Saturday 30 November 2013

நான்கு முனை சந்திப்பு..!(சிறு கதை)

            நான்கு சாலைகளை இணைக்கும் போக்குவரத்து விளக்கு நிற்கும் இடம் அது.மக்கள் நடமாட்டம் மிகுதியாக இருக்கும் இடம்.பலதரப்பட்ட மனிதர்கள் பல்வேறு மன சுமையுடன் செல்லும் இடம் அது. 

          அவ்விடத்தில் ஒரு சுவர் .அதனருகினில் ஓடும் சாக்கடை கால்வாய் நாற்றத்தை தந்தது.அது போதாதென்று மனித கழிவுகளும் கிடந்தது.தெரு நாய்கள், மேலும் கால் நடைகள் படுத்து கிடந்தது. 

          போவோரெல்லாம் விறு விறுவென்று சுவற்றை பார்த்தார்கள்.விகாரமாக பார்த்தார்கள்.வில்லங்கமாகவும் பார்த்தார்கள்.பிஞ்சுகளை "பழுக்க"வைத்தது."பழுத்தவைகளை" "அழுகிட" வைப்பது.எது எப்படியோ மோசாமான காட்சிதான் அது.அப்படியென்ன ..!?அச்சுவற்றில் எல்லோரையும் திரும்பி பார்க்கவைத்தது.  

             "வனஜா இருக்கா தினுசா" -"பாப்பா போட்ட தாழ்பாள்"மேலும் கிளு கிளுப்பான காட்சிகள் .இன்று இப்படம் கடைசி.இதுபோன்ற சுவரொட்டிகள் .எவ்வளவுக்கு முடியுமோ அவ்வளவுக்கு ஆடை குறிப்புகள்.சுவர் முழுக்க அப்பட்டமான காட்சிகள் கொண்ட சுவரொட்டிகள்.

              அதன் ஓரத்தில் "பெண்கள் நாட்டின் கண்கள்"எனும் விளம்பரம்.சில மாடுகள் சுவரோடு உரசி தன் உடல் அரிப்பை தீர்த்தது.ஒரு மாடு மட்டும் "பெண்கள் நாட்டின் கண்கள்"எனும் வாசகம் கொண்ட சுவரொட்டியை நாக்கினால் நக்கி ஈரப்டுத்தியது.கொஞ்சம் இலகுவானவுடன் பல்லினால் கடித்து தின்ன ஆரம்பித்தது.

      தாலிக்கு தங்கம் இலவசம் கொடுத்து .அந்த தாலிக்கு பங்கம் விளைவிக்கும் டாஸ்மாக் தெருவெங்கும் இருப்பது போல.ஊரான் கண்களுக்கு அங்கங்களை வியாபாரமாக்கி விட்டு அது என்ன .!?பெண்கள் நாட்டின் கண்கள் என கடுப்புல அந்த சுவரொட்டியை கடிதிருக்கும்போல.அந்த அறிவுள்ள மாடு.

Friday 29 November 2013

எரியும் வயிறு...!!

குடியால்-
குடிச்சவனுக்கும்!

குடிச்சவனால்-
குடும்பத்திற்கும்!

சமூக அவலத்தால்-
சமூக ஆர்வலர்களுக்கும்!

வயிறு-
எரிகிறது!

இதனைதானோ-
அரசு-
சாதனை என்கிறது..!?

குறைவதால்...!!

சேர்த்த பணம்-
குறைவதால்-
யாரும் மகிழ்வதில்லை!

வருடந்தோறும்-
 குறையும் -
ஆயுளை-
பிறந்த நாள் -என 
கொண்டாடுவதுதான்-
எனக்கும் புரியவில்லை!

Thursday 28 November 2013

தகப்பனின் வலி..!!

கைதட்டல்களில்-
கரைகிறார்-
கணம் (பளு) தூக்கிய-
வீரன்!

கிழவன் -என
ஒதுக்கபடுகிறார்-
குடும்பத்தை-
தாங்கிய-
தகப்பன்!

வீரனின்-
வலியை விட!

தகப்பனின் வலி  -
அளவிட முடியாதது!

Wednesday 27 November 2013

சாலையோர....!!(சிறு கதை)

         "டேய்...!!இங்க பாரேன்..!-அழைத்தான் ஒருவன்.

         "என்னடா.!! இப்படி...!!அதிர்ந்தான் மற்றொருவன்.

        சாலையோரமாக போனவர்கள் எட்டி எட்டி பார்த்து விட்டு அதிசயப்பட்டார்கள்.
கை பேசியை கொண்டு படம்கூட பிடித்து கொண்டனர்.

            அப்படியென்ன!? இவர்கள்  பார்த்தார்கள்.ஒரு பள்ளத்தில் நாய்க்குட்டிகளுடன் தாய் நாய் படுத்து கிடந்தது.குட்டிகளெல்லாம் தாயிடம் பால் குடித்துகொண்டிருந்தது.அக்குட்டிகளுடன் ஒரு பூனை குட்டியும் இணைந்திருந்தது.தாய் நாயும் அக்குட்டியை விரட்டவில்லை.மற்ற குட்டிகளும் பூனைக்குட்டியை  விரட்டவில்லை.

              பசியின் வலியையும் கொடுமையையும் அந்நாய்கள் அறிந்திருந்தது.அதனால் அப்பூனையவும் அனுமதித்திருந்தது.

             சாலையின் ஒரு புறத்தில் இப்படியான காட்சி.மறு புறத்தில் என்ன சப்தம்..!? வாங்க பார்க்கலாம்.இல்லை வேண்டாம்.போக்குவரத்து அதிகமாக இருக்கிறது.இங்கிருந்தே பார்ப்போம்.  

            தாரை தப்பட்டைகள் நொறுங்குகிறது.விசில் சப்தம் காதை கிழிக்கிறது.குத்தாட்டம் இன்னும் கொலை வெறியாட்டம் என பல ஆட்டங்கள்.அந்த பெரிய கட்டிடத்திற்கு முன்னால்.

