Wednesday 31 July 2013

இஸ்லாமும்-நபிகள் நாயகமும்!(28)

"பகிரங்க அழைப்பிற்கு"-
பின் !

பயங்கொண்டது-
பதறுகள் கூட்டம்-
சத்தியத்திற்கு முன்!

"வளர்வதை-"
வெட்ட-
நினைத்தார்கள்!

அதற்காக-
புத்தியை கத்தியாக-
தீட்டினார்கள்!

வரவிருக்கும்-
புனித யாத்ரீகர்கள்!

அவர்களிடம்-
சேர்ந்திட கூடாது-
சத்திய பிரசாரங்கள்"!

பரப்பவேண்டும்-
முஹம்மது (ஸல்)-அவர்கள்மீது
அவதூறுகள்!

சூட்டிடவேண்டும்-
"கெட்டபெயர்கள்"!

அவைகள்!
அவர்-
ஒரு ஜோசியர்!
பைத்தியகாரர்!

கவிஞர் !
சூனியக்காரர்!

சூனியக்காரர்-
தேர்ந்தெடுத்த-
பெயர்!

வலீத்-இது
தேர்ந்தெடுத்தவனின்-
பெயர்!

எதிரிகள்-
பொய் பிரசாரம்-
செய்தார்கள்!

முஹம்மது(ஸல்)-அவர்கள்
"உண்மையை கொண்டு-"
பிரச்சாரம் செய்தார்கள்!

ஆனால்-
வந்து சென்ற-
யாத்ரீகர்கள்!

"சத்தியத்தை"-
சுமந்து -
சென்றார்கள்!

இன்னொன்றுக்கு-
தயாரானார்கள்!
எதிரிகள்!

முஹம்மது (ஸல்)-அவர்களின்
பிரசாரத்தின்போது!

கூச்சலிடுவது!
எள்ளி நகையாடுவது!

சந்தேகத்தை கிளப்புவது!
மக்களை குழப்புவது!

இதிலும்-
தொடர்ந்தது-
"மாற்றமே"!

எதிரிகளுக்கு-
ஏமாற்றமே!

எதிரிகளின்-
மறு முடிவு!

துன்புறுத்திட-
துணிவு!

மின்னிடும்-
விண்மீன்களையும்!
வீசும் தென்றலையும்!

மறைக்க முடியுமா!?
அடைக்க முடியுமா!?

(தொடரும்....)



Tuesday 30 July 2013

இஸ்லாமும்-நபிகள் நாயகமும்!(27)

மூன்றாண்டுகள்-
"ரகசியமாக அழைப்பு"-
நடந்தது!

அப்போதைக்கு-
வழிபாடாக-
தொழுகை மட்டுமே-
இருந்தது!

மிஃராஜ் எனும்-
விண்வெளி பயணத்திற்கு-
பிறகே-
ஐவேளை தொழுகை-
கடமையாக்கப்பட்டது!

இஸ்லாத்தை-
ஏற்றவர்கள்-
உள்ளத்தில்-
நல் எண்ணங்கள்-
விதைக்கப்பட்டது!

உள்ளங்கள்-
தூய்மையடைய-
ஆரம்பித்தது!

இறைவசனங்கள்-
முன் சென்ற-
நபிகளின்-
வாழ்கையை-
சொன்னது!

"சத்தியத்தால்"-
அவர்கள்பட்ட-
நிந்தனைகளை-
சொன்னது!

சோதனைகளையும்-
தாங்ககூடிய-
மனவலிமைக்கு-
வித்திட்டது!

இறை கட்டளை-
இறங்கியது!

"உங்களுடைய நெருங்கிய- உறவினர்களுக்கு-
அச்சமூட்டி எச்சரிக்கை -
செய்யுங்கள்!"-(26;214)
என்றது!

பெருமானார்(ஸல்)-
பகிரங்கபடுத்த-
தயாரானார்கள் !

தனது-
நெருங்கிய உறவுகளை-
கூட்டினார்கள்!

முதலில்-
எதிர்ப்பால்-
சொல்லவில்லை!

மறுமுறை-
சொல்லாமலில்லை!

சொல்லிவிட்டார்கள்-
உறவுகளிடம்-
ஓரிறை கொள்கையை!

நல்கினார்-
பெரிய தந்தை-
அபூதாலிப் ஆதரவை!

சிறியதந்தை
அபுலஹப் -
தெரிவித்தார்-
எதிர்ப்பை!

ஆதரித்தாலும்-
அபூதாலிப்-
விட்டு வரவில்லை-
அவரது-
"பழைய கொள்கையை"!

ஒரு நாள்-
காலை நேரம்!

ஒவ்வொரு கிளையாரையும்-
பெயரை சொல்லி-
அழைக்கும் சப்தம்!

மக்கள் -
கூடினார்கள்-
சஃபா மலையின்-
முன்பாக!

மலையில் -
இருந்தார்கள்-
முஹம்மது (ஸல்)-
மக்களை எதிர்பார்த்தவர்களாக!

இம்மலைக்கு பின்னால்-
ஒரு பெரும்படை-
உங்களை தாக்க வருவதாக-
சொன்னால் நம்புவீர்களா!?-என
கேட்டார்கள்-
மக்களை நோக்கி!

ஆம்! நம்புவோம்-
ஏனென்றால் -
நீங்கள் பொய்யுரைத்து கண்டதில்லை-என்றார்கள்
மக்கள் -
பெருமானாரை நோக்கி!

அப்பொழுது-
ஏகத்துவகொள்கையை-
சொன்னார்கள்!

மக்கள் பதிலேதும்-
சொல்லாமல்-
கலைந்தார்கள்!

அபுலஹப்-
வந்தான்!

நாள் முழுவதும்-
நாசம் உண்டாகட்டும்-என
சொல்லி சென்றான்!

அவன் மீது-
இறைவனே-
சாபத்தை விதித்தான்!

ஒருபக்கம்-
இஸ்லாத்திற்கு-
நெருக்கடி-
இருந்தது!

மறுபக்கம்-
நாலாதிசையிலும்-
பரவியது!

பிறப்பு -
இறப்பு-
யாராலும்-
கணிக்க முடியுமா!?

கிழக்கு -
வெளுப்பதைதான்-
தடுக்க முடியுமா!?

(தொடரும்...)







Monday 29 July 2013

இஸ்லாமும்-நபிகள் நாயகமும்!(26)

மக்கா -
மக்கள்-
சிலைகளை-
வணங்கினார்கள்!

சிலை வணங்குவதற்கான-
ஆதாரங்கள்!

முன்னோர்கள்-
வணங்கினார்கள்!

அதனால் மட்டுமே-
வணங்கினார்கள்!

ஆனால்-
இஸ்லாம் கூறும்-
இறைவன்!

அவன்-
ஒருவனே!

இணை துணை-
இல்லாதவன்!

அன்பாளன்!
அருளாளன்!

மன்னிப்பவன்!
தண்டிப்பவன்!

அவன்-
யாராலும்-
பெறப்படவும் இல்லை!

யாரையும்-
பெறவும் இல்லை!

ஆட்சியாளர்களுக்கெல்லாம் -
ஆட்சியாளன்!

சூழ்ச்சியாளர்களுக்கெல்லாம்-
சூழ்ச்சியாளன்!

இஸ்லாமை யாரேனும்-
ஏற்றுகொள்வது !

"லா இலாஹ இல்லலாஹு-
முஹம்மதுர் ரசூலுல்லாஹி-என
மனமார ஏற்றுகொள்வது!

"வணக்கத்திற்குரியவன்-
அல்லாஹ்வை தவிர-
வேறுயாருமில்லை-
முஹம்மது(ஸல்) இறை தூதர்-
தமிழாக்கம் இது!

இஸ்லாமிய-
கொள்கை!

புரையோடிய-
அனாச்சாரங்களை-
எரித்திடும்-
நெருப்பின் வெட்கை!

சிலைகளை வைத்து-
சம்பாதித்தவர்கள்!

அதனால்-
தங்களை தாங்களே-
உயர்ந்தவர்கள்-என
எண்ணியவர்கள்!

வர்க்கபேதங்கள்!
வர்ணபேதங்கள்!

ஆண்டான்-
அடிமை முறைகள்!

பிறப்பால்-
உயர்தவர்கள்-என
எண்ணியவர்கள்!

இப்படியான-
விசயங்களை-
எதிர்த்தது!

இன்றும்-
என்றும்-
ஆணிவேரையே-
பிடுங்குவது!

இஸ்லாம்தான் அது!

அதனால்-
இந்த -
ஏகத்துவ கொள்கையை-
முஹம்மது(ஸல்)-
மறைமுகமாக எத்திவைத்தார்கள்!

முஹம்மது(ஸல்)-
துணைவியார் கதீஜா (ரலி)-
அபூபக்ர் (ரலி)-உள்பட
எட்டு பேர்கள் இணைந்தார்கள்!

கொஞ்சம் கொஞ்சமாக-
நூற்றி முப்பது  பேர்கள்-
ஆனார்கள்!

மறைமுகமாக-
செய்தது!

பகிரங்கபடுத்த-
நேர்ந்தது!

(தொடரும்....)

// இறைவனை தமிழில் கடவுள் என்றும் பகவான் என்றும் ஆங்கிலத்தில் god  என்றும் அழைக்கிறோமோ..அதுபோலவே அல்லாஹ் என்பது கடவுளை குறிக்கும் அரபு சொல்லாகும்.
அது முஸ்லிம்களின் தனிபட்ட கடவுள் பெயர் என சொல்லமுடியாது.//





Sunday 28 July 2013

இஸ்லாமும்-நபிகள் நாயகமும்!(25)

"வரகா  "-அவர்களின்
வீட்டிற்கு சென்றார்கள்!

முஹம்மது(ஸல்)-அவர்கள்
நடந்தவற்றை சொன்னார்கள்!

"வரகா"-
பதில் சொன்னார்கள்!

வந்தவர்-
வானவர் ஜிப்ரீல்-
ஆவார்!

மூசா (அலை)-
அவர்களை-
சந்தித்ததும்-
அவரே ஆவார்!

