் இருந்தார்!

கிராசியானி கொதித்துப்போனார்!

அதிகாரிகளை திட்டிதீர்த்தார்!

மருத்துவர் வரவழைக்கப்பட்டார்!

மருத்துவ மனைக்கு உமர் கொண்டுச்செல்லப்பட்டார்!

முதலுதவி செய்தனர்!

அரை மணி நேரத்திற்கு பின் கண் விழித்தார்!

பேச முடியவில்லை உமரால்!

கலங்காமல் இருக்கமுடியவில்லை கிராசியானியால்!

உமர் தாக்கபட்டது ஒருபுறம்!

மக்கள் தாக்கபடுவது ஒருபுறம்!

உமர் முக்தார் சிகிச்சை பெறுவது ரகசியமாக இருக்கவேண்டும்!

இல்லையென்றால் கலகக்காரர்கள் தாக்க கூடும்!

எச்சரித்தார்!

அலுவலகம் சென்றார்!

தந்தி வந்து குவிகிறது!

தன் பங்கிற்கு பீதியை கிளப்பியது!

காவல் துறை அதிகாரிகளான லிபியர்கள் துப்பாக்கிகளுடன் தலைமறைவு!

தொடர்நது அரசு அதிகாரிகள் ராஜினாமா செய்வதால் கட்டுபடுத்த முடியாத விளைவு!

வித்தியாசமின்றி கொல்கிறார்கள்!

இத்தாலியர்களெல்லாம் இம்சைக்கு உள்ளானார்கள்!

நாடெங்கும் கலவரம்!

ஒரே களேபரம்!

கிராசியானி -
முசோலினிக்கு தகவல் அனுப்புகிறார்!

அவரோ ஆயுதத்தை பயன்படுத்த சொல்கிறார்!

அவர் விளங்குவதாக இல்லை!

கிராசியானி கோபமடையாமலும் இல்லை!

முடிவுக்கு வந்துவிட்டார்!

தனக்கு சரியெனபடுவதை செய்திட துணிந்தார்!

பின் விளைவுகளை ஏற்றுக்கொள்ள துணிந்தார்!

வானொலி வாயிலாக லிபிய மக்களுக்கு பேட்டி கொடுத்தார்!

கெஞ்சிக்கேட்டுக்கொண்டார்!

''உமர் முக்தார் நலமாக உள்ளார்!

மற்ற போராளிகளும் நலமாக உள்ளனர்!

அரசு அதிகாரிகள் வேலைக்கு திரும்பவும்!

அரசாங்கத்திற்கு உதவவும்!

மக்கள் அமைதி காக்கவும்!

உமர் முக்தாருடன் சந்திக்க வருகிறேன் திரும்பவும்!

பேட்டி கொடுத்து விட்டார்!

உமரை சந்திக்க புறப்பட்டார்!

உமர் மருத்துவ மனை படுக்கையில் சாய்ந்திருந்தார்!

கிராசியானி தொட்டுப்பார்த்தார்!

காய்ச்சல் இல்லை!

கிராசியானி -
நடந்தவற்றுக்கு மன்னிப்புக்கேட்டார்!

உமர் தலையசைத்தார், வாய் பேசவில்லை!

''பேச முடியவில்லையா..!?-
கிராசியானி கேட்டார் கனிவுடன்!

உமர் முக்தார் வயிற்றை பிடித்து சைகை காட்டினார்!

மருத்துவரை கிராசியானி ஏறிட்டார்!

மருத்துவர் புரிந்துக்கொண்டு பதிலளித்தார்!

''கவர்னர் அவர்களே!
உமர் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார்!

உயிருடன் இருப்பதே அதிசயம்தான்!

கிராசியானி கேட்டுக்கொண்டார்!

இல்லை -
மருத்துவரிடம் கெஞ்சிக்கேட்டுக்கொண்டார்!

எப்படியாவது காப்பாற்றுங்கள்!

அவரை பேச வையுங்கள்!

தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும்!

பலரது உடலை விட்டு  உயிர்கள் பிரியும்!''

கிராசியானி சொல்லிக்கொண்டிருந்த நேரம்!

உமர் முக்தாரிடமிருந்து ஒரு சப்தம்!

(தொடரும்...!!)

3 comments:

  1. ஓவ்வொரு பதிவையும் "ஆவலுடன்" முடிக்கிறீர்கள்...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. அடுத்த பகுதிக்கான ஆவலை இப்போதே உண்டாக்கி விட்டீர்கள்.

    உயிர் பிழைத்தாரா உமர் முக்தார்..... தொடர்கிறேன்.

    ReplyDelete