Friday 31 May 2013

நேசம்..!

நேசம் கொள்ளாதவன்-
நானில்லை!

ஏனோ-
"நேசத்துக்குரியவர்கள்"-
என்னை-
நேசிக்கவில்லை!

பொறாமை..!

தன்னிடமுள்ள-
"மலையளவும்-"
தெரியாது-
பிரமாண்டமாக!

யாசிப்பவர்-
"தட்டில் கிடப்பது"-
தெரியும்-
இமயமாக!

Thursday 30 May 2013

போராட்ட குணத்தால்...!!

மலையை-
வெல்ல முடியாது-
எலியால்!

ஆனால்-
மலைக்குள்-
வளையை வைக்குது-
தன் மதியால்!

இன்னல்கள்-
இல்லாமல்-
வாழ முடியாது-
நம்மால்!

இன்னல்களை-
எதிர்த்துதான்-
வாழனும்-
போராட்ட குணத்தால்!


கண்களின் வழி....!!


கண்களின்- 
வழி-
புகுந்தாய்!

நெஞ்சுக்குழி-
நிறைந்தாய்!

நான்-
அழைத்து-
நீ!-
வரவில்லை!

அழுதாலும்-
மனதில்-
உன் நினைவுகள்-
அழியவில்லை!









Wednesday 29 May 2013

மனிதா..... !!

வேரினை-
புதைந்திட-
செய்தவன்!

அது-
நீரை தேடிடும்-
திறனையும்-
வைத்தான்!

மனிதா!
சிந்தித்து பார் !
உனக்கு-
சோதனையை தந்த-
இறைவன்!

அது-
தீர்ந்திட-
வழியையும்-
வைத்திருப்பான்.!!!

"கவிதை வலி" !

எத்தனை-
வலி-
"சிந்தனை கருவை"-
வார்த்தையில்-
வடித்திட!

எப்பேர்பட்ட-!!
வலி-
உயிரணுவை-
குழந்தையாக-
பெற்றிட!

"கவிதை வலி-"
சொல்ல-
 வார்த்தைகள் உண்டு!

தாய்மை வலி-
சொல்ல-
வார்த்தைகள் உண்டு...!!?

Tuesday 28 May 2013

படிச்சி......!!?

நான் -
ஒன்னும்-
புத்தகங்களை-
"படிச்சி -
கிழிச்சவனில்லை!"

ஆனால்-
படிச்சவைகளில்-
பல-
என்னை-
"கிழிச்சி எறியாமல்-"
இருக்கவில்லை!

உருப்படாதவன்!

உருப்படாதவன்!
வீணாய் போனவன்!

மூடன்!
முரடன்!

இப்படியாக-
வார்த்தைகளில்-
நானே-
உட்பட்டவன்!

இதில்-
எதுவும்-
என்னை-
சுட்டதில்லை!

என்னவளே-
உன் மௌனம்-
ஏனோ..!
என்னை-
 பொசுக்காமல்-
விடவில்லை!

Monday 27 May 2013

தொலைந்திட...!

விரும்பவில்லை-
"தொலைந்ததை"
தேடிட!

விருப்பம்-
"தேடலில்"-
தொலைந்திட!

ஆம்-
கவிதைக்கு-
வார்த்தைகள்-
கிடைத்திட...!

Sunday 26 May 2013

பெண்ணினம்...! (28)

பெண்ணினமே!

மாறவேண்டியது-
உன் மனமே!

இவ்வுலகில்-
ஆணெல்லாம்-
மோசம் இல்லை!

ஆனாலும்-
எல்லோரும்-
நல்லவர்கள் இல்லை!

ஆன்மிகவாதி!
அரசியல்வாதி!

முனைவர்கள்!
முட்டாள்கள்!

இதிலில்லாமல்-
இன்னும்-
எத்தனை பேர்கள்!?

அன்று-
நடந்தது-
பெண்ணை-
சீரழித்தது-
மானபங்கத்தால்!

இன்று-
நடக்கிறது-
சிறுமிகளும்-
சீரழிகிறதே-
பலாத்காரத்தால்!

பரமக்குடியில்-
ஏழுவயது-
சிறுமி!

நெல்லை மாவட்டத்தில்-
பதினான்கு வயது-
சிறுமி!

இப்படியாக-
தொடர்கிறதே-
செய்தி!

எனக்கோ-
படிக்கும்போதெல்லாம்-
நெஞ்சுக்குள்-
தீ!

சிறுமிகளையே-
சீரழிக்கும்-
நாய்கள்-
பெருகி விட்டன!

இளம்பெண்களே-
உங்கள் பாதுகாப்புதான்-
என்ன!?

உங்களை-
நீங்களே!
பாதுகாக்கணும்!

ஆதலால்-
"அனைத்து விசயங்களிலும் -"
எச்சரிக்கையாக -
இருக்கணும்!

எல்லா ஆணிலும்-
பெண்ணிலும்-
இச்சை எனும்-
வெறி நாய்-
இருக்கு!

எப்போது-
வேண்டுமானாலும்-
"பசி"தீர்க்க-
இருக்கு!

அந்நியரிடம்-
"நெருங்காமல்"-
இருப்பது-
நலம்!

எல்லோரையும்-
நம்பினால்-
மிச்சம்-
அவமானம்!

முடிவு-
உங்களிடம்!

வேறு -
சொல்ல என்ன-
இருக்கு-
என்னிடம்..!!

-----முற்றும்-------

// சிறுமிகள் விவகாரங்கள் முக நூலில் கனி என்பவர் பகிர்ந்திட்ட செய்தி.//
// இக்கவிதை தொடரின் சிந்தனைக்கு புள்ளியாக இருந்தது சகோதரி ஆலியா என்பவர்.
அவருக்கும் மிக்க நன்றி//





Saturday 25 May 2013

பெண்ணினம்...! (27)

ஒன்றுக்கும் மேல்-
"துணை "-
தேவையானால்!

உடல் பலமும்-
செல்வ பலமும்-
இருக்குமானால்!

"முதலுக்கு"-
மோசம் இல்லாமல்-
இருந்திட-
முடியுமானால்'

"வரவிற்கும்"-
"நட்டம் " இல்லாமல்-
நடந்திட-
முடியுமானால்!

இன்னொரு தாரம்-என
நான்கு மனைவிகள் வரை-
மணக்கலாம்!