உங்களை-
 ஊரை விட்டு-
மக்கள் வெளியேற்றுவார்கள்!-
வரகா சொன்னார்கள்!

"என்னை நேசிக்கும்-
இம்மக்கள் -
என்னை -
வெளியேற்றுவார்களா !?-
கேட்டார்கள்!

வரகா-
ஆமோதித்தார்கள்!

இளைஞனாக -
நான் -
அப்போது இருந்தால் -
உங்களுக்கு-
உதவுவேனே..!-என
அங்கலாய்த்தார்கள்!

சில காலத்திலேயே-
வரகா மரணித்துவிட்டார்கள்!

இறை செய்தி(வஹ்யி)-
வர தாமதமானது!

முஹம்மது(ஸல்)-அவர்கள்
மனமோ-
எதிர்பார்த்தது!

மலைக்கு மேல்-
செல்வார்கள்!

விழுந்திட-
முனைவார்கள்!

ஜிப்ரீல்(அலை)-
நீங்கள் இறை தூதர்தான்-என
சொல்லி மறைவார்கள்!

நபிகளார் -
திரும்பிடுவார்கள்!

ஒரு முறை-
நபிகளாரை-
கூப்பிடும்-
சப்தம்!

நபிகளார்-(முஹம்மது-ஸல்)
பார்கிறார்கள்-
சுற்றும் முற்றும்!

அண்ணாந்து-
பார்க்கிறார்கள்!

மேலே-
ஜிப்ரீல்(அலை)-ஐ
பார்க்கிறார்கள்!

நடுக்கத்தில்-
கதீஜா (ரலி)-அவர்களிடம்
போர்த்திட சொல்கிறார்கள்!

குளிர்ந்த நீரை-
ஊற்ற சொல்கிறார்கள்!

அப்போது-
இறைவசனங்கள்-
அருளப்பட்டது!

அது-
இப்படியாக-
இருந்தது!

"போர்வை போர்த்திகொண்டிருப்போரே..!
எழுவீராக!

மனிதர்களுக்கு -
அச்சமூட்டி எச்சரிப்பீராக.....!"(74:1-5)

இனி-
உறக்கம் கொள்ள-
வேலையில்லை!

இறைவனின் பணி-
படுத்து உறங்க இல்லை!

லட்சியபாதை!
சத்தியப்பாதை!

புறப்பட்டார்கள்-
மக்களை -
நன்மையின் பக்கம்-
அழைக்க!

மக்களோ-
ஆயத்தம் ஆனார்கள்-
கொடுமைகளை-
இழைக்க!

(தொடரும்...)

// இறை செய்தி வந்த வகைகள்;
உண்மையான  கனவு.
நபி (ஸல்) உள்ளத்தில் இறைசெய்தியை போட்டு விடுவது.
ஆடவர் உருவில் வானவர் தெரியபடுத்துவது.//

/நீளம் கருதி சுருக்கி கொண்டேன்//





Saturday 27 July 2013

இஸ்லாமும்-நபிகள் நாயகமும்! (24)

முஹம்மது (ஸல்)-அவர்கள்
சமூக அவலங்களால் -
அவஸ்தைக்கு உள்ளானார்கள் !

தவறு செய்வதை கண்டு-
தத்தளித்தார்கள்!

சிறுவயதிலிருந்து-
சிலைகளை வணங்கியதில்லை!

சிலைகளின் பெயரால்-
அறுக்கபட்டவைகளை-
உண்டதில்லை!

தவறான விசயத்திலிருந்து-
தவிர்ந்திருந்தார்கள்!

தவறிடாமல்-
இறைவனாலும்-
பாதுகாக்கபட்டார்கள்!

மனம்-
தனிமையை-
தேடியது!

ஒரு-
தெளிவையும்-
தேடியது!

அதற்காக-
"ஹீரா "குகையில்-
தனித்திருப்பார்கள்!

தியானிதிருப்பார்கள்!

வழிபட்டுகொண்டிருப்பார்கள்!

நாற்பது வயது-
ஆனது!

பல இறைதூதர்களுக்கு-
நடந்தது!

நபித்துவம்-
அடைவது!

முஹம்மது(ஸல்)-
அவர்களுக்கும்-
நேர்ந்தது!

முஹம்மது(ஸல்)-
திடுக்கிட்டார்கள்!

வானவர்-
ஜிப்ரீல் (அலை)-
வருகை புரிந்தார்கள்!

வானவர்-
ஜிப்ரீல்(அலை)-
ஓதுவீராக..!-என
சொன்னார்கள்!

முஹம்மது(ஸல்)-அவர்கள்-
ஓத தெரிந்தவனில்லையே..!-
என்றார்கள்!

வானவர்-
இறுக்க கட்டியணைத்து-
ஓத சொன்னார்கள்!

மூன்று முறை-
அதையே-
வானவர்-
சொன்னார்கள்!

மீண்டும் -
முஹம்மது(ஸல்)-
சொன்னதையே-
சொன்னார்கள்!

'' அனைத்தையும் படைத்த-
உங்கள் இறைவனின்பெயரால்-
ஓதுவீராக...!(96:1-6)
வானவர் சொன்னார்கள்!

இவ்வசனத்தை -
சுமந்தவர்களாக-
முஹம்மது(ஸல்)-
நடுக்கத்துடன்-
வீடு  சேர்ந்தார்கள் !

போர்வையை போர்த்துங்கள்!
போர்வையை போர்த்துங்கள்!-
என்றார்கள்!

நடுக்கம் -
தீர்ந்தபின் -
கதீஜா (ரலி)-
விசாரித்தார்கள்!

முஹம்மது(ஸல்)-
நடந்தவற்றை-
சொன்னார்கள்!

"வராகா" எனும்-
பெரியவர்!

முஹம்மது(ஸல்)-
அவர்களின்-
உறவினர்!

வேதங்கள்-
படித்தவர்!

"ஹிப்ரு " மொழி-
அறிந்தவர் !

அவரிடம்-
சென்றார்கள்!

அவர்-
கேட்டார்!

சொன்னார்!

உண்மையையும்!
அதிர்ச்சியையும்!

(தொடரும்....!)

// வானவர் ஜிப்ரீல் மூலமாக வந்த வசனங்கள்தான் குர் ஆன் எனும் வேதமாகும்.இது முழுக்க முழுக்க
இறைவனின் வசனங்களாகும்.
முஹம்மது(ஸல்)அவர்கள் சொல்ல சொல்ல தோழர்கள் தோல்கள் மரக்கட்டைகள் இவைகளில் எழுதிவைத்து சேர்த்ததே.குர் ஆன்
ஆகும்.விருப்பம் உள்ளவர்கள் வாங்கி படித்து பாருங்கள்.தமிழாக்கமும் உள்ளது.
படித்து பார்த்தால் இலகுவாக புரிந்திடும்.//

// ஹதீஸ் எனும் நபி மொழியே முஹம்மது(ஸல்)அவர்கள் சொன்னவைகள் -செய்தவைகளாகும்.//

Friday 26 July 2013

இஸ்லாமும்-நபிகள் நாயகமும்!(23)

எப்படிபட்டவர்-
முஹம்மது (ஸல்)-
அவர்கள்!

கேட்டால் சொல்வார்கள்-
மக்கத்து மக்கள்!

நல்லவர்!
நியாயமானவர்!

நாணயமானவர்!
நேர்மையானவர்!

உண்மையானவர்!
நம்பிக்கையானவர்!

இப்படியாக-
சொல்வார்கள்!

அம்மக்களே-
பிறகு-
"இப்படியும்"-
சொன்னார்கள்!

பைத்தியகாரர்!
சூனியக்காரர்!

உறவுகளை -
பிரிக்கிறவர்!

வியாக்கியானம்-
பேசுபவர்!

திட்டமட்டும் இல்லை!

"தீர்க்கவும்"-
முடிவு செய்யாமல் இல்லை!

தீட்டிய -
வாள்கள்-
குறிவைத்தது!

குறிவைக்கவே-
ஈட்டிகள்-
தீட்டப்பட்டது!

கற்களும் -
சொற்களும்-
பதம் பார்த்தது!

நாற்பது வயதிற்கு -
முன்-
முஹம்மது(ஸல்)-ஐ
நேசித்தவர்கள்!

அதன் பிறகு-
ஏன் !?-
விஷம் கொண்டார்கள்!

முஹம்மது(ஸல்) அவர்களுக்கு-
என்ன நேர்ந்தது!

அதற்காக-
இம்மக்களுக்கு-
என்ன!?-
நேர்ந்தது!

முஹம்மது (ஸல்)-
வாழ்ந்தது-
அறுபத்தி மூன்று-
ஆண்டுகள்!

அதில் கழிந்தது-
நாற்பது ஆண்டுகள்!

இன்னும்-
இருபத்தி மூன்று ஆண்டுகள்!

உலகில் இதுவரைக்கும்-
தொடரும் விமர்சனங்கள்!

என்ன!?-
சொன்னார்கள்!

அவர்களை-
பாவிகள்-
என்னவெல்லாம் -
செய்தார்கள்!

தொடருங்கள்!

(தொடரும்...)

Thursday 25 July 2013

இஸ்லாமும்-நபிகள் நாயகமும்!(22)

மக்காவில்-
கதீஜா எனும்-
பெண்மணி!

அவர்-
செல்வமும்-
மதிப்பும் மிக்க-
பெண்மணி!

அவர்-
வியாபாரம்-
செய்து வந்தார்!

சில ஆட்களையும்-
வேலைக்கு பணித்திருந்தார்!

கிடைக்கும் லாபத்தில்-
விற்றவருக்கும்-
பகிர்ந்தளிப்பார்!

முஹம்மது (ஸல்)அவர்களின் -
நேர்மையை அறிந்திருந்தார்!

ஒரு முறை-
முஹம்மது(ஸல்) அவர்களை-
கூப்பிட்டு வரசொன்னார்!

கதீஜா -
லாபத்தில் பங்குண்டு-என
சொன்னார்!

முஹம்மது (ஸல்)-
வியாபாரத்திற்காக-
ஷாம் தேசம் சென்றார்!