                ஒருவன் பின் ஒருவனாக கட்டியிருந்த சாரத்தை பிடித்து ஏறினார்கள்.கீழிருந்த கூட்டம் கூச்சலிட்டது.மேலிருந்தவர்கள்  பதிலுக்கு கூச்சலிட்டு கொண்டே பால் குடத்தை அந்த கட் அவுட் மேலூற்றினார்கள்.கூச்சலும் கும்மாளமும் மேலிட்டது.

        அங்கே ஒரு அவலம்.பக்கத்திலிருந்த போக்குவரத்து விளக்கு நிறுத்தத்தில் கையேந்தி கொண்டலைந்தது பலதரப்பட்ட வயிறுகள்........!!

           மிருகத்திடம் மனிதம் தெரிந்தது.மனிதர்களிடம் மிருகங்கள் தெரிகிறது.

சங்கரராமா..!!

கத்திகளும்-
அரிவாள்களும்-
இரை தேடியது!

ரத்தத்தை -
சுவைத்து-
பசியாறியது!

பின்னர்-
புரிந்தது!

தானாக-
ஆயுதங்கள்-
வரவில்லை!
வரவழைக்கப்பட்டது!

ரத்தம் சிந்திய-
ஆத்மாவும்-
நியாயங்களை-
பேசி இருந்தது!

ரத்தக்கறைகளை-
துடைக்க முனைகையில்-
நாற்றங்கள் வந்தது!

முறைகேடுகள்!
முறையற்ற உறவுகள்!-
இப்படியாக தொடர்ந்தது!

தீர்ப்பு வந்தது!

நியாயம் தேடிய-
 கண்கள்-
"திரு திருவென"-
முழிக்கிறது!

சங்கரராமா..!
உயிரற்று போனாய்!

உன் உதிரங்களால்-
உண்மைகளை-
முளைபிக்க செய்தாய்!!

Tuesday 26 November 2013

பத்து லட்சம்....!!

ஆண் பெண்-
நட்பென்பது-
வளர வேண்டிய -
மரமாகும்!

அதனை -
மறுப்பது-
மடத்தனமாகும்!

பிரிந்திருந்தால்-
பிற்போக்கு தனம்!

கட்டுப்பட்டிருந்தால்-
காட்டுமிராண்டி தனம்!

இப்படியாக-
எத்தனையோ-
வியாக்கியானம்!

தற்போதைய-
ஒரு-
சம்பவம்!

பத்து லட்சம்-
கேட்டான்-
ஒருவன்!

மறுத்தால்-
"உறவை"இணையத்தில்- 
வெளியிடுவேன்-
என்றான்!

யார்-
இவன்!?

ஒரு பெண்ணை-
மணந்தவன்!

மனைவியின்-
"அந்தரங்கதிற்குதான்-"
விலை பேசினான்!

கைது-
 செய்யப்பட்டுள்ளான்!

கட்டியவனே-
வில்லனாக-
மாறுகிறான்!

"கண்டவனுடன்"-
சுற்றுவது-
பெண்ணுரிமை என்கிறோம்!

எங்கோ-
நடந்த ஒன்னு-என
அலட்சியம் செய்வோம்!

எங்கோ நடக்கும்-
திருட்டிற்கு-
நாம் ஏன் -
பணத்தை-
வங்கியில் போடுகிறோம்..!?

Monday 25 November 2013

பாரம்....! (சிறு கதை)

             தேசிய நெடுஞ்சாலை .இரு வழி சாலையில் கனரக வாகனங்களும் ரக ரகமான வாகனங்களும் மின்னலை தோற்கடிக்க முன்னூட்டம் காண்பது போல் பயணித்து கொண்டிருந்தது.அதிலொரு வாகனம் பயணத்தை யாருமே இல்லாத இடத்தில் ஒரு ஓரமாக நிறுத்தியது.உள்ளிருந்த இரு நடுத்தர வயதுடைய ஆடவர்கள் கண்ணசைவில் பேசினார்கள்."அதை"வெளியே தள்ளு என்கிற சம்பாசனை.!

              ஒருவன் முதலில் இறங்கினான்.பவ்யமாக "அதை"தாங்களாக இறக்கினான்.ஓரமாக "நிறுத்தி விட்டு"காரினுள் சென்று கதவடைத்தான்."முடிஞ்சதுடா.."என வாகனத்தை விரட்டினார்கள்.

               அவர்கள் விட்டு சென்றது
என்ன!? உபயோக படாத பொருளா..!? இல்லை உயிரற்ற பிணமா!? என்ன "அது"!? விட்டு சென்றவர்கள் யார்..!?இதனை அறிய பின்னோக்கி செல்லனும்.சிலவருடங்கள் பின்னோக்கினால் சிறு கதை ,பெரும் கதையாகிடும்.அதனால் இரண்டு நாட்களுக்கு முன்னால் நடந்ததை பார்ப்போம்.

                      இரண்டு தெருதாண்டி ஒருவன் வேகமாக வந்தான்.அந்த வேக நடையில் ஒரு கோபம் தெரிந்தது.வந்த நடை ஒரு அலுவலகத்தின் மேலாளர் அறையை அடைந்தது. கதவை திறந்து வேகமாக சென்றான்.வேகமாக திறந்த கதவு அசைந்து கொண்டிருந்தது.

   "என்னைய என்ன.!?கேனபயன்னு நினைச்சியா!?இன்னைக்கி தேதியென்ன..!? இன்னும் உன் வீட்டுக்கு "கொண்டு"போகாமல் இருக்கே.!?வந்தவன் கொந்தளித்தான்.கோபத்தை வார்த்தையில் கொப்பளித்தான்.

        "என்னையவும் என்னடா செய்ய சொல்றே..!?சனியனை  சுமந்தமாதிரி இருக்கு ..!?இப்படியே எவ்வளவு நாளைக்கு காலம்தள்ள..!?மேலாளர்.

    "அதுக்கு என்ன செய்ய சொல்றே!நான் தான் கிடைச்சேனா!?-வந்தவன்.

    " பொறு !யோசிப்போம்...!!-மேலாளர்.

    ஆடிய கதவு தள்ளாட்டத்தை நிறுத்தி விட்டது.கதவு சாத்திகொண்டது.பேசியது என்னவென்று தெரியவில்லை.முகபாவனைகளும் உடல் அசைவுகளும் ஒரு திட்டம் தீட்டபடுவது மட்டும் உறுதிபடுத்தியது. 

