Tuesday 25 February 2014

பிறந்த பூமி !(5)

இருந்தது-
இரு மலைக்குன்றுகள்!

புதிதாக ஒரு குன்று-
இறந்து கிடந்த மனித உடல்கள்!

ஆயுதங்கள் எடுத்து சென்றுவிட்டார்கள்!

பெண்களை மீட்டு சென்றுவிட்டார்கள்!

கிராசியானி கோபத்தை விழுங்கினார்!

சதிவலையாக அறிக்கை வெளியிட்டார்!

''அஜிஸியா கிராம சம்பவம்!
பெரும் துயரம்!

ராணுவ நடவடிக்கை!
செய்திட கூடாத செய்கை!

நானே !
தண்டித்திருப்பேன்!

கலகக்காரர்கள் தண்டித்துவிட்டதால் வருந்துகிறேன்!

மக்கள் அரசின் விழுதுகள்!

கலகக்காரர்கள் இலைகளில் விழுந்த பூச்சிகள்!

''பூச்சி''களை களையெடுக்க உதவுங்கள்!

சன்மானங்கள் உங்களுக்காகவே காத்திருப்பவைகள்!''

அறிக்கை வெளியானது!

இரு நாட்கள் பிறகு மடலொன்று வந்தது!

போராட்ட குழுவின் ரகசிய சந்திப்பு!

புட்டு, புட்டு வைத்தது அக்காகித மடிப்பு!

ஜெனரல் கிராசியானி-
படைகளை திரட்டினார்!

துப்பாக்கிகள்!
எறி கணைகள்!

வஞ்சம் தீர்த்திட தீயான எண்ணங்கள்!
வந்தது கடிதம் காட்டிக்கொடுத்த இடம்!

''ஓயஸிஸ்''எனும் திட்டுத்தோட்டம்!
பாலைவனங்களில் பிரதானம்!

அத்தோட்டத்திலிருப்பது-
பேரீத்த மரங்களும்!

காட்டுச்செடிகளும்!
ஒரு கிணறும்!

பெரு வெளியான பாலைவனம்!
மறைந்து தாக்க இல்லை இடம்!

கிராசியானி-
படைகளை தூரத்தில் அமர்த்தினார்!

படுத்துக்கொண்டு கண்காணிக்க வைத்தார்!

இரவில் பாலை மணல்இதமாக இருந்தது!

பொழுது விடிந்தது!

வெயில் ஏற ஏற!

சூடு தலைகவசம் வழி இறங்க இறங்க!

துப்பாக்கியும் கொதிக்கிறது!

மணலும் வறுத்து எடுக்கிறது!

நொந்தார்கள் !
வெந்தார்கள்!

கிராசியானியும்தான்!

''கெத்தாக ''நடித்தது-
வேறு வழியில்லாமல்தான்!

காலை,பிற்பகலானது!

பிற்பகல்,மாலையை நோக்கி பயணிக்கிறது!

''ஒயஸிஸ்'' தோட்டம் அசைவதாக இல்லை!

''ஒளிந்து''இருப்பார்களொ.!?எனும் சந்தேகமும் இல்லாமலில்லை!

தண்ணீரும் தீர்ந்தது!

நாவும் வறண்டது!

கிணற்றை நோக்கி பயணித்தே ஆகனும்!

இல்லையானால் தாகத்திலேயே சாகனும்!

குதிரை வீரர்கள் தோட்டம் நோக்கி சென்றார்கள்!

பின் தொடர்ந்தார்கள்,வெவ்வேறு திசையிலிருந்தும் ராணுவ வீரர்கள்!

ஜெனரல் தூர நோக்கி கண்ணாடியால் தூர நோக்கினார்!

எதுவும் நடக்கலாம் என கவனித்தார்!

இன்னும் சிறிது தூரம்!

வந்து விடும் தோட்டம்!

ஆனால்-
அவர்கள் பாவம்!

தீரவில்லை-
தாகம்!

(தொடரும்...!!)



5 comments:

  1. அற்புதமான நடையோடு படிப்பவர்களைக் கூடவே பயணிக்க வைக்கும் இரு பதிவு. படம் பார்ப்பது போன்ற ஒரு உணர்வு இருந்தது. தொடரும் போட்ட பின்னர் இன்னமும் கொஞ்சம் என்று எதிர்பார்க்க வைக்கும் நிலையே இப்பதிவின் வெற்றி. எனது வாழ்த்துகளும் நன்றிகளும்.

    ReplyDelete
  2. விரைவில் வர வேண்டும் தோட்டம்...

    ReplyDelete
  3. தோட்டத்தில் தண்ணீர் கிடைத்ததா....

    அடுத்த அடி பலமானதாக இருந்திருக்க வேண்டும்.....

    தொடர்கிறேன்.

    ReplyDelete
  4. வஞ்சகர்களை வலையில் சிக்க வைத்துவிட்டார்கள் போல! அருமை!

    ReplyDelete