அவர்களுடன்-
கதீஜாவின்-
அடிமை பெண் மைசராவும்-
சென்றார்!

லாபத்தோடு-
முஹம்மது (ஸல்)-
நாடு திரும்பினார்!

கதீஜா-
மனமகிழ்ந்தார்!

பங்கு கொடுத்தார்!

தன் பங்கு-
லாபத்தால்-
மகிழ்ந்தார்!

கதீஜா அவர்கள்-
ஒரு விதவை பெண்!

கதீஜாவின்-
"முடிவுக்காக"-
தலைவர்கள்-
காத்திருந்தார்கள்-
அவர்களின் முன்!

மைசாரா-
முஹம்மது(ஸல்)-
அவர்களின்-
நற்குணங்களை -
கூறிகொண்டிருக்க!

தன் வாழ்க்கைத்துணை -
முஹம்மது (ஸல்)-
அவர்களே -என்கிற
எண்ணம் மேலோங்க!

தன் எண்ணத்தை-
தோழி நபீசாவிடம்-
சொல்லி விடுகிறார்!

முஹம்மது (ஸல்)அவர்களும் -
சம்மதிக்கிறார்!

பெரியவர்கள் கூடி-
பேசி முடிக்கிறார்கள்!

திருமணத்தையும்-
நடத்தி முடிக்கிறார்கள்!

திருமணத்தின்போது-
கதீஜா  அவர்களுக்கு-
நாற்பது வயது!

முஹம்மது (ஸல்)அவர்களுக்கு-
இருபத்தைந்து வயது!

அத்தம்பதிகளுக்கு-
ஆறு மக்கள்மார்கள்!

நான்கு பெண்கள்!
இரண்டு ஆண்கள்!

பெண்மக்கள் -
வாழ்ந்தார்கள்!

ஆண்மக்கள்-
குழந்தை பருவத்திலேயே-
மரணித்தார்கள்!

சத்தியத்தை-
சொல்ல வந்த-
உத்தமருக்கே-
எத்தனை வேதனை!?

நம் போன்ற -
சாமானியருக்கு-
வராதாது-
சாத்தியமா!?
சோதனை!?

(தொடரும்....)



Wednesday 24 July 2013

இஸ்லாமும் -நபிகள் நாயகமும்! (21)

தாயார் -
ஆமினா!

செல்ல நினைத்தார்-
மதீனா!

தன் கணவர் (அப்துல்லா)-
மண்ணறையை  கண்டு வர!

மன அமைதி பெற!

மகனுடனும்-
மாமனாருடனும்-
பயணமானார்!

ஒரு மாதகாலம்-
தங்கினார்!

நோய் வாய்ப்பட்டவர்!

திரும்பி குடும்பத்துடன்-
வரவில்லை!
ஆமினா!

"திரும்ப முடியாத-"
பயணமானார்-
ஆமினா!

முஹம்மது(ஸல்)-
பிறக்கும் முன்-
தந்தையையும்-
பிறப்பிற்கு பின்-
தாயையும்-
இழந்தார்!

சிறுவனான-
முஹம்மது (ஸல்) வை-
பாசத்தில் நனைத்தார்-
பாட்டனார்!

மேலும்-
வயோதிகமான-
அப்துல் முத்தலிபு!
(பாட்டனார்)

தனக்கு-
 பிறகு-
பேரனை வளர்க்கும்-
பொறுப்பு!

தன் மூத்தமகன்-
அபூதாலிபுவை-
சாரும்!

அபூதாலிபும்-
முஹம்மது (ஸல்) வை-
நேசித்ததை-
வரலாறுகளே-
பறை சாற்றும்!

பன்னிரண்டு வயதான-
முஹம்மது (ஸல்)-
அவர்கள்!

பெரியதந்தை-
அபூதாலிபுடன்-
வியாபார கூட்டத்துடன்-
சென்றார்கள் !

ஷாம் தேசம்-
வந்தார்கள்!

அத்தேசத்தில்-
"புஸ்ரா" பகுதியை-
அடைந்தார்கள்!

இவர்களை-
பிளந்துகொண்டு-
வந்தார்-
பஹீரா எனும்-
துறவி!

முஹம்மது (ஸல்) வை-
பார்த்து சொன்னார்-
இவர் இறுதி தூதர்-என்றார்
மருவி மருவி!

அபூதாலிபு கேட்டார்-
எப்படி-
 உங்களுக்கு தெரியும்-என
துறவியிடம்!

அடையாளத்தை-
துறவி சொன்னார்-
அவர்களிடம்!

அவர்கள்-
வரும்போது நடந்த-
"அதிசயத்தை"!

முஹம்மது (ஸல்)-
இடது தோல் -
புஜத்திற்கு கீழ்-
ஆப்பிள் போன்ற-
முத்திரை இருக்கும் -
என்பதை!

தங்களது-
வேதங்களில்-
இதனை-
சொல்லி இருப்பதை!

மேலும் துறவி-
சொன்னார்-
இச்சிறுவனுக்கு-
ஆபத்து ஏற்படலாம்-
ரோமர்களாலும்-
யூதர்களாலும்-
என்பதை!

அபூதாலிபு-
அதிர்ந்தார்!

சில வாலிபர்களுடன்-
முஹம்மது (ஸல்)வை-
மக்கா அனுப்பினார்!

(தொடரும்....)






Tuesday 23 July 2013

இஸ்லாமும் -நபிகள் நாயகமும்! (20)

சென்றார்-
"ஹலீமா"-
குழந்தையை-
சுமந்தவளாக!

அவரே-
சொல்கிறார்-
இப்படியாக!

காய்ந்துபோன-
என் நெஞ்சி!

பால் சுரந்து-
நிரஞ்சிச்சி!

முஹம்மது (ஸல்)வும்-
என் குழந்தையும்-
குடித்தது!

இரவில்-
இனிமையாக-
உறங்கியது!

என் -
குழந்தைகள் அழும்-
பசியால்-
தினம் தினம்!

அன்று நடப்பதோ -
அபூர்வம்!

என் கணவர்-
சொன்னார்-
அருள் நிறைந்த-
குழந்தையை-
பெற்றிருப்பதாக!

நானும்-
தலையசைத்தேன்-
ஆமோதித்தவளாக!

வரண்டுபோன-
எங்கள் பூமியிலே!

மடி நிறைந்து திரும்பும்-
எங்கள் கால்நடைகளே!

தவணைகாலம்-
முடிந்தது!

முஹம்மது(ஸல்)-
திரும்ப கொடுக்கவேண்டிய-
நேரமும் வந்தது!

ஹலீமா சொன்னார்-
இன்னும் -
சிலகாலம்-
வளர்ப்பது-
நலம்!

சம்மதித்தது-
தாயார் ஆமினா-
மனம்!

சிறுவர்களுடன்-
முஹம்மது (ஸல்)-
சென்றார்கள்!

அப்போது-
வானவர் ஜிப்ரீல் (அலை)-
வந்தார்கள்!

முஹம்மது(ஸல்)வை-
மயக்கமுற-
செய்தார்கள்!

நெஞ்சை-
பிளந்தார்கள் !

இதயத்தில்-
ஒரு சிறு துண்டை-
நீக்கினார்கள்!

இது -
சைத்தானின் பகுதியாகும்"-
என்றார்கள்!

பின் இதயத்தை-
தங்கத்தட்டில் வைத்து-
ஜம் ஜம் நீரால்-
கழுவினார்கள்!

பிறகு-
நெஞ்சை பொருத்தினார்கள்!

கேள்வி வரலாம்-
இப்படியெல்லாம்-
நடந்திருக்குமா!?

சொல்லுங்கள்-
ஏன் நடக்காமல்-
இருக்குமா!?

இதய அறுவை சிகிச்சை-
மருத்துவர் -எனும்
மனிதன் செய்கிறான்!

அம்மனிதனையே-
படைத்தவன்-
"நினைத்தவற்றை"-
செய்யமுடியாதவனா!?
இறைவன்!?

மயக்கமுற்ற -
முஹம்மது (ஸல்)-வை
பார்த்து -
மற்ற சிறுவர்கள்-
இறந்துவிட்டதாக-
சொன்னார்கள்!

முஹம்மது(ஸல்)-
நிறம் மாறி இருந்தார்கள்!

ஹலீமா-
விபரீதம்-
ஆகிட கூடாதென்று!

விட்டுட்டுவந்தார்-
தாயார்-
ஆமினாவிடம்-
சென்று!

(தொடரும்....)






Monday 22 July 2013

இஸ்லாமும்-நபிகள் நாயகமும்!(19)

அப்துல்லா-
ஆமினா-
"வாழ்ந்த"-
வாழ்வு!

பிறந்தார்-
ஒரு-
ஆண் மகவு!

பேரன் பிறந்ததை-
அப்துல் முத்தலிபு-
அறிந்தார்!

உள்ளம்-
குளிர்ந்தார்!

குழந்தையை-
அள்ளி அணைத்து-
காபத்துல்லா-
சென்றார்!

"முஹம்மது"-என
பெயர் சூட்டி மகிழ்ந்தார்!

குடும்பம்-
மகிழ்ச்சியில்-
திளைத்தது!

அரபு மக்களின்-
வழக்கப்படி-
ஏழாம் நாள்-
கத்னா (விருத்த சேனம்)-
செய்யப்பட்டது!

அன்றைய -
அரபுக்களிடம்-
ஒரு வழமை-
இருந்தது!

செவிலித்தாயிடம்-
குழந்தைகள்-
வளர்வது!

காரணங்களும் -
இருந்தது!

தெளிவாக-
மொழி பேசுவதற்கு!

உடல்வலிமையாக-
வளர்வதற்கு!

குழந்தைகளை-
தத்தெடுத்து-
வளர்பதற்கு!

வந்தார்கள்-
செவிலித்தாய்கள்-
மக்காவிற்கு!

எல்லா குழந்தைகளையும்-
செவிலிதாய்மார்கள்-
எடுத்தார்கள்!

ஒரு குழந்தையை-
தவிர்த்தார்கள்!

