Friday 7 March 2014

பிறந்த பூமி !(15)

''நம் மதத்தை சேர்ந்தவர்கள்தான்-
கிருஸ்தவர்கள்!

ஆனாலும்-
நம்மை இத்தாலியர்களாக பார்ப்பவர்கள்!

பணம் கொடுத்தால்-
உணவு தருவார்கள்!
யூதர்கள்!

கூடுதலாக எதிரிகள் கொடுத்தால்-
விஷத்தையும் தாராளமாக கலந்திடுவார்கள்''!

கிராசியானி நிலவரத்தை சொன்னார்!

''வேறன்னதான் வழி.!?-
மக்ரோனி  கேட்டார்!

''சமாதான வழி அடைபட்டுவிட்டது!

ஒரே வழிதான் உள்ளது!

போராடி ஜெயிப்பது!
அல்லது-
போரிலேயே சாவது!''

மீண்டும் ஆலோசனை கூட்டம்!

அனைத்து முக்கிய அதிகாரிகளும் பங்கேற்றம்!

உங்கள் பகுதி நிலவரங்கள் என்ன!?-
கிராசியானி கேட்டார்!

''கலகக்காரர்கள் வம்பிற்கு வருவதில்லை!

லிபியர் ஒருவர் கொல்லப்பட்டால், மூன்று இத்தாலியர்களை கொல்லாமல் விடுவதில்லை!

போராட்டக்காரர்கள் !

எரிமலையை போன்றவர்கள்!

வெளிவரும்வரை தெரிவதில்லை!

உறுப்பினர்கள் ''குறிப்பிட்ட''தகுதியுடையவர்களென கூறுவதற்கில்லை!''

விவாதங்கள் தொடர்ந்தது!

பரிதாபம்-
 ''துப்பு''எதுவும் கிடைக்காதது!


வரைபடம் படாதபாடுபட்டது!

எல்லை நாடுகள் ஆராயப்பட்டது!

சாதகம் யார் யார்!?

'சங்கை 'அறுப்பவர்கள் யார் யார்!?

எங்கு தொடங்க !?
எங்கே முடிக்க!?

முடிவு வந்தது!

துனீசியா நாட்டின் எல்லையில்-
 ''நாலூது',எனும் இடத்தில்}
ஒரு படை!

அல்ஜீரியா நாட்டின்  எல்லையில்-
'காட்''எனும் இடத்தில்-
ஒரு படை!

இரண்டு படைகளுக்கும் மத்தியில்-
அவசர உதவிக்கு ஒரு படை!

மக்களோ சகஜ நிலை!

ராணுவ வீரர்களுக்கோ வியப்பு நிலை!

போராளிகள் சொன்ன-
மூன்றுநாள் கெடு முடிந்தது!

மேலும் இரு நாள்களும் முடிந்தது!

அசம்பாவிதங்கள் இல்லை!

போராளிகள் திட்டம்தான் என்ன!?-
அறிய முடியவில்லை!

காதலியின் மௌனம்-
காதலனுக்கு ரணம்!

போர்களத்தில் நிசப்தம்-
எதற்கான முன்னோட்டம்!?

(தொடரும்..!!)


5 comments:

  1. மௌனம்-ரணம் - உண்மை...

    ஆவலுடன் தொடர்கிறேன்...

    ReplyDelete
  2. #போர்களத்தில் நிசப்தம்-
    எதற்கான முன்னோட்டம்!?#
    அதானே ,புயலுக்கு பின்னேதானே அமைதி வரும் ?

    ReplyDelete
  3. அடுத்து என்ன? என்று ஆவலைத்தூண்டுகிறது! தொடருங்கள்! நன்றி!

    ReplyDelete
  4. எதற்கான முன்னோட்டம்? ஏதோ பெரிதாய் நடக்கப் போகிறதோ?...

    உங்கள் எழுத்துநடை மிக நன்றாய் உள்ளது சகோ..வாழ்த்துகள்!

    ReplyDelete
  5. அமைதிக்குப் பின்னே ஒரு பெரும் புயல் அடிக்கப் போகிறதோ.....

    தொடர்கிறேன்.

    ReplyDelete