இல்லைஎன்றால்-
ஒன்றோடு இருந்திடலாம்!

இதுவே-
இஸ்லாமிய சட்டமாகும்!

இது-
கட்டாயம்-
இல்லை!

அனுமதியை-
மட்டுமே தவிர-
வேறில்லை!

இதில்-
கள்ள உறவு-
இல்லை!

பிள்ளைக்கு-
அப்பன் பேர்-
தேட வேண்டியதில்லை!

"மண ஒப்பந்தம்-"
நடந்தால்தான்-
உறவாட முடியும்!

"விவகாரத்து"-
வேண்டுமானாலும்-
சட்டப்படியே-
"முடிக்க" முடியும்!

"தப்பான"-
உறவுகள்-
சொல்லிகொள்கிறார்கள்-
பெருமையாக!

"பாதுகாப்பான"-(பலதார மணம்)
திருமணத்தை-
தூற்றுகிறார்கள்-
கொடுமையாக!

நீங்களே-
எண்ணிப்பாருங்கள்!-
எத்தனை முஸ்லிம்கள்-
"ஒன்றுக்குமேல்"-
மணம் முடித்துள்ளார்கள்!?

ஒவ்வொரு ஊரிலும்-
விரல் விட்டு-
எண்ணிடலாம்-
அவ்வளவு -
குறைவானவர்கள்!

இன்னும் -
இதனை-
விளக்க முடியும்!

ஆனாலும்-
நிறுத்துகிறேன்!
காரணம்-
கவிதை நீண்டிடும்!

(தொடரும்...)

//இன்னும் நீங்கள் அறிந்திட இரு புத்தகங்கள் சொல்கிறேன்.
முடிந்தால் வாங்கி படியுங்கள்.

புத்தக பெயர்;இஸ்லாம் எளிய அறிமுகம்.
ஆசிரியர்;நாகூர் ரூமி.
வெளியீடு.கிழக்கு பதிப்பகம்.

மற்றொண்டு-
புத்தக பெயர்; உங்கள் இதயத்துடன் இஸ்லாம் பேசுகிறது.
ஆசிரியர்;மன்சூர்.
வெளியீடு;இலக்கியசோலை//



Friday 24 May 2013

பெண்ணினம்..!(26)

சங்க காலத்திலும்!
இந்த காலத்திலும்!

மன்னராட்சியிலும்!
மக்களாட்சியிலும்!

நடந்தது-
வேறு வேறு-
பேராலும்!

அந்தபுரங்களாக!
தேவதாசி முறைகளாக!

சின்ன வீடுகளாக!
இன்னும் பல-
வியூகங்களாக!

ஆணுக்கு-
மன்மதன்!-
பேரு!

பெண்ணுக்கு...!?
பேரு..!?

ஆணின் குடும்பம்!
சப்பை கட்டு கட்டும்!

ஆனால்-
பெண்ணின் குடும்பம்!?

தலை குனிந்து-
நிற்கும்!

அவ்வுறவில் வந்த-
சந்ததிகள்-
சந்தி சிரிக்கும்!

ஒருவனுக்கு-
ஒருத்தி!-
நம் தேச பண்பாடு!

நல்லாதான்-
இருக்கு-
ஆனால்-
உண்மை நிலைப்பாடு!?

எய்ட்ஸ் நோயாளிகள்-
எண்ணிக்கையில்-
முதல் ஐந்திடத்தில்-
நம் தேசத்திற்கும்-
இடமுண்டு!

அப்படியானால்-
அப்பண்பாடு-
எங்கே-
உண்டு!?

"ஒன்றோடு-"
நின்று கொண்டால்-
நலம்!

ஒன்றுக்கும்-
மேற்பட்டால்-
என்னாகும்!?

பெண்களையும்-
பாதுகாக்கணும்!

அதற்கு-
வேறு வழி இருப்பதையும்-
உணரனும்!

(தொடரும்...)







Wednesday 22 May 2013

பெண்ணினம்..! (25).

தப்பு -
நடப்பதில்-
எல்லோருக்கும்-
கவலை இருக்கு!

ஆனால்-
அதன் வழியை-
அறிய-
நமக்கு-
ஆர்வம்-
இருக்கு!?

பார்ப்போம்-
சில-
வரும்-
வழியை!

நம்முடன்-
கலந்திட்ட-
கொடுமையை!

ஒருபுறம்-
குடிச்சிட்டு-
வண்டி ஓட்டாதே-
அறிவிப்பு பலகை!

எதிர்புறம்-
தெரிவிக்குது-
"பார்கிங் வசதி "உள்ள-
மதுபான கடையை!

வண்டியில-
குடிக்க வருகிறவன்!

குடிச்சிட்டு-
வண்டியை-
தள்ளிகிட்டா-
போவான்!?

"தீபிடிக்க -
தீபிடிக்க...-
பாடலுக்கு-
கெட்ட ஆட்டம்-
ஆடபடுது!

இது-
குடும்பத்தோட-
பார்க்கபடுது!

மனவியலாளர்-
சொல்வது-
கள்ள உறவுக்கு-
தொலைக்காட்சி தொடரே-
காரணம்!

இன்று-
தொடர் பார்க்காத-
வீடு இருப்பது-
அதிசயம்!

இது போலவே-
வாழ்கை துணையை-
இழந்தவர்களை!

ஏற்றுகொள்ள -
முடியாது-
காலமெல்லாம்-
"இப்படியே"-
இருக்க சொல்வதை!

மானுடங்கள்-
உணர்சிகளின்-
வெளி பாடு!

அம்மானுடம்-
உணர்வுகளை-
கட்டு படுத்துவதோ-
பெரும்பாடு!

"முடியும்" என்பவரை-
கட்டாயபடுத்த -
சொல்லவில்லை!

ஆனால்-
மறு மணத்திற்கு-
தடை விதிக்க-
யாருக்கும்-
உரிமையில்லை!

உலகம்-
மறுமணம்-
செய்யும்-
ஆண்களையாவது-
ஏற்றுகொள்கிறது!

பெண்களையோ-
தூற்றுகிறது!

நடக்கிறது-
துணையோடு-
இருப்பவர்களையே-
"நூல் " விடும்-
சதி!

இப்படியானகாலத்தில்-
தனிமையானவர்களின்-
கதி!?

ஆதலால்-
தப்பில்லை-
மறுமணத்தில்!