காரணம்-
தகப்பன் இல்லாத-
நிலை!

ஊதியம்-
கிடைக்குமா!?-என்கிற
மன நிலை!

மிஞ்சியது-
ஒரு குழந்தையும்!

ஒரு தாயும்!

தாயவள்-
"ஹலீமா"-என்பவராவார்!

குழந்தை-
முஹம்மது(ஸல்)-
ஆவார்!

அத்தாய்-
குழந்தையை-
தூக்கி சென்றாள்!

வரலாறுகள்-
அவளது பெயரையும்-
சுமக்கும் என்பதை-
நினைத்திருப்பாள்!?

(தொடரும்....)

//முஹம்மது (ஸல்) பிறந்தது.
கி.பி.571 ஏப்ரல் 20அல்லது 22.
ரபியுல் அவ்வல் 9 ம் நாள்.
திங்கள் கிழமை//

//சல்லலாஹு அலைஹிவசல்லம்-
இதன் சுருக்கமே(ஸல்) என எழுதபடுகிறது.//







Sunday 21 July 2013

இஸ்லாமும்-நபிகள் நாயகமும்!(18)

மரணித்தார்-
முத்தலிபு!

"பொறுப்புகளை"-
ஏற்றார்-
அப்துல் முத்தலிபு!

அப்துல் முத்தலிபுவின்-
காலத்தில்-
இரு சம்பவங்கள்-
நடந்தது!

அது-
முக்கியத்துவங்கள்-
வாய்ந்தது !

ஒன்று-
ஜம் ஜம் கிணறு-
பற்றியது!

அக்கிணறு-
சில காரணங்களால் -
மூடி இருந்தது!

பிறகு-
அப்துல் முத்தலிபுவிற்கு-
தெரிய வந்தது!

கனவில்-
கண்டார்!

இடத்தை-
அறிந்து-
கிணற்றை -
புதுபித்தார்!

ஜம் ஜம் கிணறு-
இஸ்மாயில் (அலை)-
காலத்து-
நீரூற்று!

இதுவரைக்கும்-
நீடிக்கும்-
அருளூற்று!

முக்கியத்துவம்-
மற்றொன்று-
காபத்துல்லாவை-
பற்றியது!

அப்ரஹா என்ற-
அதிகாரத்தில் இருந்தவனுக்கு-
ஒரு எண்ணம்-
இருந்தது!

யானை படையை-
காபத்துல்லாவை-
உடைத்திட -
அனுப்பினான்!

பறவை கூட்டத்தை-
சிறு சிறுகற்களுடன்-
அனுப்பினான்-
இறைவன்!

யானை படை-
தின்று  துப்பிய-
வைக்கோல்-
 போலானது!

வந்தவனுக்கும்-
மரணம்-
சம்பவித்தது!

அப்துல் முத்தலிபுவிற்கு-
பதினாறு பிள்ளைகள்!

பத்து ஆண்கள் !
ஆறு பெண்கள்!

மகன்களில்-
ஒருவர்-
அப்துல்லா ஆவார்!

அவர்-
ஆமினாவை-
மணந்தார்!

இனிமையாக-
கழிந்தது-
இல்லற வாழ்கை!

ஆனால்-
நீடிக்கவில்லை-
அவ்வாழ்க்கை!

பேரீத்தம் பழம் வாங்க-
மதினாவிற்கு-
அப்துல்லா சென்றார்!

சென்றவர்-
"சென்றே " விட்டார்!

(தொடரும்....)

//ஜம் ஜம் நீர்பற்றிய ஒரு குறுஞ்செய்தி-
""zam zam"is 18#14 ft &13 mtrs deep well.It started 4000 years ago.Never dried since then.Never changed its taste.No Algae or plant growth in the pond.Hevey motors pulling 8000 litres per second &after 24hrs, it completes its level in only 11 mins.thus its water level never.
இத்தகவலை அனுப்பிய சகோதரர்.ஜலால் அவர்களுக்கு நன்றி//




Saturday 20 July 2013

இஸ்லாமும்-நபிகள் நாயகமும் !(17)

அக்காலத்தில்-
"ஹாஷிம்"-என்றொருவர்
வாழ்ந்தார்!

மதிப்பும்-
மரியாதையுமாக-
இருந்தார்!

அவரின் -
கிளையாளர்களே-
ஹாஷிம் கிளையார்-என
அழைக்கப்பட்டனர்!

அவர்தான்-
காபதுல்லாவை-
நிர்வகித்தார்!

அவரின்-
மரணத்திற்கு பின்-
உடன்பிறந்த -
முத்தலிபு-
"பொறுப்புகளை"-
ஏற்றுகொண்டார்!

முத்தலிபு-
பிறகுதான்-
அறிந்தார்!

தன் சகோதரர்(ஹாஷிம்)மகன் -
மதீனாவில்-
இருப்பதாக!

விரைந்தார்-
அப்பாலகனை-
அழைப்பதற்காக!

முத்தலிபு-
கூப்பிட்டார்!

பாலகன்-
வர மறுத்தார்!

தாயாரும்-
தடுத்தார்!

முத்தலிபு-
அம்மையாரிடம்-
வாதிட்டார்!

சகோதரின்-
சொத்துகளை -
பாதுகாக்கவும்!

புனித ஆலயம்-
இருக்கும்-
மக்காவில்-
வசிப்பதற்கும்!

தாயாரும்-
சம்மதித்தார்!

ஒட்டகத்தில்-
முத்தலிபுடன்-
அப்பாலகன்-
பயணித்தார்!

இதனை கண்ட-
மக்கத்து மக்கள்!
அச்சிறுவனை-
சொன்னார்கள்-
"அப்துல் முத்தலிபு"-என்று!

முத்தலிபு-
ஆனார்-
கோபத்தில் கனன்று!

காரணம்-
"அப்துல் முத்தலிபு-என்பதற்கு
அர்த்தம்-
முத்தலிபுவின் அடிமை!

அதனால்தான்-
காட்டினார்-
வார்த்தையில்-
கடுமை!

அச்சிறுவனின்-
இயற்பெயர்-
இருந்தது-
"ஷைபா" வாக!

அன்று முதல்-
ஆனது-
"அப்துல் முத்தலிபு"வாக!

வரலாறு-
அப்படிதான்-
பதிந்துள்ளது!

"தலைப்பை" ஒட்டிய -
தகவல்-
அருகில் வர-
உள்ளது!

(தொடரும்....)






Friday 19 July 2013

இஸ்லாமும்-நபிகள் நாயகமும்!(16)

கடல் நீர்-
கரிப்பதால்!-
மீன் குழம்புகள்-
ருசிக்க மறுப்பதில்லை !

மேகத்தில் -
அந்நீர் கலப்பதால்-
மழை நீர்-
உப்பை கொட்டுவதில்லை!

அவ்வாறே-
அன்றைய-
 அரபு மக்களிடம்-
நாசங்கள் -
இருந்தாலும்!

நல் செயல்களும்-
இருந்தது-
அவர்களிடத்திலும்!

பொருளாதாரம்-
வாணிகத்தில்-
பொருளீட்டினார்கள்!

போர்களினாலும்-
சண்டைகளினாலும்-
வறுமைக்கு உள்ளானார்கள்!

கொடைத்தன்மையும்-
தயாளதன்மையும்-
கொண்டிருந்தார்கள்!

பிறருக்கு-
நஷ்ட ஈடு ஏற்றுக்கொண்டு-
உயிர்களை காப்பார்கள்!

தன்னால் முடியாது-
என்றாலும்-
முயல்பார்கள்!

மதுவில்-
மலந்தார்கள்!

மதுவால்-
கொடைத்தன்மை-
பெருகும் -என
எண்ணினார்கள்!

சூதிலும்-
திளைத்தார்கள்!

ஜெயித்தால்-
தன் பணத்தை மட்டும்-
எடுத்து விட்டு!

செல்வார்கள்-
மிச்சபணத்தை-
ஏழைகளுக்கு-
கொடுத்து விட்டு!

எதை இழந்தாலும்-
ஒப்பந்தத்தை-
நிறைவேற்றுவார்கள்!

அதில் -
சமரசம்-
இல்லாதிருந்தார்கள்!

சமல் அல் என்பாரிடம்-
ஒருவர்-
சிலகவசங்களை-
கொடுத்திருந்தார்!

அதனை-
மன்னன் -
"ஹாரிஸ்"-என்பவர்
அபகரிக்க முற்பட்டார்!

அவர்-
மறுத்தார்!

சமல் அல்-
மகனை-
மன்னர் -
பிணையாக -
பிடித்தார்!

ஆனாலும்-
"கொடுக்க"-
மறுத்தார்!

தன் மகனின்-
இறப்பை பார்த்தார்!

அம்மக்களிடம்-
செயல் உறுதி-
இருந்தது!

அநீதத்தை -
எதிர்க்கும் -
ஆர்வம் இருந்தது!

பகட்டில்-
வெறுப்பு இருந்தது!

எளிமை-
பிடித்திருந்தது!

ஒப்பந்தங்களை நிறைவேற்றுதல்-
இப்பண்பு-
இலட்சியத்திற்காக-
உழைப்பதற்கு-
உந்துதலானது!

(தொடரும்...)







Thursday 18 July 2013

இஸ்லாமும்-நபிகள் நாயகமும்! (15)

பெண் சமூகம்!

அதன்-
அன்றைய நிலைகளை-
பார்ப்போம்!

குலபெருமையை கொண்டு-
கண்ணியமுடனும்-
இருந்தார்கள்!

அவர்கள்-
உடைந்த உறவுகளை-
சேர்க்கவும்-
செய்தார்கள்!

பிணைத்திருந்த-
உறவை -
பிச்சியும்-
எறிந்துள்ளார்கள்!

மற்ற ஒன்று-
இன்று -
முஸ்லிம் சமூகத்திலிருக்கும்-
மஹர் பணம் கொடுக்கும்-
முறையும் இருந்தது!

இனி வருவது-
சுடுவது!

கட்டியகணவனே-
மாதவிடாய் நின்றவுடன்-
தன் மனைவியை-
வேறொருவனிடம்-
"இணங்க " சொல்வான்!