             "சரி நீங்க சொன்ன மாதிரியே..! முடிச்சிருவோம் ..!!-கதவை திறந்து கொண்ட வந்தவன் சொல்லிவிட்டு சென்றான்.

        அத்திட்டதைதான்  இன்றைக்கு செயல்படுத்தினார்கள்.தாய் இறந்து விட்டார்.பார்வையில்லாத தகப்பனைதான் "அது"வாக நெடுஞ்சாலையில் "தள்ளி"விட்டு சென்றார்கள்.அக்கயவர்கள்.

        குடும்பப்பாரத்தை சுமந்தவரை ஒரு பாரமாக எறிந்து சென்று விட்டார்கள்.

      இது கற்பனை கதையல்ல.நிஜகதையில் கொஞ்சம் கற்பனை .

நன்றி கெட்ட....!!

முதியோர் இல்லங்கள்-
பெருகுவது!

"பிள்ளைகளின்"-
"நன்றி கெட்ட தனத்தை"-
காட்டுகிறது!

Sunday 24 November 2013

வெள்ளை புறா...!!

முத்தம்-
கொடுப்பவரையும்-
பெறுபவரையும்-
பொருத்துதான்-
அர்த்தம் தரும்!

அதுபோலாகவே-
சமாதானத்தின்-
பொருள்கொண்டதுதான்-
வெள்ளை புறாவும்!

ரத்தைகறைக்கொண்ட-
கைகளும்-
புறாவை பறக்கவிடுகிறது!

சமாதானம் எனும்-
சொல்லில்கூட-
ரத்த வாடை -
அடிக்கிறது!

வஞ்சியே..!!

பனிகளினால்-
செய்திட்ட-
பதுமையா-
நீ!?

கொதித்த பாலில் ஒதுங்கிய -
பாலாடையால் செய்த -
தேகம் கொண்டவளா!?-
நீ!

வஞ்சி-
உன்னை வர்ணிக்க-
வார்த்தைகளை-
தேடுகிறேன்!

என் வசம்-
உன் "வாசம்"-
வராது-என்பது
தெரியாமல்!

நிலவினை-
பார்த்திட துடிக்கும்-
சூரியனை போல்!




Friday 22 November 2013

அர்த்த ராத்திரி...!(சிறு கதை)

     "சுஜி! சுஜி! எழும்பலையா.!?என அறைத்தோழி எழுப்பினாள்.எழுந்த சுஜி கைபேசியை பார்த்தாள்.மீண்டும் போர்வையால் முகத்தை மூடிக்கொண்டு படுக்க முயற்சித்தாள்.

       "என்னப்பா..!!கொஞ்ச நாளாவே ரொம்ப "டல்லாவே " இருக்கியே என்ன..!?என அறைத்தோழி கேட்டாள்.

       "ஒன்னும் இல்லை !எப்பவும் போலதானே இருக்கேன்."!கண்களை மூடிக்கொண்டே பதிலுரைத்தாள்.
  
    "இல்லையே !ஒரு மாசத்துக்கு முன்னாலே நான் அவசரமா ஊருக்கு போயிட்டு வந்தேனே .அப்ப இருந்தே பாக்குறேன் ஒரு "மாதிரியா"இருக்கியே! எதையும் பார்த்து பயந்துட்டியா...!!?என கனிவுடன் கேட்டாள்.

    "அதெல்லாம் இல்லை..!!-என சுஜி சொன்னாள்.

     " அப்ப காலேஜுக்கு இன்னைக்கும் வரலையா..!? இது அறைத்தோழி.

      சுஜியிடமிருந்து பதிலில்லை அந்த மௌனத்தில் வரமாட்டேன் எனும் அர்த்தம் புதைந்திருந்தது.

     "சரிப்பா..!! நான் கிளம்புறேன் -என ஆடைகளை சரிசெய்துகொண்டு காலேஜுக்கு தோழி கிளம்பி விட்டாள்.

        கதவை சாத்தி விட்டு நடந்தால் அவளது நடை சப்தம் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்தது.உடனே சுஜி எழுந்தால் கைபேசியை எடுத்தாள் ஒரு எண்ணுக்கு அழைத்தாள்.

"ஒரு பாதி கதவு நீயடி ....!!"என பாடி முடிந்தது.எதிர் முனையில் பதிலில்லை.திரும்ப திரும்ப முயற்சிக்கிறாள்.பதிலில்லை.

          சில மணிகள் கழிந்தது.மீண்டும் மீண்டும் "அழைப்புகள் "தொடர்ந்தது.ம்ஹும் பதிலில்லை.

        வயிற்றை தடவி பார்த்தாள்.வெட்கமும் இயலாமையும் "பலியானதும்"எண்ணியவுடன், ஓ!வென அழுதாள்.அறைத்தோழி அவசரமாக ஊருக்கு சென்றபோது அந்த அர்த்த ராத்திரியை எண்ணி பார்த்தாள்.குழுங்கி குழுங்கி அழுதாள்.

     ஆம் அன்றிரவு வேட்டை நாயொன்று அவளது கற்பில் வேட்டையை நடத்திவிட்டது.அந்நாய் காதல் எனும் முகமூடியுடன் வந்திருந்தது.சமயம் பார்த்து வேட்டையை முடித்தது."அடையாளத்தையும்"அவளுக்குள் விதைத்து சென்றுவிட்டது.

         அவள் அழுது அழுது கைபேசியில் அழைக்கிறாள்.பதில்தான் இல்லையானதும்,கண்ணீரில் நனைகிறாள்......!!

மின்னலா!? மின்சாரமா!?

வந்தாய்-
மறைந்தாய்-
அதிர்வை தந்தாய்!

என்னவளே!
நீ!
மின்னலா!?
மின்சாரமா!?

நம் -
தமிழகத்தில்-
மின்னலை விட-
மின்சாரமே அபூர்வம்!

எனக்கும்-
உன்பார்வைஎன்பதும்-
அதுபோலாகும்!

Thursday 21 November 2013

கணக்கு..!

நல்லாட்சி வருமென்று-
வாக்களித்தோம்!

மாறாத நிலை கண்டு-
விக்கி தவிக்கிறோம்!