ஆனாலும்-
யாரையும்-
திணிக்க முடியாது-
மறு மணத்தில்!

இன்னும்-
ஒரு வழி இருக்கு!

அறிந்திட-
நீங்கள் -
பொறுத்திட-
 வேண்டி இருக்கு..!

(தொடரும்...)

Tuesday 21 May 2013

பெண்ணினம்...! (24)

தேக தேவையை-
தீர்த்து கொள்ளும்-
தேவையில்லாதவர்களையோ!

காதல் எனும் பேரில்-
காம வேட்டை-
நடத்துபவர்களையோ!

குடும்ப கண்ணியத்தை-
குலைக்கும்-
கள்ள காதலர்களையோ!

மனம் ஒத்தால்-
சேர்ந்து வாழும்-
மானம் கெட்டவர்களையோ!?

எழுதுவது-
தேவையோ!?

இப்படியாக-
எப்படியோ-
வாழும்-
பலர்!

ஆனால்-
இப்படிதான் -
வாழனும் என-
நினைத்த சிலர்!

நோயாலோ!
விபத்தாலோ!

சில பல-
காரணத்தாலோ!

"துணைகளை-"
இழந்தாலே!

மிச்சவாழ்வையும்-
கழிக்கனுமா-
கண்ணீராலே!

"தப்பு-"
செய்பவர்கள்-
தண்டிக்கபடகூடியவர்கள்!

முன்னே-
கூறியவர்கள்!

தப்பில்-
விழாமல்-
தடுக்கப்பட கூடியவர்கள்!

பின்னே-
கூறியவர்கள்!

(தொடரும்...)




Monday 20 May 2013

பெண்ணினம்..!(23)

இனி-
மும்பை-
சிகப்பு விளக்கு-
பற்றியது!

படித்தால்-
கொதிக்கும்-
உங்கள் -
மனமானது!

"கம்யுனிச காம்பாக்ட்டில்"-
வெளிவந்தது-
சிகப்பு விளக்கின்-
ஆய்வு!

"அப்பெண்களில்"-
சிலரை சந்திக்க-
சமூக ஆர்வலரில்-
சிலர் முடிவு!

அப்பெண்கள்-
சொன்ன -
காரணங்கள்!

ஆறாத-
ஆற்ற முடியாத-
ரணங்கள்!

எங்கள் -
பசியை-
தாங்கி கொள்வோம்!

எங்கள்-
குழந்தைகளின்-
பசியை எப்படி-
போக்குவோம்!?

அவர்களின்-
கணவர்கள்-
உறவுகள்-
என்ன-
ஆனார்கள்!?

இப்படியாக-
நம்மில்-
எழும் பல-
கேள்விகள்!

ஆம்-
"அவர்களின்"-
உறவுகள்-
சேர்ந்துவிட்டார்கள்!

இல்லையென்றால்-
"சேர்க்கபட்டார்கள்"!

உயிர் இழந்தவர்களாக-
கலவரத்தால்!

இதில்-
யாரை குற்றம்-
சொல்ல!?-
அபலைகளையா!?

இல்லை-
வேடிக்கை பார்க்கும்-
நம்மையா!?

ஓ!
மதவெறியர்களே!
சாதி வெறியர்களே!

இன வெறியர்களே!
உங்கள் வெறியூட்டும்-
பேச்சுகளால் -
அழிந்தது-
எத்தனை பேர்களோ!?

இப்பாவம்தான்-
உங்களை விட்டு-
நீங்குமா!?

பவ தொழிலுக்கு-
தள்ளிய
உங்களைதான்-
கண்ணீர்கள் -
கலங்கடிக்காமல்-
விட்டுடுமா!?

(தொடரும்...)

// கம்யுனிச காம்பாக்ட்-ஒரு ஆங்கில இதழ். இதன் தகவலை உரையாடலின்போது வழக்கறிஞர்
மூலம் செவி வழி அறிந்தது//







Sunday 19 May 2013

பெண்ணினம்...! (22)

கற்பு!
ஆண்கள்-
பெண்ணிடம்-
எதிர்பார்ப்பது!

தன்னை -
தானே-
பரிசோதிக்க-
மறந்தது!

பெண்களிடம் மட்டும்-
கற்பு-
பொக்கிஷமா!?

ஆணிடம் மட்டும்-
"அது"-
தெருவில் கிடக்கும்-
பொருளாகுமா!?

உண்பது-
பாலின -
வேறுபாடென்றால்!

வித்தியாசபடுமோ-
தின்பது-
மலமென்றால்!

ஆண் -
"சேற்றை "கண்டால்-
மிதிப்பானாம்!

ஆற்றை-
கண்டால்-
கழுவுவானாம்!

இப்படியாக-
கிராமங்களில்-
சொல்வாங்க!

அப்படிஎன்றால்-
ஏன்-
விஷத்தை கண்டால்-
குடிக்க மறுக்குறாங்க!?

பண திமிரு!
தேக திமிரு!

இதுவே-
எல்லை மீற-
வைக்குது-
பாரு!

அழகிகள்-
கைதாம்-
செய்திகள்-
சொல்லும்!

"காசு வாங்கி"-
கட்டுபவனை-
ஏன் ஆண்பிள்ளை -என
சமூகம் -
சொல்லுது!?

பாம்பு சாமியார்-
ஆசிரத்தில்-
கைதுகள்-
நடந்தது!

காரணம்-
விபச்சாரம்-
நடந்தது!

கைதான-
பெண்களெல்லாம்-
எப்பேர்ப்பட்டவர்கள்!

எல்லாம்-
பட்டம் படித்தவர்கள்!

காரணம்-
என்ன!?
ஆசை!

பணத்தாசை!

(தொடரும்....)

// சில வருடங்கள் முன்பாக டெல்லியில் நடந்த சம்பவம்.
பாம்பு சாமியார் விவகாரம்//









Saturday 18 May 2013

பெண்ணினம்....!(21)

இனி-
பார்ப்பது!

பெண்மையை-
குதறுவது!

புசித்து-
பிரகாசிப்பது!

துடி துடிக்க-
உண்பது!

உணவுக்காக-
துடிப்பது!

"வெறிகளால்"-
வேட்டையாடபடுவது!

மணம் பூசிக்கொண்டு -
சாக்கடையை -
பூசுவது!

"பூசியது-"
கேவலமென்றாலும்-
பெருமிதமாக-
பேசுவது!