கர்ப்பம் தரித்தது-
உறுதியான -
பிறகுதான்-
மனைவியிடம்-
"கூடுவான்"!

ஆரோக்கியமான -
குழந்தை பிறக்க-
இப்படி ஒரு வழியாம்!!

இன்னொரு முறை-
ஒரு பெண்ணை-
சிலர் "பயன்படுத்துவார்களாம்!"

யார்-
அக்குழந்தைக்கு-
தகப்பனென்று-
அப்பெண் சொல்வாளாம்!

அவனும்-
ஏற்பார்களாம்!

மற்றொரு முறை-
கொடி கட்டிய வீடு!

யாரும்-
நுழைய அனுமதிக்கும்-
அவ்வீடு!

நாறும்-
அவ்வீடு-
விபச்சாரத்தால்!

கருவுற்றால்-
அவள்!

ஊரு கூடி -
நிற்கும்!

முக ரேகை-
நிபுனருக்காக -
காத்திருக்கும்!

முக குறியை வைத்து-
குறிப்பிடுவார்-
ஒருவரை!

அவரும்-
ஏற்பார்-
தீர்ப்பை!

வரைமுறை -
இல்லாமல்-
"கட்டிகொள்வார்கள்"!

இஸ்லாம் வந்தபிறகுதான்-
ஒரு "வரையறைக்குள்"-
வந்தார்கள்!

அன்று-
விபச்சாரம்!
விபச்சாரம்!

தாராளம்!

குல பெருமைக்காகவும் -
வாள் எடுப்பார்கள்!

சாகவும்-
துணிந்தவர்கள்!

அநியாயகாரனானாலும்-
அநீதி இழைக்கபட்டவனாலும்-
உடன் பிறப்பென்றால்-
ஒன்றிணைவார்கள்!

தலைமை பொறுப்புக்காக-
"அவர்களுக்குள்ளாகவும்"-
அடித்தும் கொள்வார்கள்!

(தொடரும்....)

// மஹர் -என்பது திருமணத்திற்கு
முன் மணமகளுக்கு கொடுக்கபடும்.
திருமண தொகையாகும்.அத்தொகையை கொடுத்த பிறகுதான் திருமணம் செய்யலாம்.அத்தொகையை பெண்ணே தீர்மானிக்கனும்.
கொடுத்த மஹரில் கணவனுக்கு புசிக்க உரிமையில்லை. பெண்ணே மனமுவந்து கொடுத்தால் புசிக்கலாம். இஸ்லாமிய சட்டம்.//






Wednesday 17 July 2013

இஸ்லாமும்-நபிகள் நாயகமும்!(14)

ஒரு புறம்-
சிலை வழிபாடுகள்!

மறுபுறம்-
உருவ வழிபாடுகள்!

வானவர்கள்!
நபிமார்கள்!

நல்லவர்கள்!
சத்தியவான்கள்!

மக்கள் -
எண்ணினார்கள்-
இறைவனுக்கு-
நடுவர்களாக!

இந்த நடுவர்கள்-
வாயிலாக-
இறைவனுக்கு-
"பிரார்த்தனைகள்"-எட்டும்
என்பதாக!

சிறுக சிறுக-
"இவர்களையே"-
எண்ணினார்கள்-
"காப்பவராக"!

அதனால்-
உருவங்களை-
வரைந்தார்கள்!

கற்பனையாகவும்-
வரைந்தார்கள்!

இப்படியாக-
வளர்ந்தது-
உருவ வழிபாடுகள்!

அடுத்தது-
மூட நம்பிக்கை!

கூடா நம்பிக்கை!

வைத்திருந்தார்கள்-
மூன்று-
அம்புகள்!

எக்காரியத்திலும்-
ஈடுபடுவதற்கு-
முன்-
அம்பு ஒன்றை-
எடுப்பார்கள்!

ஒன்றில்-
ஆமாம்!
மற்றொன்றில்-
வேண்டாம்!
இன்னொன்றில்-
"ஒன்றுமே இல்லாமல்"-
வைத்திருப்பார்கள்!

அம்பில் வருவதை-
வைத்தே-
காரியங்களை-
செய்வார்கள்!

"வெறுமனே " உள்ளது-
வந்துவிட்டால்-
திரும்ப திரும்ப-
எடுப்பார்கள்!

"முடிவு "-வரும்வரை-
விடமாட்டார்கள்!

குற்ற பரிகாரதிற்கும்-
நஷ்ட ஈட்டிற்கும்-
இப்படியாக!

இருந்தது-
ஏராளமாக!

அப்போது-
முன்னே -"வேதம்"கொடுக்கப்பட்டவர்கள்!

இருந்தார்கள்-
கண்டுகொள்ளாமல்!

மேலும்-
சர்வாதிகாரம்!
சிலைவணக்கம்!

இன்னும்....
இன்னும்.....

(தொடரும்....)

Tuesday 16 July 2013

இஸ்லாமும்-நபிகள் நாயகமும்! (13)

அன்றைய-
அரபு தேசம்!

புழுதி காற்று மட்டுமா!?-
வீசும்!

அனாச்சாரங்கள்-
பெருகிய நிலை!

அறியாமைகள்-
குடிகொண்ட-
நிலை!

இப்ராஹிம்(அலை)-
இஸ்மாயில் (அலை)-
வாழ்ந்த இடம்!

அவர்களின்-
சந்ததிகளும்-
வசித்த இடம்!

"அவர்கள்"-
சொல்லி சென்ற-
மார்க்கம்!

மாசுபடிய-
செய்துவிட்டது-
மக்களோட-
பழக்க வழக்கம்!

அன்றைக்கு-
"குஜா ஆ இப்னு அம்ரு"-என்பவன்-
இருந்தான்!

அவன்-
இறை நேசர் போல-
மதிப்புடன்-
இருந்தான்!

ஒரு முறை-
ஷாம் தேசம்-
சென்றான்!

அங்கு-
"ஹுபுல் "-எனும்
சிலையை-
அத்தேச மக்கள்-
வணங்கிட கண்டான்!

அது போன்ற-
சிலையை-
அவனும்-
காபதுல்லாவில்-
முதன் முதலில்-
நிறுவினான்!

மக்களையும்-
அதனை-
வணங்கிட-
அழைத்தான்!

வெளியிலிருந்து-
சிலை வணக்கம்-
இறக்குமதியானது!

இங்கிருந்தும்-
இப்பழக்கம்-
ஏற்றுமதியானது!

ஊரு ஊருக்கு-
சிலை!

குலத்திற்கு-
ஒரு சிலை!

அம்மக்கள்-
கையில்-
 ஒரு சிலையை-
வைத்திருக்கும்போது!

எறிந்திடுவார்கள்-
அதை விட-
அழகான-
சிலை கிடைக்கும்போது!

மண்ணை குவித்தும்-
வணங்கினார்கள்-
சிலையேதும்-
கிடைக்காதபோது!

லாத்-
தாத்த இர்-
உஜ்ஜா-
இச்சிலைகள் -
பிரபலமானது!

காலம்-
ஆக ஆக!

மக்களும்-
நம்பிவிட்டார்கள்-
இதுதான்-
இப்ராஹிம் (அலை)-கொண்டுவந்த
மார்க்கமாக!

(தொடரும்.....)


Monday 15 July 2013

இஸ்லாமும்-நபிகள் நாயகமும்! (12)

"ரஹீக்"-எனும்
புத்தகம்!

வரலாற்றுதொடருக்கு-
ஆதார நூலாகும்!

அப்புத்தகம்-
ஒரு -
வரலாற்றுபெட்டகம்!

அது-
ஒரு-
ஆய்வு கட்டுரை-என்பதே
சிறப்பம்சம்!

1976 மார்ச் -ல்
உலக மாநாடு-
நடந்தது!

அதில்-
உலக அளவிலான-
கட்டுரை போட்டியும்-
நடந்தது!

வந்தது-
1182 கட்டுரைகள்!

தேர்வானது-
183 கட்டுரைகள்!

இக்கட்டுரையே-
முதல் பரிசு-
 பெற்றது!

ஆசிரியர்-
பேரறிஞர் -
சபியுர்ரஹ்மான்-
ஆவார்!

இவர்-
இந்தியாவின்-
உ .பி யை-
சேர்ந்தவர்!

அரபி மொழியிலுள்ளதை-
தமிழில் எழுதியது-
உமர் ஷரீப்-
அவர்கள்!

வெளியிட்டது-
தாருல் ஹுதா-
பதிப்பகத்தார்கள்!

இறைவனின்-
சாந்தியும்-
சமாதானமும்-
உண்டாகட்டுமாக!

நல்லோர்கள் மீதும்-
சத்தியவான்கள் மீதும்-
நம் அனைவரின் மீதும்-என
தொடங்குகிறேன்-
பிரார்த்தித்தவனாக!

வருவது-
சத்திய பாதை!

அவ்வளவு-
எளியதா!?-
சத்திய பாதை!

ரத்தத்தை-
 பழகிய-
கத்திகள்-
நறுமணத்தை-
நுகருமா!?

புரண்டோடிய-
பாவங்கள்-
புண்ணியத்தை-
அடையுமா!?

நாம் பயணிப்போம்-
கேள்வியை தேடி-
பதில்களையும்-
பதில்களுக்கான-
கேள்விகளையும்-
நோக்கி!

தகிக்கும்-
வெயிலோடும்-
தாகம் கொண்ட-
நெஞ்சோடும் -
பயணிப்போம்-
பாலைவனம் நோக்கி!

(தொடரும்...)

புத்தக பெயர்;ரஹீக்.

வெளியிடுபவர்.
தாருல் ஹுதா,
சென்னை .01


Sunday 14 July 2013

இஸ்லாமும்-நபிகள் நாயகமும்!(11)

கஃபதுல்லா -எனும்
இறை இல்லம்!

புனித ஆலயம்!

மக்காவில்-
இருக்கும்-
அவ்விடம்!

உலக முஸ்லிம்கள்-
நோக்கி தொழும்-
அதே இடம்!

இன்று-
நேற்று-
அது-
உருவாகியதில்லை!