பணத்திற்கு-
பாதுகாப்பு -என
வங்கியில்-
வைத்தார்கள்!

வங்கிக்குள்ளேயே-
"கணக்கு"முடிக்கபடுகிறார்கள்!"

Wednesday 20 November 2013

"காட்சிகள் ". (சிறு கதை)

             காட்சி -1
              -------------
               பச்சை பசேலென இருக்கும் மலைகளுக்குள் சல சலவென ஓடும் அருவியொன்று.அதனை சுற்றி சப்தமிடும்  பறவைகள் கூட்டம் சிறகடித்து பறக்கும் சப்தம்.இயற்கை அழகு கண்ணுக்கு குளிர்ச்சியை தந்தது.

                அழகு தேவதை பெண்ணொருத்தி அருவியை நோக்கி  வருகிறாள். வந்தவள் தலையில் கட்டியிருந்த துவாலையை தூக்கி எறிந்தாள். அதனை தொடர்ந்து தனது மேலங்கியை அவிழ்க்கிறாள் . மேலும் மார்பிலிருந்து முழங்கால்வரை மறைத்திருந்த துண்டையும் துச்சமென களைகிறாள்.இரண்டு கையளவு துணிகளை ஆடையென அணிந்திருந்தாள்.

              ஒரே குதி அருவினுள் நீந்துகிறாள் சிரிக்கிறாள் சோப்பு தேய்க்கிறாள் தேய்த்துகொண்டே இருக்கிறாள் .அழுக்கில்லாத உடம்பில் அலுக்காமல் சோப்பு தேய்க்கிறாள்.

         பிறகு செல்லகொஞ்சலுடன் சொல்கிறாள் ."என் மேனியின் அழகிற்கு இந்த "டாப்ஸ்"சோப்பே காரணம்....!! என்கிறாள்.

            காட்சி-2
            ---------------
          
                    மழை பெய்ந்து ஓய்ந்திருந்தது.சாலையின் குழிகளிருந்த தண்ணீரை வைத்து அறியமுடிந்தது.அந்த ஈரசாலையில் 
வருகிறாள் சுடுதார் அணிந்து ஒரு பூஞ்சோலை. 

                அவளிடம் ஒரு இளைஞன் தன்காதலை ஒரு பூவின் மூலம் தெரியபடுத்துகிறான்.அவள் மறுக்கிறாள்.கடிதம் கொடுக்கிறான் அதில் என் உயிரே உனக்கென வாசகம் கொண்ட கடிதம் அது.அப்போதும் மறுக்கிறாள்.இன்னொரு நாள் ஒரு பைக்கில் வந்து பார்க்கவே செய்கிறான்.அவள் விறு விறுவென பைக்கில் ஏறிக்கொள்கிறாள்.

              பைக் பறக்கிறது.உங்களுடன் என்றும் "காசாகூ"பைக் இருக்கவேண்டும் என சொல்லபடுகிறது.

                காட்சி-3
                 -----------
           விடுமுறைதின சிறப்பு நிகழ்ச்சி "பெண்களின் கண்ணியம் காக்கபடனும்".இதனை உங்களுக்கு வழங்குவது."காசாகூ"நிறுவனத்தாரும் "டாப்ஸ்"நிறுவனத்தாரும்.சொல்லி ஒளிபரப்புகிறது தொலைக்காட்சி....

       தலையில் மண்ணள்ளி போட்டுவிட்டு குளிக்க தண்ணீர் கொடுப்பது போலாகவே உள்ளது.இது போன்ற காட்சிகள்...

Tuesday 19 November 2013

கன்று குட்டி.(சிறு கதை)

         "ம்ம்ம்மாஆ ...ம்ம்மா..."என கத்தி கதறியது பசு மாடொன்று.அதன் கதறலில் ஒரு காரணமும் இருந்தது."தனக்குள்"இருந்த மற்றொரு உயிரை வெளியில் தள்ள வேண்டிருந்தது.பசுவின் கண்களில் வலியும் அவஸ்தையும் கலந்து இருந்தது.உலகின் எந்த உயிரும் பிரசவம் என்பது சவமாவதின் வலியை தருவது. 

                    மாட்டின் சொந்தகாரரும் மற்ற சிலரும் பசுவோடு போராடிகொண்டிருந்தார்கள்.குட்டி ஈன்று விட உதவிகொண்டிருந்தார்கள்."ஹே"என சின்ன பிள்ளைகளும் விளையாடி கொண்டிருந்தார்கள்.பெரியவர்கள் அச்சிறுவர்களை விரட்டினார்கள்.

                    மீண்டும் பசுவின் அலறல் தொடங்கியது.வெளியில் தள்ளியது.கண்டொன்று பிறந்தது.
அக்கன்று "கிடாரி கன்று"(பெண் கன்று) பசுவின் உரிமைக்காரருக்கோ மட்டற்ற மகிழ்ச்சி .அதன் வாயிலாக குட்டிகள் விருத்தி ஆகுமென்று.

                   எல்லோரும் சந்தோசமாக இருக்கும்போது அவ்வீட்டினுள் ஒரு அறையில் நடுத்தர வயது பெண்ணொருத்தி தலையணையில் தலை புதைத்து குப்புற படுத்து கிடந்தாள்.

              "அடியே ...!படுத்தே கிடந்தா என்ன அர்த்தம் எந்திரிச்சி,வேலை வெட்டியா பாரு..!"ஊரு உலகத்துல இல்லாததா .!?" என சொல்லிக்கொண்டே டிங் டிங் என வெத்தலையை இடித்துகொண்டிருந்தாள் கிழவி ஒருத்தி.

          மேலும் தொடர்ந்தாள்-"முதல்ல நீ! பெத்த இரண்டும் பொட்டையா பொறந்திரிச்சி.!இதுவும் பொம்பள புள்ளையா இருக்கும்னு "கரைச்சிட்டு " வந்தாச்சி ..! இதுக்கு போய் படுத்து கிடக்குறியே விவஸ்த கெட்டவ..!!என பொருமிக்கொண்டே வெத்தலையை இடித்தாள்.
     
            இடிபட்டது வெத்தலை மட்டுமில்லை.மனித சமூகத்தின் மனிதமும்தான்.....!!!