எப்போதுமே-
"அச்செயல்"-
தப்பு!

இப்போது-
சொல்வது-
முக்கியமாம்-
"பாதுகாப்பு"!

கண்ணை -
மூடிக்கொண்டால்-
கழிவறை-
மணக்குமா!?

கள்ளி முட்கள்தான்-
குத்திட-
மறுக்குமா!?

வில்லங்கமான-
சமாசாரம்!

அதுதான்-
விபச்சாரம்!

(தொடரும்...)




Thursday 16 May 2013

பெண்ணினம்...!(20)

ஒன்றின் மீது-
மரியாதை-
வந்திட!

முயலனும்-
அதன்-
மதிப்பு-
அறிந்திட!

ஆயிரம் ரூபாய்-
தாளானாலும்!

வைரக்கல்லேயானாலும் !

அதன்-
"உண்மை "-
தெரிந்தாலே!

பாதுகாக்கப்படும்-
அதன்-
தன்மையாலே!

இல்லையானால்!-
ரூபாய் தாள்-
கிழிபடும்!

வைரக்கல்-
உடைபடும்!

அதுபோலவே-
பெண்ணினம்!

ஆனால்-
பெண்களே-
அறியாததே-
ஆண்களுக்கு-
சாதகம்!

பெண்ணை-
கழுத்தை-
பிடித்து-
"தப்பானவற்றில்-"
தள்ளவும்!

இல்லைஎன்றால்-
தானாக-
"அதில்-"
விழவும்!

புழுவுக்கு-
ஆசைப்பட்டு-
தூண்டில் மாட்டும்-
மீனை போல!

"தேங்காய் சில்லுக்கு"-
ஆசை பட்டு-
பொறிக்குள் மாட்டும்-
எலியை போல!

கடந்த-
ஒலிம்பிக் -
நினைவிருக்காங்க!?

அப்போ-
நடந்த -
"சமாச்சாரம்"-
இப்போ-
நினைவூட்டுறேங்க!

ஒரு பெண்கள்-
அமைப்பு-
போராட்டம்-
செஞ்சாங்க!

அதுவும்-
எப்படி-
தெரியுமாங்க!?

மேல் சட்டை-
மட்டுமல்ல-
"மேலே" எதுவுமே-
இல்லாமேங்க!

காரணாம்-
தெரியுமாங்க!

சில பெண்கள்-
புர்கா-(ஸ்கார்ப்)
அணிந்ததுதாங்க!

ஏங்க!

உள்ளாடையோட-
ஓடுவதும்-
ஆடுவதும்-
"அவங்க "-
"அவங்க"-
உரிமைங்கிறாங்க!

ஒழுங்கா-
உடை அணிந்து-
விளையாடியது-
என்ன-
தப்புங்க!?

என்னமோ-
போங்க...!?

(தொடரும்...)

//அவ்வமைப்பு பெயரை குறிப்பிட விருப்பமில்லை.
அப்பெயரை போட்டு நான் தகவல் கணினியில் தேடியதற்கு அதிகமாக
"தேவையில்லாததே" கண்ணில் பட்டது.யாரும் அறிய விருப்பமாயில் பின்னூட்டம் இடுங்கள்.உங்கள் தளத்தில் தெரியபடுத்துகிறேன்//




Wednesday 15 May 2013

பெண்ணினம்...! (19)

பிரபலங்கள்-
வீடு முற்றுகை-என
சொல்லப்பட்டது!

காரணம்-
பாலியல் தொந்தரவு-என
கேள்வி பட்டது!

சரி -
நல்லது!

குற்றம் சாட்டிய-
அதே நடிகை!

பிறந்த நாளின்போது-
கொடுத்தால்-
ஒருவருக்கு-
முத்தத்தை!

அவர்-
யார் !?-
குற்றம் சுமந்தவரின்-
உறவினர்!

அவரும்-
ஒரு -
நடிகர்!

வழியை-
இவர்களே-
காட்டுவார்களாம்!!

ஆனால்-
"வாராதே"-
என்பார்களாம்!!

நாமெல்லாம்-
அதனாலென்னப்பா!?-
அவர்கள் சுதந்திரம்-
என்போமானால்!

ஒத்துகொள்கிறேன்-
பின் வருபவைகளையும்-
சரி என்போமானால்!

"காற்று வரட்டும்"-
என்றவர்-
"கதவை சாத்தியதை"-
சரி என்று-
சொல்வோமானால்!

நெடுஞ்சாலையில்-
நடுவில்-
ஒருவன்-
சிறு நீர் கழித்து கொண்டு-
வாகனத்தை ஒதுங்க-
சொல்வானேயானால்!

அதனை-
நாம்-
சரி என்போமானால்!

கீழ்வீட்டுகாரன்-
அஸ்திவாரத்தை-
இடிப்பதை-
மேல் வீட்டுக்காரன்-
தடுக்காமல்-
இருப்பானேயானால்!

அதை-
நாம் அறிவுடைமை-
என
சொல்வோமானால்!

அதுபோல்தானே-
சமூக கட்டமைப்பு!

உரிமை-என்பது
சமூகத்தை-
செய்யுமானால்-
அலைக்கழிப்பு!?

தனி மனித-
சுதந்திரம்-
முக்கியம்!

அச்சுதந்திரம்-
சமூகத்தை-
சீர் குலைக்காமல்-
இருப்பது-
மிக முக்கியம்!

(தொடரும்....)


Tuesday 14 May 2013

பெண்ணினம்...!(18)

"பெரும் கடன்காரர்கள்"-
சாவதில்லை!

அவங்களுக்கு-
கடன் கொடுத்த-
வங்கியாளர்களும்-
சாவதில்லை!

ஆனால்-
விவசாயிகள்-
தற்கொலைகளை-
தடுக்க முடியவில்லை!

காரணம்-
விவசாயிகளுக்கு-
மானத்தை விட-
வேறொன்றும்-
பெரிதில்லை!

இப்படியாக சொன்ன -
நம்மாழ்வார் அவர்களின் -
வார்த்தைகளில்-
வலி இல்லாமலில்லை!

மண்ணும்-
அதன் வாசமும்-
பிரித்திட இயலாது!

ஆனால்-
இன்று மானமோ-
வியாபாரமானது!

இன்றைக்கு-
கடைசி காட்சி-
"கிளு கிளு" காட்சிகள்-என
ஒட்டபடுவது!