முகம்மது நபி (ஸல்)-
அவர்களால்  மட்டும் -
உருவாக்கியதில்லை!

அப்போ -
அப்போ-
புனரமைக்கப்பட்டது!

அது-
ஆதம் (அலை)-
அவர்களாலே -
கட்டப்பட்டது!

நூஹ் நபி (அலை) அவர்கள் -
காலத்து வெள்ளத்தில் -
சிதிலமடைந்தது!

பிறகு -
நபி இப்ராஹிம்-(அலை)
அவர்களாலும்!
இஸ்மாயில் (அலை)-
அவர்களாலும்-
புதுபிக்கபட்டது!

உலக முடிவு நாளில்-
இறைவன் அனைவரையும்-
ஒன்றிணைப்பான்!

நியாய தீர்ப்பு -
அளிப்பான்!

"ஒன்று  கூடுவது"-
முடியாதென்பான்-
மனிதன்!

இப்போது-
உலகிலுள்ள-
"எல்லாவிதமான"-
மக்களையும்-
ஒன்றிணைக்கவில்லையா!?-
இறைவன்!

இப்போது-
நடத்தியவன்!

அப்போது-
மட்டுமா!?-
முடியாதவன்!

"இதுவென்று" இல்லாத-
நம்மை -
படைத்தவன்!

இறந்தபின் மட்டும்-
உயிர்பிக்க முடியாதவனா!?-
அவன்!

இப்போது-
சொல்லுங்கள்!

நபிகள் நாயகம்-
முஹம்மது (ஸல்)-
அவர்களென்ன-
புதிதாகவா -!?
சொல்ல வந்தார்கள்!

இதற்கு -
முன்னிருந்த-
தூதர்களையும்-
வேதங்களையும்-
உண்மைபடுத்தவே-
வந்தார்கள்!

இனி-
நான் எடுத்திருக்கும்-
ஆதார நூலும்!

நாயகத்தின்-
வரலாறும் !

(தொடரும்...)

Saturday 13 July 2013

இஸ்லாமும் - நபிகள் நாயகமும்! (10)

இஸ்ஹாக் (அலை)-
அவர்களின்-
வழிதோன்றல்களை-
பார்த்தோம்!

இனி-
இஸ்மாயில் (அலை)பற்றியும்-
படிப்போம்!

தந்தை-
இப்ராஹிம் (அலை)-
கனவு வந்தது!

ஒரு முறையல்ல-
திரும்ப திரும்ப-
வந்தது!

முன்பு-
அலட்சியமாக-
இருந்தார்!

பின்பு-
இறை செய்தியென-
அறிந்தார்!

முடிவெடுத்தார்!

"முடித்துவிட"-
துணிந்தார்!

பயணித்தார்-
கூரிய கத்தியுடனும்!

பாசத்திற்குரிய-
இனிமை மகன்-
இஸ்மாயிலுடனும்!

தாய்மார்கள்-
ரத்தத்தை-
பாலாக தருகிறார்கள் !

தந்தைமார்கள் -
ரத்தத்தை-
வியர்வையாக்கி-
உழைக்கிறார்கள்!

இப்படிதானே-
அத்தனை குடும்பத்திலும்-
நடப்பவைகள்!

ஏன் இந்த-
தியாகங்கள்!

தன்-
பிள்ளைகள் மேலுள்ள-
பாசத்தால்!

தன் பிள்ளையவே-
இழக்க துணிந்தார்-
இப்ராஹிம் (அலை)-
இறைவன் மேலுள்ள-
நேசத்தால்!

இஸ்மாயில் (அலை)-
அவர்களும்-
அறிந்தார்!

அலறினாரா!?-
இல்லை-
அமைதியாக-
அனுமதித்தார்!

நபி இப்ராஹிம் (அலை)-
மகனை-
கிடத்தி விட்டு!

அறுக்கிறார்-
கழுத்தில்-
கத்தியைவிட்டு!

ஆனால்-
கத்திதான்-
அறுக்கவில்லை!

நபிக்கோ-
காரணம்-
தெரியவில்லை!

கத்தியின்-
கூர்மையில்-
பழுதில்லை!

அது-
அறுக்க சொல்லி-
இறைவனின்-
அனுமதியில்லை!

வானவர்-
வந்தார்!

சொன்னார்!

இறைவன்-
நபி இப்ராஹிம் (அலை)-ஐ
சோதித்து பார்த்ததை!

ஆடு பலியிட-
சொன்னதை!

அத்தியாகத்தின்-
அடையாளமாக-
தியாக திருநாள் !

அதுவே-
ஹஜ் பெருநாள்!

குர்பானி-எனும்
உயிர் பலிகள்!

ஆடு, மாடு,-
ஒட்டகங்கள்-
கொடுப்பவைகள்!

அறுத்த பிராணியின்-
மாமிசங்கள்-
பிராணியின் சொந்தக்காரருக்கு மட்டும்-
சொந்தமில்ல!

அதிலும்-
மற்றவருக்கு-
பங்குண்டு என்பதை-
மறுப்பதற்கில்லை!

அம்மாமிசங்கள்-
மூன்று பங்கு!

ஒன்று-
பிராணியின்சொந்தக்காரருக்கு-
பங்கு!

அவரின்-
உறவினருக்கு -
ஒரு பங்கு!

இன்னொன்று-
ஏழைகளுக்கு-
ஒரு பங்கு!

பங்கிட்டு-
வாழ்வதே-
இதன் பாங்கு!

(தொடரும்....)




Friday 12 July 2013

இஸ்லாமும்-நபிகள் நாயகமும்! (9)

இன்றைக்கு-
முஸ்லிம்கள்-
நோன்பிருப்பது!

இல்லை -
அது-
இன்றைக்கானவர்களுக்கு மட்டும்-
கடமையானது!

முன்னுள்ள -
சமூகத்திற்கும்-
கடமையானது!

நோன்பென்பது-
இல்லை-
வெறுமனே-
பசித்திருப்பது!

அது-
இறைவனை-
தியானித்திருப்பது!

கெட்ட செயல்களையும்-
கெட்ட வார்த்தைகளையும்-
தவிர்த்திருப்பது!

எல்லாக்காலமும்-
முஸ்லிம் சமூகம்-
"தடுக்கபட்டவைகளை"(-ஹராம்)
விட்டு -
தவிர்க்கணும்!

நோன்பு இருக்கும்-
நேரங்களிலோ-
"ஆகுமானதை"-(ஹலால்)
விட்டும்-
ஒதுங்கனும்!

நோன்பு காலமானது!

ஆன்மீக-
பயிற்சி அளிப்பது!

வறண்ட பூமியில!

துளிகள்-
விழுவதுபோல!

மண்ணும் குளிர்ந்து-
புற்கள் முளைப்பதுபோல!

இருண்டு போன-
நெஞ்சத்துல!

இயந்திரமான-
வாழ்கையில!

இரக்க குணத்தையும் -
போராட்ட குணத்தையும்-
விதைப்பது போல!

ரமழான் மாதத்தை-
அடைந்தால்!

பதின்ம வயதினர்-
கழிக்கணும்-
அம்மாதத்தை-
நோன்பினால்!

நோய்வாய்பட்டவர்களுக்கும்-
பிரயாணிகளுக்கும்-
விட்டிட அனுமதிக்கப்பட்டுள்ளது!

அவர்கள்-
பிறமாதங்களில்-
நோன்பு கணக்கிட்டு-
வைக்கலாம்!

அதுவும்-
முடியாதவர்கள்-
ஒரு ஏழைக்கு-
நடுநிலையான -
உணவளிக்கணும்!

ஆனால்-
அம்மாதத்தின்-
சிறப்பை அறிந்தால்-
நோன்பு நோற்பதே-
சிறப்பாகும்!

இதுவே-
இறை மொழியாகும்!(குர் ஆன்)

நோன்பிருப்பதால்-
நோன்பு பெருநாள்!

அது என்ன!?-
ஹஜ் பெருநாள் எனும்-
தியாக திருநாள்!

"தியாகம் ...!!?

இனி வரும்-
விபரம்!

(தொடரும்....)




Thursday 11 July 2013

இஸ்லாமும் -நபிகள் நாயகமும்! (8)

முதலில்-
இஸ்ஹாக்(அலை)-
அவர்களின்-
வழிதோன்றல்கள்!

சில-
பார்வைகள்!

அன்று-
இவர்களே-
பனிஇஸ்ராயீல் எனவும்-
இஸ்ரவேலர்கள் எனவும்-
அழைக்கப்பட்டவர்கள்!

இன்று-
யூதர்கள் எனவும்-
இஸ்ரேலியர்கள் எனவும்-
அழைக்கபடுபவர்கள்!

இனி-
இந்த-
 வழிதோன்றல்கள்!

இறைவனால்-
வழங்கப்பட்ட-
வேதங்கள்!

நபி மூசா (அலை)- (மோசஸ்)
அவர்கள்!
வழங்கப்பட்டது-
தவுராத் எனும்-
வேதம்!

நபி தாவூத்(அலை)-(டேவிட்)
அவர்கள்-
வழங்கப்பட்டது-
சபூர் எனும்-
வேதம்!

நபி ஈஸா (அலை)-(இயேசு)
அவர்கள்-
வழங்கப்பட்டது-
இன்ஜீல் (பைபிள்) எனும்-
வேதம்!


இறைவனால்-
வழங்கப்பட்ட-
அனைத்து-
 வேதத்திலும்-
இறுதி நபியின்-
செய்தி-
இருந்தது!

இறுதி நபி-
முஹம்மது (ஸல்) அவர்கள்-
இஸ்மாயில் (அலை)-
வழித்தோன்றலில் -
வந்தது-
"வேதம்பெற்றவர்களுக்கு-"
கசந்தது!

இதன் காரணமே-
யூதர்கள்-
நபிகள் நாயகத்தை-
தூற்றுவது!

நபி ஈஸா (அலை)-
தந்தை இன்றி-
பிறந்தார்கள்!

அதுவே-
இறைவனின்-
நாட்டங்கள்!