Monday 18 November 2013

சாப்பாடு பொட்டலம்...!!(சிறு கதை)

           சூரியன் கோபத்தை வெப்பமாக கக்கியது.தார்சாலை அதன் பங்கிற்கு அனலை துப்பியது.இதில் பெட்டிக்கடை வானொலியொன்று "தீபிடிக்க தீபிடிக்க முத்தம் கொடுடா .."பாடலை பாடிக்கொண்டு கடுப்பை கிளப்பிகொண்டிருந்தது.
அந்த மதிய வேளையில்.. 

                  ஜனங்கள் அவரவர் வேலையில் மூழ்கி கொண்டு,வரவும்போவதுமாக பேருந்து நிலையம் இருந்தது.

                ஒரு உணவகத்திலிருந்து வெள்ளையும் சொள்ளையுமாக மூன்று பேர்கள் வந்தார்கள்.அவர்களது நடையில் ஒரு "கெத்து"தெரிந்தது.

             அம்மூவர் படை தேநீர் கடையை வந்தடைந்தது.
"அய்யா..! பசிக்குது ஏதாவது தர்மம் பண்ணுங்கய்யா..!!"அவர்களிடம் யாசித்தது ஒரு வயாதானவர். பரட்டைத்தலையும் குழிவிழுந்த கண்களும் அவரது ஏழ்மையை சொன்னது .பரிதாபத்தை உண்டு பண்ணியது.
            
       மூவரில் ஒருத்தன் இன்னொருவனுக்கு கட்டைளையிட்டான் ."அங்கே போய் ஒரு சாப்பாடு பார்சல் வாங்கி இவருக்கு கொடு " என்றான்.

      நீங்க  நல்லா இருப்பீங்கய்யா....!! என நன்றி சொன்னார்.
             
           அதை கண்டுக்காமல் கடைக்குள் பிரவேசித்தார்கள்.கடையிலுள்ள வாடிக்கையாளர்களும் முதலாளியும் பவ்யமாக பணிந்தார்கள்.

              "என்னடா..!!அலைய விடுறியே என்ன..!?தேடி வரணுமோ..ம..."!வார்த்தைகள் தடித்தன வந்தவர்களிடமிருந்து.

      "இல்லண்ணே..!!கொடுக்க வச்சிருந்த காசு பாப்பாவுக்கு உடம்பு முடியாம போச்சி ...அதுல செலவாயிருச்சு அண்ணே..!!எப்படியும் இரண்டு நாள்ல தந்துறேன்..!!என கெஞ்சினார் கடை முதலாளி.
           
        "அதெல்லாம் முடியாது சாயங்காலம் வருவேன்.கொடுத்துரு பணத்தை இல்லையினா மரியாதை கெட்டுரும்..!!மரியாதையை கெடுத்துட்டு மறுபடியும் கெட என்ன இருக்கு ஆனாலும் எச்சரித்து விட்டு போனான்.

                 அதேநேரத்தில் சாப்பாடு வாங்கபோனவன் பார்சலை முதியவரிடம் கொடுத்து விட்டு அவனோட சென்றான்.ஆம் அவன் ஒரு கந்துவட்டிக்காரன்.வசூலுக்கு பக்கத்துக்கு ஏரியாவிற்கு சென்றான்.தன் படையுடன்.
       
          சில நாழிகைகள் கழித்து அந்த மூவரும் அத்தேநீர் கடையை கடந்து சென்றார்கள்.அப்போது இரு நாய்கள் ஒரு உணவு பொட்டலத்தை கடித்து குதறி தரையில் சிந்தி கொண்டிருந்தது .அப்பெரியவரும் "பாவப்பட்ட"பணத்தால் வாங்கப்பட்ட சாப்பாடை சாப்பிடவில்லை.நாய்களும் சிந்தியதேயொழிய சாப்பிடவில்லை.
    
         ஆனால் அந்த கந்து வட்டிக்காரன் போடும் "எச்சிதுண்டுகளுக்கு "ஆசைப்பட்டு இரு பிச்சைகார நாய்கள் சென்றது கந்து வட்டிகாரனுக்கு பக்கபலமாக....!!

சிமிட்டி சிமிட்டி...!!

அழகே!
கண்களை-
சிமிட்டி சிமிட்டி-
பேசுவதில் -
உனக்கொன்று பாதிப்பில்லை!

கொஞ்சம் புரிந்துகொள்-
மின்னல் தாக்குதலை-
என் உடல் தாங்குமா...!?

Sunday 17 November 2013

என்னடா செல்லம்..!!(சிறு கதை)

              "என்னடா செல்லம் .! வந்துகொண்டுதான் இருக்கேன்"! "சாரிமா கொஞ்சம் லேட்டாச்சி..!!உரையாடல் நடத்திக்கொண்டே விரைவாக தனது பைக்கை செலுத்தினான் இளைஞன் அவன்.

           இவன் பார்க்கபோவது தனது தொலைபேசியில் தவறுதலாக வந்த அழைப்பில் எண்ணங்கள் சிறகடிக்க கைபேசியும் திரும்ப திரும்ப அடிக்க மௌனம் உடைந்து வார்த்தைகள் வளர்ந்து பலமுறை சந்திக்க முனைந்து இன்றுதான் அதற்கான வாய்ப்பு கிடைத்தது..!

         அவள் சொன்ன இடம் வந்து விட்டது.அண்ணா பூங்கா.உள்ளுக்குள் சிறுவர்கள் விளையாடிகொண்டிருந்தார்கள்.பெற்றோர்கள் அவர்களை பின்தொடர்ந்தார்கள்.வயதானவர்கள் சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்துகொண்டு "இழந்தவைகளை"எண்ணி கொண்டிருந்தார்கள்.மாலை நேரம் 6.30 என்பதால் கொஞ்சம் குளுமையாக இருந்தது.மேகங்கள் வட்டமிட்டு இருந்ததால் குளிர்காற்று உடலை சிலிர்க்க செய்தது.

          இவனது பார்வை பாவையை தேடியது.தேடல் மாமரத்தின் கீழ் நிலைக்குத்தியது.ஆம் மாங்காய்கள் அங்கு சிதறிக்கிடந்தன.மாங்கனியைபோல அவள் நின்று கொண்டிருந்தாள்.
நடுக்கத்துடனும் நிறைய ஆசைகளுடனும் அவளை நெருங்கினான்.