"பல்லை விளக்கி"-
ஊதினாலே-
மயங்கிடுவதாக-
காட்டபடுவது!

குளியல் சலவை கட்டிக்கு-(சோப்)
குறைந்த உடையுடன்-
குளித்து காட்டுவது!

மது புட்டியுடன்-
அறிவிப்பு பலகையில்-
மதுவுடன்-
நிற்பது!

எல்லாம்-
காட்சியிலும்-
மாது!

மோகத்திற்கு-
பெண்ணாக!

பெண்ணென்றால்-
மோக பொருளாக!

சித்தரிக்கிறாக!

இப்படியாக-
பிஞ்சு மனதில்-
நஞ்சையும்!

பருவ வயதினரிடம்-
இன்னும் இன்னும்-
காம வெறியை ஊற்றியும்!

நாறிடும் செயல்களை-
இன்றோ-
உலகறியும்!

(தொடரும்...)

தொடர்புடைய இடுகை...

பெண்மை.....

// நம்மாழ்வார் கடன்காரராக ஒருவரின் பெயரை குறிப்பிட்டு இருந்தார்கள். நான் அதனை மறைத்தே எழுதியுள்ளேன்//

Monday 13 May 2013

பெண்ணினம்...!(17)

இன்றைக்கு-
பெண்ணுரிமை -என
சொல்வதெல்லாம்-
பெண் சுதந்திரமா!?

இல்லை-
ஈயம் பித்தாளைக்கு-
பேரீச்சம் பழமா!?

"படிச்சவர்னு"-
தெரிவதற்கும்!

"இறுக்கமா"-
"தெரிய "-
ஆடை -
அணிவதற்கும்!

என்ன-
தொடர்பிருக்கு!?

சொல்வதுண்டு-
"அடைத்து வைப்பது"-
முட்டாள் தனமாக!

அடங்காமல்-
அலைவது மட்டும்-
இருக்கிறதா-
அறிவுத்தனமாக!?

பேச்சில் கிழிக்கிறோம்-
ஒழுங்கான-
உடையை-
பட்டிகாட்டு தனமாக!!

ஒழுங்கங்கெட்ட-
ஆடை மட்டும்-
பறைசாற்றுகிறதா-
"பட்டம் "-
பெற்றதாக!?

அன்று-
அறிந்தது-
ஆள் பாதி-
ஆடை பாதி!

இன்றைக்கு-
அணிவதே-
பாதி!

அதிலும்-
கிழிஞ்சி தொங்குது-
மீதி!

அதற்காக-
படி கட்டை-
 தாண்டாதே-என
சொல்ல வரவில்லை!

அடுப்படியில்-
"கரிகட்டையாக-"
சொல்ல வரவில்லை!

"வெளி திண்ணைக்கு"-
வரவிடாமல்-
"விலக்கி" வையின்னு-
சொல்ல வரவில்லை!

ஆனாலும்-
பெண்மையின்-
"தன்மையை"-
அறிய வேண்டியது-
இன்றைய நிலை!

வரும் முன்-
காப்பது-
நல்லது தானே!

"வந்த பின்"-
அழுவது-
வீணே!

(தொடரும்....)





Sunday 12 May 2013

பெண்ணினம்...!(16)

படிப்பு என்பது-
படித்தவரை-
பண்படுத்த வேண்டும்!

"களி மண்ணையும்"-
உபயோகமாக்கணும்!

ஆண்கள் கல்வி-
பூச்செடிகள் மீது-
தெளிக்கும்-
நீராகும்!

பெண்கள் கல்வி-
செடிகளின் -
வேர்களில் ஊற்றும் -
நீராகும்!

ஒரு தலைமுறையே-
உருவாக்கும் -
இடம்-
தாயின்-
மடியாகும்!

ஓ!
பட்டங்கள்-
படித்தவர்களே!

படிப்பவர்களே!

உங்கள்-
பட்டங்களின்-
எழுத்துகள்!

உங்கள்-
ரத்த உறவுகளின்-
வியர்வையும்-
இளமையாகும்-
அவைகள்!

பெண்ணவள்-
தூத்துக்குடியை-
சேர்ந்தவள்!

சென்னை-
"வந்து-"
சேர்ந்தவள்!

மேற்படிப்பு-
தயாரிப்புக்காக!(புரோஜெக்ட் )

இருந்திருக்கலாம்-
படிப்பில்-
கண்ணும்-
கருத்துமாக!

முக நூல்-(பேஸ் புக்)
வாயிலாக-
கிடைத்தான்-
ஆண் நண்பன்!

பெயர்-
கோகுல கிருஷ்ணன்!

அவனே-
அவளின்-
கற்புக்கு-
எமன்!

"சூறையாடி "விட்டு-
"கட்டி கொள்வதாக-"
"சூறையாடினான்"!

ஆனால்-
தனியாக-
வேறு "குடும்பம்"-
ஒன்றையும்-
நடத்தினான்!

இப்போது-
இருக்கிறாள்-
கண்ணீரும்-
கம்பலையுமாக!

புகாரளித்தால்-
இவ்வாறாக!

ஓ!
பெண்களே!

ஏன் தான்-
எவனையோ-
நம்பி-
ஏமாந்து-
போறீங்களோ!?

(தொடரும்....)

//நன்றி தினக்ஸ் வலைத்தளம்.
முழுவதும் படிக்க.
இங்கே போங்க....!//






Saturday 11 May 2013

பெண்ணினம்..!(15)

பூவையர்கள்-
வலைபூக்களில்-(blogspot )
வலம் வருகிறேன்!

அவர்களின்-
கதைகளில்-
கவிதைகளில்-
கரைந்திருக்கிறேன்!

அச்சகோதரிகளின்-
சிந்தனைகளில்-
சற்று "சரிந்தே-"
போயிருக்கிறேன்!

"அருமை"-என்ற
ஒற்றைவார்த்தையில்-
கருத்திட்டுருக்கிறேன்!

கருதிட -
சிந்திக்க முடியாமல்-
தப்பித்து இருக்கிறேன்!

சில சகோதரிகள்-
புகைப்படங்கள்!-
பகிர்வதில்லை!

அதனால்-
அவர்களின்-
வரிகளில்-
திறமைகள்-
தெரியாமலில்லை!

ஆடை குறைப்பு-
சர்வசாதாரணமான-
ஒரு-
நாட்டில்!