நபி முஹம்மது(ஸல்)-
அவர்களை-
மறுத்தவர்கள்-
ஏற்காதவர்கள்-
யூதர்கள்!

இறுதி நபியை-
ஏற்காமலும்-
ஈஸா (அலை)-
அவர்களை-
தேவகுமாரனாக-
சொல்பவர்கள்-
கிறிஸ்தவர்கள்!

முன்னுள்ள-
 அத்தனை-
வேதங்களையும்-
நபிமார்களையும்-
முகம்மது நபி (ஸல்)-
அவர்களையும்-
ஏற்றுக்கொண்டவர்கள்-
முஸ்லிம்கள்!


இனி வரவேண்டியது-
ஏராளங்கள்!

(தொடரும்....)

// நான் நபிமார்கள் பெயர்களை மட்டுமே இங்கு குறிப்பிட்டு உள்ளேன்.இதன் ஒவ்வொரு வரலாறையும் சொன்னால் எத்தனை தொடராகும் என கணக்கிட முடியாதவை.
இதில் சந்தேகங்களோ இருக்கலாம்.நீங்கள் உங்கள் அருகில் உள்ள மசூதி  ஆலிம்களிடம் கேட்டுக்கொள்ளலாம்.
மேலும் பலதரப்பட்ட புத்தகங்கள் உள்ளது.படிக்கலாம் .
மேலும் dr .zakir naaik அவர்கள் பேசிய பல்வேறுபட்ட தலைப்புகள்கொண்ட காணொளிகள் (video clip )
இணையத்திலும் விற்பனையிலும் உள்ளது.பார்வையிட்டுகொள்ளுங்கள்//


Wednesday 10 July 2013

இஸ்லாமும்-நபிகள் நாயகமும்!(7)

திரும்பி வந்த-
மக்கள்-
அதிர்ந்தார்கள்!

பின்பு-
"அறிந்தார்கள்"!

இப்ராஹிம் (அலை)-
மக்கள் -
முன்பாக-
நிறுத்தபட்டார்கள்!

கேள்விகள்-
கேட்கப்பட்டார்கள்!

சிலைகளை-
யார் -
உடைத்தது-
என!

சொன்னார்-
பெரிய சிலையாக-
இருக்கும் -என!

மக்களை-
பார்த்தார்!

மௌனத்தில்-
மூழ்கியதை-
கவனித்தார்!

மக்களிடம்-
பதிலுக்கு-
வழி இல்லை!

ஆனால்-
தண்டனை-
வழங்காமல்-
இல்லை!

"நம்ரூத்"-எனும்
மன்னன் -
ஆண்டான்!

நெருப்புக்குண்டத்தில் -
இப்ராஹிம் (அலை)ஐ -
வீசிட -
ஆணையிட்டான்!

வீசபட்டார்!

இறை உதவியால்-
காப்பாற்றபட்டார்!

நிற்க!
சிந்திக்க!

எந்த தூதரும்(நபி)-
சொல்லவில்லை-
தன்னை கடவுளென!

தூதரை-
கடவுளாக்கியது-
மனிதனின்-
மன இச்சைகளை-
தவிர-
வேறென்ன!?

நபிமார்கள் செய்த -
அற்புதங்கள்-
இறை உதவியால்!

மக்கள் சொன்னார்கள்-
அதனை செய்வது-
சூனியத்தால்!

சூனியம் செய்பவர்களை-
கடவுள்களாக-
பார்கிறார்கள்-
இன்று!

அதனால் ஏற்படும் -
எழுதிடும்-
தரத்திலா!?-
இருக்கிறது -
இன்று!

இப்ராஹிம் (அலை)-
அவர்களுக்கு-
சாரா (அலை)என்ற
மனைவி இருந்தார்கள்!

நீண்ட காலமாக-
குழந்தை இல்லாமல் -
தவித்தார்கள்!

ஹாஜரா (அலை)அவர்களை-
மறுமணம்-
செய்தார்கள்!

பிறந்தார்கள்!
சாரா (அலை)-
அவர்களுக்கு-
மகனாக-
இஸ்ஹாக்(அலை)-
அவர்களும்!

ஹாஜரா(அலை)-
அவர்களுக்கு-
மகனாக-
இஸ்மாயில் (அலை)-
அவர்களும்!

(தொடரும்....)









Tuesday 9 July 2013

இஸ்லாமும்-நபிகள் நாயகமும்! (6)

தச்சர் குடும்பத்தில்-
பிறந்தார்-
ஒருத்தர்!

சிறு வயது முதலே-
இறைவனை -
அறிய முற்பட்டார்!

சூரியனை-
பார்த்தார்!

சந்திரனை-
பார்த்தார்!

விண்மீன்களை-
பார்த்தார்!

இறைவனாக-
ஏற்கமறுத்தார்!

மறையகூடியதும்!

நிலையில்லாததும்!

எப்படி-
கடவுளாகும்!?

தந்தை-
சிலைகளை-
செய்து கொடுத்து-
விற்க சொல்வார் !

இவரோ-
தெருவில் போட்டு-
இழுத்து செல்வார்!

சிலை-
 நம்மை காத்திடுமா!?

இது-
தகுமா!?

கேள்விகணை-
தொடுப்பார்!

கோபகணைகளுக்கு -
ஆளாவார்!

ஊரே-
சென்றது-
திருவிழாவிற்கு!

இவர் மட்டும்-
இருந்தார்-
போகாமல்-
ஊருக்குள்!

எழுந்தார்!

சென்றார்!

சிறு சிறு-
சிலைகளை-
உடைத்தார்!

கோடாரியை-
பெரியசிலையில்-
மாட்டினார்!

யார்-
இவர்!?

கிறிஸ்துவர்களால்-
ஆப்ரகாம்-என்றும்
இஸ்லாமியர்களால்-
இப்ராஹிம் (அலை)-என்பவர்
ஆவார்!

உடைத்தவர்-
சென்றார்-
வீட்டை நோக்கி!

"சென்றவர்கள்"-
வந்தார்கள்-
ஊரை நோக்கி !

(தொடரும்....)


Monday 8 July 2013

இஸ்லாமும்-நபிகள் நாயகமும்!(5)

மக்கள்-
மாசுகொண்ட-
மனங்களால்-
மல்லாந்தபோது!

பாவகடலில்-
மூழ்கியபோது!

படைத்தவன்-
அதிசீக்கிரத்தில்-
பழிவாங்கவில்லை!

நல்வழி-எனும்
நேர்வழியை-
சொல்லாமலில்லை!

ஒவ்வொரு -
சமூகத்திற்கும்-
தன் தூதரை(நபி)-
அனுப்பினான்!

அத்தூதரை-
மனிதர்களிருந்தே-
தேர்ந்தெடுத்தான்!

கேட்கத்தான்-
பெரும்பாலானவர்களுக்கு-
மனமில்லை!

இம்மக்களை-
இறைவனும்-
தண்டிக்காமலில்லை!

நபி நூஹ் (அலை)-
மக்களை-
நல் வழிக்கு-
அழைத்தார்கள்!

செவி சாய்த்தது-
மிக சொற்பமானவர்கள்!

வரம்பு மீறிக்கொண்டே-
போனார்கள்!

இறுதியில்-
பெரும்கொண்ட-
வெள்ள பிரளயத்தில்-
அழிந்தார்கள்!

நல் வழி சென்ற-
நம்பிக்கையாளர்கள்-
கப்பலில் காப்பாற்றபட்டார்கள்!

நபி லூத் (அலை)-
சமூகம்!

ஓரின சேர்கையாளர்களாகும்!

தப்பு -என
சொல்லிபார்த்தார்கள்!

தடுத்தும்பார்தார்கள்!

மக்கள்-
கேட்டார்கள்!?

தண்டனை சொல்ல-
வந்த -
வானவர்கள்!

அவர்களையும்-
"தப்பான "-
காரியத்திற்கு-
அழைக்கவந்தார்கள்!

லூத் நபி (அலை)-
அவர்களும்-
நல்வழி வந்தவர்களும்-
காப்பாற்றபட்டார்கள்!

அநியாயக்காரர்கள்-
கல்மழையில்-
செத்தழிந்தார்கள்!

இறைவன்!
அன்பாளன்!
அருளாளன்!

ஆனால்-
மனிதன்!?

ஆயிரக்கணக்கில்-
போடலாம்-
கேள்விக்குறிகள்!

இன்றைக்கும்-
உலகில் நடக்கும்-
அனாச்சாரங்கள்!?

(தொடரும்....)







Sunday 7 July 2013

இஸ்லாமும்-நபிகள் நாயகமும்! (4)

தம்பதிகள்-
ஒவ்வொரு-
பிரசவத்தில்!

இருந்தது-
இருபாலினங்கள்!

வேறு வேறு-
நேரத்தில்-
பிறந்தவர்கள்!

திருமணம்-
செய்துகொண்டார்கள்!

மக்கள் தொகை-
பெருக்கத்திற்கு-
இதுவழியானது!

மக்கள் தொகையும்-
பெருகியது!

ஆனால்-
மனிதர்களின்-
மன இச்சைகள்!?

சைத்தானின்-
தூண்டுதல்கள்!

மனிதசமூகத்தை-
கெடுத்தவைகள்!

ஆதம்-
ஹவ்வாவை-
படைத்தது!

அவர்கள்-
மக்களிடம்-
சொன்னது!

இறைவன்-
ஒருவனை-
வணங்குவது!

ஆனால்-
மனித உள்ளங்களானது!?

மாறு செய்தது!

"இணை" வைத்தது!

உருவவழிபாடுகள்!

சிலை வணக்கங்கள்!

இன்னும்-
எத்தனையோ-
தவறுதல்கள்!

மனம்போன-
போக்குகள்!

இன்றும்-
காணக்கூடியது!

சமகாலத்தில்-
வாழ்ந்த மனிதர்கள்-
தெய்வங்களாக-
வணங்கபடுவது!

பெரியவர்களை-
நல்லவர்களை-
மதிக்ககூடாதென்று-
இஸ்லாம் சொல்லவில்லை!