         அறிமுக உரையாடல்கள் நடந்தன.அவ்வுரையாடல் முடிந்ததும்  வார்த்தை தடை பட்டன.
      கண்கள் காதல் பேசின .நேரம் கடந்து கொண்டிருந்தன.

"என்னை உனக்கு பிடிச்சிருக்கா ..!?அவன் கேட்டான்.

அவள் மௌனித்தாள்.

""மணி  ஒன்பதரையாச்சி கிளம்புங்க...!! இது பூங்கா காவலாளி.

"கிளம்பிறோம் சார்.! என சொல்லிக்கொண்டே அவரது கையில் நூறு ரூபாயை திணித்தான்.

"சரி சரி! என சொல்லிகிட்டே அவர் கிளம்பிட்டார்.

அவர் போன கொஞ்ச நேரத்தில் அவனுக்கொரு இன்ப அதிர்ச்சி .
அவள் அவன் எதிர்பாராதபோது முத்தமிட்டாள்.

       இவன் "வாங்கியதை" கொடுக்க முயற்சித்தான்.அவள் ஓட்டம் பிடித்தாள்.இவன் துரத்தினான்.நேரம் பத்துமணிக்கு மேல் ஆனதால் கூட்டம் முழுவதுமாக குறைந்திருந்தது.இவனுக்கு சந்தோசமாக இருந்தது.
    
          ஓடியவள் மூச்சு வாங்கியவளாக ஒரு மரத்தின் கீழ் நின்றாள்.நல்ல இருளாக இருந்தது.இவன் ஆசை அலைமோத நெருங்கி கொண்டிருந்தான்.அவள் செல்ல சிரிப்புடன் "வேணாம் !வேணாம்"-
என்றாள்.

              படார் என மூக்கில் விழுந்தது .முத்தமல்ல அவனது முகத்தில் முரட்டு குத்து.சராமரியாக கண்கள் கன்னங்கள் மாறி மாறி விழுந்தது அடிகள்.நிலை தடுமாறினான் .அரைமயக்கதிற்கு உள்ளானான்.

              அவனது பணம், கை பேசி பைக் சாவி, தங்க சங்கிலி எல்லாம் கையாடபட்டது அடிதவர்களால் .அவர்களோடு உதவி புரிந்தாள் "மாங்கனி".இவன் முனங்கிக்கொண்டே ஏமாற்றாட்டதை உணர்ந்தான்.

                 இவனது பல்சர் கிளம்பி போகும் சப்தம் இவனுக்கு கேட்டது.இவனது முனங்கல் சப்தம்
யாருக்கும் கேட்கவில்ல்லை....!!
           

கவலையின்போது...!

குழம்பிய மனதில்-
தெளிவான சிந்தனை-
பிறக்காது!

கவலையின்போது-
கலங்கினோமேயானால்-
திறந்திருக்கும்-
வாயிலும் தெரியாது!

Saturday 16 November 2013

விழி எனும் ஆயுதம்...!!

அழகு விழியாளே!

"வேல் விழியாள்"-
"வாள் விழியாள்"-என
கவி எழுதியவர்களை-
நீ!
தாக்கினால்-
அது நியாயம்!

ஓரமாக போகும்-
என்னை -
உன் விழியால்-
சிதைக்க முனைவது-
அநியாயம்!

Friday 15 November 2013

நன்றி! நன்றி!! (1000 மாவது கவிதை)

முளையிடும்-
கிளையினை-
கால்நடைகள்-
கடித்திடாமல்-
தடுக்கும்-
வேலிகள்!

விரக்தியின்போது-
அதன் சாயலைக்கூட-
துடைத்திடும்-
குழந்தையின்-
பிஞ்சுவிரல்கள்!

அடைமழை-
நின்றபின்பும்-
இலைகளின்-
தங்கி இருக்கும்-
மழை துளிகள்!

பிரிந்து-
" சென்றபின்னும்"-
இனிமை தரும்-
நினைவுகள்!

இதுபோலாகவே!
என் எழுத்தினை-
இவ்வளவு தூரம்-
பயணிக்க வைத்தீர்கள் !

கருத்துகளையும்-
ஆலோசனைகளையும்-
தந்தீர்கள்!

உங்களனைவருக்கும்-
மனமுவந்த-
நன்றிகள்!

இத்தனையும்-
எனக்கு !

அமைத்தளித்த-
இறைவனுக்கு! ?

காலமெல்லாம்-
கண்ணீர் வடித்தாலும்-
கண்ணின் ஒளிக்கு-
அது ஈடாகாது!

இதில்-
எண்ணற்றவற்றை-
அள்ளி சொரிந்தவனே-
உனக்கு -
நன்றி செலுத்திட-
வழியேது!?

இறைவா!
உன்னையே -
நான் வணங்குகிறேன்!

உனக்கு மட்டுமே-
வணக்கத்தை-
உரித்தாக்குகிறேன்!

//இனி கதைகளும் எழுதிட முயற்சிக்கிறேன்.இத்தருணத்தில் சொல்லி கொள்கிறேன்///






Thursday 14 November 2013

விலைமதிப்பானது...!!


அன்று-
தங்கம்!
வைரம்!

இன்று-
வெங்காயம்!

"ஆற" விடாமல்....!!

ஆரத்தழுவி-
செல்லும் -
இளம் தென்றலும்!

"ஆற" விடாமல்-
கொதிப்பாக தருகிறது-
அவளது-
நினைவை!

என்ன செய்தோம்...!!?

நடித்தால் -
நாட்டை -
கொடுக்கிறோம்!

மட்டையால் -(கிரிகெட் )
அடித்தாலும்-
நாட்டின் கௌரவமெல்லாம்-
கொடுக்கிறோம்!

நாட்டுக்காக  மடிந்த-
சுதந்திர போராளிகளின்-
கனவுகளை நிறைவேற்ற-
நாம் என்ன செய்தோம்...!!??



நடைபாதை தேவதை...!!

அழகிதான்-
அவள்!

நடை பாதையில்-
செல்லும்-
அவள்!

என்ன -
நேர்ந்ததோ-
அவளுக்கு!?