புகார் அளித்தாள்-
ஒரு பெண்-
காவல்துறையில்!

அவளது-
பழைய படங்கள்-
"உலாவருகிறதாம்"-
இணையத்தில்!

அதிர்ந்தார்-
ஆந்திராகாரர்-
படித்ததும்!

தன்-
மகள் -
இறந்துவிட்டதாக-
இணையத்தில்-
"படம்"-
வெளிவந்ததும்!

"டெல்லி மாணவி"-
படமாக-
அவரது-
மகள் படம்-
இணைக்கபட்டிருந்தது!

அதுவே-
அலறலுக்கு-
காரணமாக-
இருந்தது!

தற்கொலை செய்து -
சுஸ்மிதா எனும் பெண்-
ஆனார்-
சடலமாக!

ஆம்-
அப்பெண்ணின் படம்-
சித்தரிக்கபட்டிருந்தது-
விலை மாதர்களாக !

இனி-
"வலம்" வருவோம்-
சென்னையை!

அறியலாம்-
ஒரு அதிர்வலையை!

(தொடரும்....)


Friday 10 May 2013

பெண்ணினம்...!(14)

"ஹாய்"!

"ஹாய்"!

நீங்க-
நலமா!?

ம்ம்..!
நீங்க-
சுகமா!?

"தளங்களில்-"
தொடரும்-
விசாரிப்புகள்!(chat )

உங்களை-
காணாமல்-
எப்படி-
சுகமாகும்..!!-
வீசுகிறான்-
தூண்டில்!

என்னை-
"கண்டால்"-
சுகம்கொல்லுமா-!?
மனசு-
மங்கை-
தொடர்ந்தாள்!

இவன்-
நெஞ்சம்-
படபடப்பு!

ஆனாலும்-
"சிக்கனும்"-என
அங்கலாய்ப்பு!

எழுதி-
அனுப்பினான்-
அழகே-
உன்னை காண்பது-
தவறாகுமா!?

அவளுக்கோ-
யோசனை-
பதில்-
அனுப்பனுமா!?

விரல்கள்-
தட்டியது-
என்னை-
பார்க்க-
வேணுமா!?

ஆமாம்-
அன்பே!-
அந்த முனை!

சரி-
அன்பே-
இந்த முனை!

உம்ம்ம்......

உம்ம்ம்....

நேரத்திற்கு-
இடத்திற்கு-
அவன்-
வந்தான்!

அவளை-
கண்டிடும்-
ஆவலில்-
பரிதவித்தான்!

கையில்-
ஒரு-
மலரெடுத்தான்!

மல மலவென-
அவ்வறையை-
நோக்கி நடந்தான்!

பக்!
பக்!

திக்!
திக்!

பார்க்கவரும்!-
இவனுக்கும்!

காத்திருக்கும்-
அவளுக்கும்!

கதவை-
தள்ளினான்!

விக்கித்து-
தவித்தான்!

ஆம்-
அதிர்ச்சி!
அதிர்ச்சி!

பேரதிர்ச்சி!

உள்ளே-
அவன்-
உடன்பிறந்த-
தங்கச்சி!

வேறொரு-
படத்துடன்-
பெயருடன்-
தளங்களில்-
"உலாவியதால்"-
இவ்வம்பாச்சி!

இது-
நான் கண்ட-
குறும்படம்!(short film )

இனி-
சுடும்-
உண்மைகளும்-
வரும்!

(தொடரும்...)



Thursday 9 May 2013

பெண்ணினம்...!(13)

இன்றைய-
காலம்!

விஞ்ஞான -
உலகம்!

சாமானியர்களுக்கும் -
பயன்படும்-
சமூக தளங்கள்!

தளங்களையும்-
தள்ளாட வைக்குது-
அவலங்கள்!

கிடைக்கபெறும்-
அறிய தகவல்களும்!

கேட்காமலே வரும் -
அசிங்கங்களும்!

சமூகதளத்தின்-
இரு முனைகளாகும்!

நடக்கிறது-
கருத்து மோதல்களும்!

அதில்-
ஆழமான-
கருத்துக்கள்-
கொஞ்சம்!

கெட்ட வார்த்தைகள்-
அதனை-
மிஞ்சும்!

சாதி துவேசம்!
மத துவேசம்!

களையப்படும்-
பலரது-
வேஷம்!

அதனால்-
தொழில் நுட்பத்தை-
விடணுமா!?

இல்லை-
தொடரனுமா!?

தேர்தல் களத்தையே-
மாற்ற கூடியது-
சமூகதளங்கள்-
சொல்லுது-
ஆய்வு!

நாம்-
அடையவேண்டியது-
இதனை பற்றிய-
தெளிவு!

விஷத்திலும்-
மருந்துண்டு!

மருந்திலும்-
விஷமுண்டு!

எதனை-
தேர்ந்தெடுக்கணும்-
நமக்கே-
பங்குண்டு!

(தொடரும்...)





Wednesday 8 May 2013

பெண்ணினம்..! (12)

வந்தடைந்தாள்-
கடற்கரையை!

முடிக்க-
நினைத்தாள்-
தன்-
கதையை!

சூரியன்-
மறைய-
தொடங்கியது!

கூட்டம்-
குறைய-
தொடங்கியது!

இவளுக்கு-
"மடிய-"
உள்ளம்-
தூண்டியது!

போனாள்-
போனாள்-
அலைகளுக்கிடையில்!

ஆனால்-
ஆனால்-
கடல் நீரை-
குடிக்க தொடங்கினாள்!

காப்பாற்றியது-
சில -
கைகள்!

அதனை-
தொடர்ந்து-
நடந்தேறியது-
சீரழிப்புகள்!

பசியால்-
பலகீனத்தால்!

மயக்கமுற்றாள்!

அவர்கள்-
வெறிக்கு-
இரையானாள்!

இவள்-
கதையை-
கேட்டு முடித்தார்-
முகவர்!

முகவர்-
கேட்டார்-
போலீசிடம்-
போகலையா!?

"கெடுத்ததே-"
போலிஸ்தானய்யா !!

யார்-
இந்த -
முகவர்!

எதற்கு-
முகவர்!

பாலியல்-
தொழிலுக்கு-
முகவர்!

ஆம்-
புரோக்கர்!

அவர்-
ஆட்டோ சங்கர்!!

(தொடரும்...)