வணக்கத்திற்குரியவன்-
இறைவனை தவிர்த்து-
யாரும் இல்லை-இதுதான்
இஸ்லாத்தின் நிலை!

மனிதன்-
 தவறிடும்போதேல்லாம்!

இறைவன்-
நல்வழிகள்-
அமைத்தான்-
அதற்கெல்லாம்!

(தொடரும்...)





Saturday 6 July 2013

இஸ்லாமும்-நபிகள் நாயகமும்! (3)

இறைவன்-
முதல் மனிதனை-(ஆதம்)
களிமண்ணால்-
படைத்தான்!

"படைக்கபட்ட்தற்கு"-
படைத்தவன்-
வானவர்களுக்கு-
சிரம்பணிந்திட -
கட்டளையிட்டான்!

எல்லோரும்-
சிரம்பணிய -
மறுத்தான்-
ஒருத்தன்!

அவன்தான்-
சைத்தான்!(சாத்தான்)

நெருப்பால்-
படைக்கப்பட்டவன்-எனும்
எண்ணம் -
சைத்தானுக்கு!

அதுதான்-
காரணம்-
சிரம்பணிய-
மறுத்ததற்கு!

இறைவனின்-
சாபத்திற்கு-
உள்ளானான்!

மனித சமூகத்தில்-
வழி கெடுப்பேன்-என
இறைவனிடம்-
அவகாசம் -
கேட்டான்!

இறைவனும்-
அனுமதித்தான்!

சைத்தான்-
அன்றுமுதல்-
வழிகெடுக்க-
ஆரம்பித்தான்!

இறைவனும்-
மனிதனை-
சோதித்து அறிய-
வழி வகுத்தான்!

ஆதமை-
படைத்தவன்!

அவருக்கு-
துணையாக-
ஹவ்வாவை-
படைத்தான்!

சுற்றிவர-
புசித்திட-
தாராளமாக -
அனுமதிதான்!

ஒரு பழத்தை மட்டும்-
புசிக்க-
அனுமதி மறுத்தான்!

இதில்தான்-
சைத்தான்-
சூழ்ச்சி-
செய்தான்!

ஆசைகாட்டி-
மோசம் செய்தான்!

தம்பதிகளை-
இறைவனின்-
கோபத்திற்கு-
உள்ளாக்கினான்!

இறைவன்-
விண்ணுலகில்-
இருந்தவர்களை!

மண்ணுலகிற்கு-
தண்டனையாக-
அனுப்பினான்-
அத்தம்பதிகளை!

பூமியில்-
வெவ்வேறு திசையில்-
இறக்கிடபட்டார்கள் !

ஒருவரை -
ஒருவர் காண-
அலைந்தார்கள்!

இறைவனிடம்-
மன்னிப்புக்காக-
மன்றாடினார்கள்!

இருவரும்-
ஒருவரை-
ஒருவர்-
சந்தித்தார்கள்!

அந்த-
ஆதம்-
ஹவ்வா"-தான்!

கிறிஸ்தவ நண்பர்கள்-
சொல்லும் -
"ஆதாம்-"
ஏவாள்தான் !

எப்படி!?
இப்படி!?

வரும் ஒவ்வொன்றாக-
முறைப்படி!

(தொடரும்...)

ஆதம் (அலை ) ஹவ்வா (அலை)
இவர்களின்மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக!

நபிமார்கள் பெயரை மற்றும் சத்தியவான்கள் பெயரை சொல்லும்போதோ-எழுதும்போதோ "அலைஹிஸ்ஸலாம்" சொல்லுவார்கள் எழுதுவார்கள்.


Friday 5 July 2013

இஸ்லாமும்-நபிகள் நாயகமும் !(2)

இஸ்லாம் -எனும்
மார்க்கமானது!

உலகின்-
 அனைவருக்கும்-
பொதுவானது!

பரம்பரை-
இஸ்லாமியர்களின்-
சொத்து அல்ல!

"இணைந்திட-"
வருபவர்களை-
மறுத்திட யாருக்கும்-
உரிமை இல்ல!

ஒரு பிரதேசத்தில்-
அடங்குவதல்ல!

எந்த மக்களுக்கும்-
தடை இல்ல!

நபிகள் -
புதிதாக-
சொன்னார்களா!?

அரபு தேசத்தில்-
"அவர்கள்"-
சொன்னதை-
மற்றவர்களும்-
ஏற்கனுங்களா!?

இது-
தப்பில்லையா!?

உலகெல்லாம்-
பரவியது-
சந்தேகம்-
வருகிறதில்லையா!?

இன்னும்-
இதுபோன்ற-
சந்தேகங்கள்!

குற்றசாட்டுகள்!

நாம்-
பறக்கும்-
பட்டத்தை-
 காண்கிறோம்!

அதன்-
நூலை-
பார்க்க தவறுகிறோம்!

நபிகளாரோடு-
மட்டும்-
இஸ்லாத்தை அறிந்தால்!

சந்தேகம்-
மிகைக்கும்-
அறியாமையால்!

இவை-
தண்டிலிருந்து-
கிளையை காண்பது-
போன்றது!

அதற்காகவே-
ஆணிவேர்வரை-
செல்ல வேண்டியுள்ளது!

சின்னதொரு-
கண்ணோட்டம்!

அல்லது-
முன்னோட்டம்!

(தொடரும்.....)

Thursday 4 July 2013

இஸ்லாமும்-நபிகள் நாயகமும்! (1)

சொல்லிட-
போவது-
புதிய விஷயம் அல்ல!

சில வருடங்கள்-
மட்டுமல்ல!

ஆயிரம் வருடங்களுக்கும்-
மேலாக!

வலம் வருகிறது-
போற்றகூடியதாக!

தூற்ற கூடியதாக!

அறிந்திட-
 ஆவல் கொண்டதாக!

இது வரைக்கும்-
முடிந்திடாததாக!

இனிமேலும்-
முடிந்திடுமா!?-
சொல்லமுடியாததாக!

எழுதிட-
ஆசை-
எனக்கும்-
"அவ்விசயத்தை"!

ஆனாலும்-
புரியணும்-எனும்
அவசியத்தை!

தன்னை விட-
மூன்று மடங்கு-
கனமானதை-
தள்ளி செல்லுமாம்-
எறும்பு -
உயிரியல்!

அந்த -
நிலையில்தான்-
இத்தொடரை-
எழுத -
முனைகையில்!

இனி-
என்தளதிற்கு-
புதியவர்கள்-
வரலாம்!

பாராட்டவும்!

வசைபாடவும்!

எது-
எப்படியோ!?

உறங்கிடுமோ-!?
உண்மையோ!?

முனைகிறது-
சமுத்திரத்தை-
சுற்றி வர-
நுரை குமிழி!

"பேரொளியை"-
எட்டி பார்க்கிறது-
ஒரு சிமிழி!

(தொடரும்....)




Wednesday 3 July 2013

பிரியாதிருப்பது....!

பிரியாதிருப்பது-
வரம் -
போன்றது!

ஆனாலும்-
பிரிவின்போதுதான்-
அது உணரபடுகிறது!

Tuesday 2 July 2013

அப்துல் நசீர் 76 !

அடித்து சென்ற-
வெள்ளத்திலும்!

தத்தளித்த-
உடமைகளிலும்!

கொள்ளை அடித்த-
கொடூரர்கள்!

அரசியல் செய்த-
அசிங்கங்கள்!

இவர்கள்-
இற்று போன-
இதயங்கள்!

தன் உயிரை-
பணயம் வைத்து-
மீட்ட-
ராணுவ வீரர்கள்!

தனி மனித-
உதவிகள்-
மெச்சதகுந்தவைகள்!

பதிரிநாத்
அருகில் இருந்த -
கிராமம்!

சூழ்ந்தது-
வெள்ளம்!

தண்ணியோடு-
போராட்டம்!

நடத்தினார்-
எழுபத்தாறு வயது-
இளவட்டம்!

இருநூறு பேரை-
நீந்தி -
காப்பாற்றி உள்ளார்!

அப்துல் நசீர்-எனும்
பெரியவர்!

உதவிட-
முக்கியமா.!?
பதவியும்!
அதிகாரமும்!

அதை விட-
முக்கியம்-
நல்ல மனம்!

பெரியவரே!

உங்களை -
போன்றவர்கள்தான்-
மதிப்புக்குரியவரே!

// தகவலுக்கு நன்றி -
வைகறை முகநூல் பக்கத்திற்கு//




வலி தீர......!

வாழ்க்கை பாதை-
பட்டுக்கம்பளம்-
விரித்தது அல்ல!

"பதம் "பார்த்திடும்-
பாறைகற்கள்-
இல்லாமலில்ல!

வார்த்தைகளில்-
வாள் வீச்சு-
இல்லாமலில்லை!

சூழ்ச்சிகளில்-
"சொருகிடும்"-
வலியில்லாமலில்லை!

என்ன-
செய்வது!?

வாழ்கையே-
வலிகளால்-
நிறைந்தது!

ஆனாலும்-
தாங்கித்தானே-
ஆகணும்!

வலி தீர-
வழியை-
தேடித்தானே-
பார்க்கணும்!



Monday 1 July 2013

பிரவீன்!

பிரவீன்!

நீ-
ஒரு வீரன்!

பலரது-
வாழ்வு-
அர்த்தமற்றது!

சிலரது-
மரணமோ-
அர்த்தம் பொதிந்தது!

உத்தரகாண்டில்-
ராணுவ சீருடை அணிந்து-
மக்களை காப்பாற்றினாய்!

ஏனோ!?-
விமானவிபத்தில்-
உயிரிழந்தாய்!

நீ!
தேச பணியில்-
உயிரை விட்டது!

இன்று-
உன் குடும்பத்திற்கு-
தேசமே கடன்பட்டு-
நிற்கிறது!


ஏங்க...!?

செல்லபிராணியெல்லாம்
வளக்குறாங்க!

கேட்டா-
பணகாரவுங்க!

ஏங்க...!?

எத்தனை-
அநாதை பிள்ளைங்க!?

உலகத்துல-
வாழுறாங்க!

ஒன்னையாவது-
வளர்க்களாமேங்க....!!