காரணம்தான்-
தெரிய வாய்ப்பில்லை-
எனக்கு!

குளிக்க செல்பவர்கள்-
மலத்தை அள்ளி -
பூசி கொள்வதை போல்!

நாகரீகம் என்பதாக-
எண்ணி கொண்டு-
அநாகரீகத்தை-
பூசி இருந்தாள்...!!

Wednesday 13 November 2013

பாட்னா..!

நடந்தது-
பாட்னாவில்-
குண்டு வெடிப்பு!

எதிரொலி கேட்டது-
குமரியில்-
பேருந்து உடைப்பு!

ஊடகங்களும்-
ஒரு சமூகத்தையே-
முன் நிறுத்தி வைப்பு!

தற்போது-
கோபால் குமார்-
விகாஸ் குமார்-
சிறையிலடைப்பு!

அனைத்து-
ஊடகங்களும்-
ஏன் -
மௌனிப்பு!?

ஓ!
பத்திரிகை நண்பர்களே!
மையை கொண்டு-
எழுதுவதை விட!

கொஞ்சம்-
மனசாட்சியை தொட்டு-
எழுதுங்கள்!

திரு.கமல் அவர்களே...!!

மிதக்கிறது-
மீனவர்கள்-
சடலங்கள்!

கயிறுகள்-
காவு கொள்கிறது-
விவசாயிகள்-
கழுத்துக்கள்!

"தள்ளாடுது"-
தமிழ்நாட்டின்-
தன் மானங்கள்!

இவைகளுக்கு-
ஓரணியில் போராடவேண்டியது-
மக்கள்!

ஆனால்-
மறந்தார்கள்!

மறுக்கிறார்கள்!

ஆனால்-
விஸ்வரூப-
விவகாரத்திற்கு!

கமல் விட்ட-
ஒரு சொட்டு-
கண்ணீருக்கு!

தமிழ்நாடே-
தகித்தது!

அரசியல் -
ஆதாயத்திற்காக-
நரிகள் -
நடித்தது!

"காவிகளும்"-
கருத்துரிமையை பற்றி-
பேசியது!

இவையெல்லாம்-
கமல் நடிப்பையே-
மிஞ்சியது!

எங்கே-
கருத்து சுதந்திரம் -
பேசிய-
சுந்தர புருஷர்கள்!

யோக்கியர்கள்..!!!!!!?

இன்று-
சுய சரிதை -
எழுதுகிறார்-
சரிகா அவர்கள்!

அதனை-
எதிர்கிறார்-
கமல் அவர்கள்!

கமல் அவர்களே!
ஊரான் தோலை-
உரிப்பது-
கருத்து சுதந்திரம்!

உங்கள்-
தோலை (கதை) உரிக்கும்போது-
வலிக்கும்!

இப்படிதானே-
இருக்கும்!

மற்றவர்களுக்கும்!!!


கை நாட்டு!

உரிமையாளருக்கே-
முழு உரிமையான-
கையெழுத்து !

Tuesday 12 November 2013

மனநிலை...!!

உடலுக்கே-
உயிர் -
சொந்தமில்லை!

உலகே-
தனக்கென எண்ணுவது-
மனித மனநிலை!

பொறி...!!

இரைக்கு-
ஆசைப்பட்டு-
பொறிக்குள் மாட்டிடும்-
எலியை போல்!

நாகரீகம் எனும்-
இரையை தேடி-
அநாகரீகம் எனும்-
பொறிக்குள்-
சிக்கிகொள்கிறார்கள்!

மரண சிந்தனை....!!

மனிதர்களை-
நாற்றமெடுக்க வைக்கும்-
குப்பைகள்!

தனக்குள்-
சேர்க்கும்-
தீய குணங்கள்!

அக்குணங்களை-
எரிப்பதுதான்-
மரண சிந்தனைகள்!

Monday 11 November 2013

கண்ணாடி!

உன்னை-
அடிக்கடி-
காண விரும்பும்-
கண்ணாடி!

காற்றை-
தூது விட்டு-
உன் கேசத்தை-
கலைத்திட-
சொல்லுதடி!

கலை(ளை) சேவை....!!

ஒவ்வொரு-
ஆடை இழப்பதற்கு!

வெவ்வேறு-
கட்டணங்கள்-
நிர்ணயம்-
இருக்கு!

ஆம்-
நம்புங்கள்!

இவர்கள்-
கலை(ளை) சேவையாற்ற-
வந்தவர்கள்!

கண்ணாமூச்சி...!!

வாழ்கையும்-
ஒரு-
"கண்ணாமூச்சிதான்" !

கண்களை-
கட்டாமலே-
"பலவற்றை"-
தேட வேண்டியுள்ளது!

Sunday 10 November 2013

படங்கள் தடைபட்டால்....!!

கோடி கோடியாக-
பணம் போட்டவங்க-
"இருக்காங்க"!

கோடி கோடியாக-
பணம் வாங்கினவங்க-
"இருக்காங்க"!

தெரு கோடியில-
கிடக்குறவங்க-
தற்கொலை செய்து-
சாவுறாங்க!

ரசிகனாம்-
இவனுங்க!

முட்டா(ள்) பயலுங்க!

மடமை என்றது...!!

அன்று-
மானுடம்-
"மறைக்காமல்-"
வாழ்ந்ததை-
மடமை என்றோம்!

இன்று-
"திறந்துகொண்டு"-
அலைவது-
நாகரீகம்-
என்கிறோம்!

Saturday 9 November 2013

பேரழகுதான்!

ஆடை குறைப்புதான்-
அழகென்றால்..!!?

ஒவ்வொரு-
விலங்குகளும்-
பேரழகுதான்!

Friday 8 November 2013

அறியாத நிலை....!!

இரவு நேரத்தில்-
வாகன விளக்கின் -
வெளிச்சத்தில்!

தன்னை மறந்து-
நிற்கும்-
பிராணிகள்-
நடு சாலையில்!

தன்மேல்-
ஏறிடவருகிறது-
என்பதனை-
அறியாத நிலையில்!

என்னவளே!
அந்நிலையே-
எந்நிலை!


Thursday 7 November 2013

மணியனும்-வை.கோ வும்.!

இலங்கையில்-
காமன் வெல்த் மாநாடு!