//ஆட்டோ சங்கர் மரண வாக்குமூலம் புத்தகத்தை
பற்றி எழுதிய கவிதை-
படிக்கலாம்!

புரட்டினேன்! புரட்டபட்டேன்!!
(1)

(2)







Tuesday 7 May 2013

பெண்ணினம்...! (11)

பேதை-
வந்தாள்-
தந்தையிடம்-
தயங்கியபடி!

வந்து-
நின்றாள் -
தகப்பனை-
நெருங்கியபடி!

தகப்பன்-
பார்த்தார்-
மகளை-
ஏறெடுத்து !

அவள்-
நின்றாள்-
தரை-
பார்த்து!

வார்த்தை-
வந்தது-
அவளிடமிருந்து-
தட்டு தடுமாறி!

கேட்க -
கேட்க-
அவர் கண்கள்-
நிறம் கொண்டது-
நெருப்பு மாதிரி!

அவள்-
சொன்னது-
காதல் விவகாரம்!

ஏற்கவில்லை -
அவரின்-
மனம்!

விரட்டபட்டாள்-
வீட்டை விட்டு!

புறப்பட்டாள்-
காதலன் மேல்-
நம்பிக்கை கொண்டு!

வீட்டில்-
அவனில்லை!

அவன்-
பெற்றோர்கள்-
இவளை ஏற்கவில்லை!

சொன்னார்கள்-
அவனுக்கு-
கல்யாணம்-
வேறு பெண்ணுடன்!

இனி வராதே-
அவன்-
எண்ணத்துடன்!

இவளுக்கோ-
தலை சுற்றியது!

குமட்டி கொண்டு-
வந்தது!

வந்த-
வாந்தி!

இல்லை-
"பித்த வாந்தி"!

ஆம்-
அது-
கர்ப்ப வாந்தி...!!!

பசி மயக்கம்-
ஒரு பக்கம்!

பொறுத்திருந்தாள்-
இருட்டும் வரைக்கும்!

(தொடரும்.....)



Monday 6 May 2013

பெண்ணினம்...!(10 )

"நம்பி வந்தேனே-
உன்னையே!

விட்டு வந்தேனே-
சொந்தங்களையே!

அணைக்க தெரிந்து-
உனக்கு!

இரக்கம்-
இல்லையா-
உன் மனதிற்கு!?

தொட்டு-
தொட்டு-
"துண்டாடினாய்"!

வயிறு-
"முட்டுது"-
விலகுகிறாய்!

நான்-
எங்கே-
செல்ல!

யாரிடம்-
சொல்ல!

வடிகிறது-
அவளிடம்-
கண்ணீரும்!

கரையவில்லை -
அவனும்"
----------------
அவள்-
நீதானே-
முதல்ல-
"தொட்டே"!

அவன்-
நீயேன்-!?
"சும்மா"-
நின்டே!?

அருகில்-
இருந்தவள்-
இதெல்லாம்-
சகஜம்பா!

உங்களுக்கு-
நடந்தால்-
உங்க மனம்-
பொறுக்குமா!?

யாரடி-
சொன்னே-
ஓங்குகிறான்-
கைய!

அவள்-
தொடர்கிறாள்-
அழுகையை!
----------------
இரு சம்பவமும்-
காதல் பேரை-
சொல்லி நடந்த-
காமம்!

இதில்-
யார்-
பாவம்!?

ஆணா!?
பெண்ணா!?

"சுமை-"
யாருக்கு!?

கேவலம்-
யாருக்கு!?

ஓ!
பெண்ணினமே-
காதல் பெயரால்-
கசக்கி எறியபடுகிறீர்கள் !

கவனம்-
"காவாளித்தனம்-"
நடத்திட-
கயவர்கள்-
கவனமாக-
இருக்கிறார்கள்!

இன்னொன்றை-
சொல்கிறேன்!

அதிர்வீர்கள்-
உத்திரவாதமாக-
சொல்கிறேன்..!

(தொடரும்....)

// z தமிழ் எனும் தொலைகாட்சியில் "சொல்வதெல்லாம் உண்மை"நிகழ்ச்சியில் நடந்த சம்பவங்கள்.தற்போதுதான் நான்
முக நூல் வாயிலாக பார்த்தேன்.
இரு சம்பவமும் பெண்ணை ஏமாற்றிய சம்பவம்.
அதனை கவிதையாகவே நான் தந்தது//






Sunday 5 May 2013

பெண்ணினம்...! (9)

"காணவில்லை"-
தன் மகளை-
தேடுகையில்!

காதிற்கு-
வருகிறது-
காதல்-
கதைகள்!

நொந்த-
மனங்கள்-
முனைவதில்லை-
வழக்கு-
பதிவில்!

முடித்து -
கொள்கிறார்கள்-
மனதோடு -
மாய்ந்து-
கொள்கிறார்கள்-
"முடிந்து "விட்டதாக-
எண்ணத்தில்!

ரத்தத்தை-
பாலாக-
ஊட்டிய தாய்!

தகப்பன்-
உழைத்தே-
உடைந்து -
போனவனாய்!

கிழித்து-
தொங்கவிடுவதாக-
இருக்கும்-
உறவுகளின்-
சொற்களாய்!

வேலியில் இருந்த-
பூந்தோட்டம்!

பாதுகாக்கப்பட்ட-
பெட்டகம்!

போகிறாள்-
எண்ணிக்கொண்டு-
ஒருவனையே-
சொந்தமாக!

கிடைத்ததில்-
படரும்-
கொடியாக!

போகிறவர்களின்-
வாழ்வில்-
மணம் வீசுமா!?

மானங்கெட்டதாக-
"வீசுமா"!?

"உண்ட பின்"-
எறியப்படும்-
இலையாகுமா!?

ஆக்கப்படுமா-!?
"விற்பனை"-
பண்டமா!?

ஆளில்லாத-
இடத்தில-
"புதை"படுமா!?

தெரியவில்லை!

தெரிந்துகொள்ள-
யாரும் முயல்வதில்லை!

சொல்கிறேன்-
சமீபத்தில்தான்-
நான் கண்ட-
சம்பவம்!

உங்களையும்-
காரி உமிழ-
வைக்கும்...!!

(தொடரும்...)






Saturday 4 May 2013

பெண்ணினம்...! (8)

மா-
பலா-
வாழை-
முக்கனிகள்!

உணர்ச்சிகள்-
சில-
நவரசங்கள்!


பல-
உணர்வுகளையும்-
உணர்சிகளையும்-
கொண்டது-
நம்-
உடல்!

அதிலொன்று-
காதல்!

காதலில்லாமல்-
வாழ்வு-
இல்லை!

காதல் மட்டுமே-
வாழ்கை இல்லை!

காதல்-என்ற
சொற்பதம்!

பலரை-
பார்த்துள்ளது-
பதம்!

மனதிற்கு-
பிடித்தவரை-
மணப்பதில்-
தவறில்லை!

மனம் போன-
போக்கில் போனால்-
அதன் பேர்-
காதலில்லை!

பேசி-
பழகிறோம்!

பழகி-
பார்க்கிறோம்!

"பழசா"-
போகிறோம்!

"பாழாய்"-
போகிறோம்!

அப்புறம் என்ன!?-
பிரிகிறோம்!

காதல் காவியங்கள்-
சிலவுண்டு!

ஆனால்-
காதலால்-
காயங்கள்-
பலருக்குண்டு!

காணாமல் போகும்-
இளம்பெண்கள்-
அதிகரிப்பு!

சொல்லுது-
ஒரு-
கணக்கெடுப்பு!

(தொடரும்....)

Friday 3 May 2013

பெண்ணினம்...! (7)

வாட்டிடும்-
வறுமையாலே!

ஒதுக்கிடும்-
உறவுகளாலே!

"கரை சேர்க்கணும்"-என்ற
அவசரத்தினாலே !

யானை பாதத்தில்-
அகப்படும்-
பழத்தை-
போல!

கிடைத்த-
வரனிடம்-
தள்ளி விடுகிறார்கள்-
ஆற்றில் படகை-
போல!

இப்படியாக-
சிலர்!

"இப்படியுமாக"-
சிலர்!

பணம் இருக்கும்-
மமதையிலே!

காசை -
கரைப்பார்கள்-
பந்தாவிலே!

நம்பி-
கெடுவார்கள்-
வெளிநாட்டு மாப்பிள்ளை-என்கிற
ஒத்தை வார்த்தையிலே!

கல்யாணம்-
செய்து வைத்தார்கள்-
பெற்றோர்கள்!

வெளிநாட்டுக்கு-
மகள் போய் விடுவாள்-என்ற
கனவுகள்!

நம்பி கழுத்தை-
நீட்டினால்-
பெண்ணொருத்தி!

கணவனோடும்-
கனவோடும்-
இருந்தவளை-
சுமந்து சென்றது-
வான ஊர்தி!

பின்புதான்-
அறிந்தாள்-
நடக்கும்-
"அநியாயங்கள்"!

எதிர்ததற்கு-
விழுந்தது-
அடிகள்!

திருமண-
புகைபடத்தில்-
இருந்தாள்-
புத்தம் புது-
மலராக!

பத்திரிக்கை-
பேட்டியின்போது-
இருந்தாள்-
பொசுங்கி போன-
விறகாக!

எத்தனை-
பலிகள்-
பழிகள்!

பெண்ணை-
சுற்றும்-
வலைகள்!

அதில் முக்கியமாக-
காதல்.....!!

(தொடரும்...)

// "அநியாயங்கள்" என்று குறிப்பிட்டது .வார்த்தையில் சொல்லமுடியாத விஷயம்.ஆதலால் அதனை விளக்கவில்லை//





Thursday 2 May 2013

பெண்ணினம்...!(6)

நாரில்-
கோர்திடனும்-
பூக்கள்-
மாலையாக!

வாயில -
"அள்ளி போடணும்"-
பெண்மக்கள்-
மணமாக!

பணத்திற்கு-
உடன்படுபவள்-
"தப்பானவள்"-என்று
பேரு!

பணத்திற்காக-
மணம் புரிபவனுக்கு -
ஆம்பிள்ளை -என்று
ஏன் பேரு!?

இதிலுள்ளதா!?-
வித்தியாசங்கள்-
வேறு-
வேறு!?

அட-
"கட்டும்போதும்"-
புடுங்குறான்!

"கட்டின "-
பிறகும்-
சீதனம்னு-
புடுங்குறான்!?

எல்லாத்தையும்-
மாமனார் கொடுத்திட்டா-
இவன் எதற்கு-
மானத்தோட-
அலைகிறான்!?

இவன்-
பயணிக்க-
எவனோ-
"வண்டி"-
கொடுக்கனுமா!?

எத்தனையோ-
கொடுமை-
அதை-
 எழுதி முடிக்க-
முடியுமா!?

வாயிற்று பாட்டுக்கே-
கஷ்டப்படும்-
பெண்மக்கள்-
கண்ணீரிலே!

தினமும்-
காயுது-
தனிமை-எனும்
வெப்ப காற்றிலே!

(தொடரும்....)





Wednesday 1 May 2013

பெண்ணினம்..!(5)

உசிலம்பட்டியில்-
நடந்த-
பெண் சிசு கொலையால்!

அன்றைய-
ஆண்டுகாலங்களில்-
பிறந்த ஆண்கள்-
வாடுகிறார்கள்-
தனிமையால்!

பிற ஊர் மக்களுக்கு-
பெண் கொடுக்க-
தயக்கம்!

உள்ளூர் மக்களுக்கோ-
மன இறுக்கம்!

எல்லாம் செஞ்ச-
"பாவம்யா"-என!

வரதட்சணை-
பிரச்சனைதான்-
கொல்ல காரணம் -
என!

சொன்னது-
முதியவர்-
மூதாட்டி!

பத்திரிக்கை-
கண்டது-
இவர்களிடம்-
பேட்டி!

என் -
மனதில்பட்டது!

இவ்வூர் மட்டும்-
இருக்காது!

இம்மக்கள்-
வெளியில் -
தெரிந்துள்ளார்கள்!

வெளியில-
தெரியாமல்-
எத்தனையோ-
பேர்கள்-
"செய்திருப்பார்கள்!"

இதில்-
விளங்கியது-
சில விஷயங்கள்!

அதில்-
ஒன்று-
வரதட்சணைகள்!

ஆம்-
வரதட்சணைகளால்-
எவ்வளவு-
பிரச்சனைகள்!!?

(தொடரும்....)

//உசிலம்பட்டி தகவல்-
நன்றி - நக்கீரன் வார இதழ்//