தமிழகத்தில்-
ஆர்பாட்டங்கள்-
உணர்வுகளின்-
வெளிபாடு!

இவ்விவகாரத்தில்-
காங்கிரசும் -பா ஜ க வும்-
ஒரே நிலைப்பாடு!

இதில்-
காங்கிரசிற்கு-
மாற்றாக பா ஜ வை-
மணியனும்-வை.கோ வும் சொல்வது-
உச்சபட்ச வெட்க கேடு!

நேசனல் விமென்ஸ் ப்ரண்ட்! (NWF)

நேசனல் விமென்ஸ் சகோதரிகளே!

வாழ்வே -
ஒரு -
போராட்டம்!

போராட்டத்தில்தான்-
ஆரம்பிக்கிறது-
சூரிய உதயம்!

போராட்டம் எனும்-
பெயரில்-
கூட்டத்தோடு-
சிலர்-
கூச்சலிடுகிறார்கள்!

எதிர்க்க கூடிய-
விஷயங்களிலோ-
மூச்சற்று கிடக்கிறார்கள்!

இலைகள் -
வாடுவதை எண்ணி-
கதறுகிறார்கள்!

ஆணி வேரில்-
ஊற்றப்படும்-
எரி அமிலத்தை-
காணாததுபோல்-
இருக்கிறார்கள்!

கண்ணில் தூசியால்-
சிலர் கலங்குகிறார்கள்!

கடப்பாரை-
எதிர் வருவதை பற்றி-
கவலை கொள்ளாதிருக்கிறார்கள்!

பாசாங்கான-
போராட்டங்களும்-
சிலர்-
நடத்துகிறார்கள்!

"பச்சாதாபம்" படக்கூடிய-
மக்களுக்காக-
நேசனல் விமென்ஸ் -
களம் காண்கிறீர்கள்!

தேசமே-
அலறியது-
"பேருந்து"-
விசயத்திற்கு!

ஆனால்-
நிசப்தம் ஆனது-
டெல்லி சிறுமி-
விசயத்திற்கு!

தமிழ்நாடுக்கூட-
ஓங்கி பேச மறந்தது-
வினோதினி-
"அமில "வீச்சிற்கு!

நீங்கள்-
குரல் கொடுத்தீர்கள்-
அந்த அப்பாவிகளுக்கு!

ஆடை குறைப்பு-
பெண்ணுரிமை-என
சொல்கிறார்கள்-
போலி பெண்ணியங்கள்!

ஆபாசங்களை-
எதிர்த்து-
நீங்கள்-
செயல்படுகிறீர்கள்!

வரதட்சணை-
வாங்குவதும்-
கொடுப்பதும்-
பெருமையாக -
எண்ணுகிறது-
இவ்வுலகம்!

வரதட்சணை-
ஒரு அவமானம்-
கேவலம்-என்பதே
உங்களது-
வாதம்!

இசை பிரியாவின்-
கதறல்-
கொடூரத்தின்-
உச்ச கட்டம்!

அதனை -
உணர்த்திட-
நடக்கவிருக்கிறது-
உங்களது-
ஆர்பாட்டம்!

உங்கள் பணி-
சிறக்கட்டும்!

பெண்களுக்கெதிரான-
பிணி-
நீங்கட்டும்!

// தகவல்கள் தந்து உதவிய சகோதரி ஆலியா அவர்களுக்கு மிக்க நன்றி//





இசை ப்ரியா!

வஞ்சகம் இல்லாமல்-
வந்து-
விழுந்தது-
குண்டுகள்!

இரக்கமின்றி-
எரித்தது-
ஏவுகணைகள்!

சீறி சென்றது-
துப்பாக்கி-
தோட்டாக்கள்!

எங்கும்-
ரத்தக்களம்!

எங்கெங்கும்-
மரண ஓலம்!

முட்கள் குதிடாத-
கால்கள்-
உண்டோ!?

சடலத்தை மிதித்து -
நடக்காத கால்களும்-
"அன்று"-
உண்டோ!?

சிதறி கிடந்த-
சதை துண்டுகள்!

அதனுடன்-
ஒட்டி இருந்த-
எலும்புகள்!

ரத்தமாக-
காட்சி தந்த-
தண்ணீர் தடாகங்கள்!

ரத்த சகதியான-
நிலங்கள்!

எங்கும்-
முக்கல்கள் -
முணங்கல்கள்!

அவர்களின்மேல் -
ஏறிய-
பீரங்கி வாகனங்கள்!

என் நிலை-
இவைகளுக்கும்-
மேலாக!

கிடந்தேன்-
கண்ணீர் கடலில்-
தத்தளித்தவளாக!

மாட்டினேன்-
ஓநாய்களிடம்-
வெள்ளாடாக!

துடித்தேன்-
பாலையில்-
விழுந்த-
மீனாக!

தவித்தேன்-
மானம் இழந்தும் -
மரிக்காத-
கவரி மானாக!

என் கதறல்கள்-
இருந்திருக்கிறது-
காம வெறி நாய்களுக்கு-
கிளர்ச்சி ஊட்டுபவைகளாக!

மானம்-
மறைக்க-
ஆடைகள்-
தைத்தோம்!

ஆடைகளை-
காக்கவே-
ஆயுதங்கள்-
தரித்தோம்!

என்னை-
எச்சை படுத்தியது-
வெறி நாய்கள்!

எச்சையிலும்-
இச்சை கொண்டது-
சொறி நாய்கள்!

என் கதறல்கள்-
வேட்டை நாய்களின்-
கொக்கரிப்பில்-
கரைந்தது!

உள் நாட்டு விவகாரம் என-
உலகமும்-
மௌனித்தது!

மூச்சை நிறுத்தியவர்கள்-
மூக்கில் பஞ்சை-
வைக்கிறார்கள்!

"எனக்கென்ன "!?-என
வாழ்பவர்கள் -
காதில் பஞ்சை-
வைத்து கொள்கிறார்கள்!

ஓ!
உறவுகளே!
துடித்த-
 என் இதயம்-
துடிப்பதை-
நிறுத்தி விட்டது!

எனக்கான-
நிலைக்கு-
உங்கள் இதயங்கள்-
துடிக்க வேண்டியுள்ளது!