Thursday 7 March 2013

இருபாலரும்....!!

அடித்தளத்தை-
அலட்சியம்-
செய்து விட்டு-
அடுக்குமாடி-
கட்டுவது!

பசுவின்-
"மடியை"-
அறுத்துவிட்டு-
பசும்பால்-
விரும்புவது!

முதுகுத்தண்டை-
உடைத்து விட்டு-
நிமிர்ந்து நிற்க-
சொல்வது!

காடுகளை-
அழித்து விட்டு-
மழையை -
எதிர்பார்ப்பது !

மூக்கின் துவாரத்தை-
முழுவதும்-
அடைத்து விட்டு-
நறுமணத்தை-
நுகர சொல்வது!

ஒரே படகில்-
பயணித்து விட்டு-
"ஓரத்தை"-
ஒருவன் உடைப்பதை-
வேடிக்கை பார்ப்பது!

இவைகளெல்லாம்-
எப்படி-
மடத்தனமோ!?
மூடத்தனமோ!?

இதில் -
நீங்கள் -
சேர்த்துகொள்ளலாம்-
என்னென்னமோ!!

அதுபோலதான்-
ஆண் எனும்-
அகந்தையில்-
பெண்மையை-
அழிச்சாட்டியம்-
செய்வதும் !

பெண் சுதந்திரம்-எனும்
பெயரில்-
"போக்கழிந்து "-
போவதும்!

இரு பாலருக்கும்-
இரு வேறு-
தன்மைகள்-
உண்டு!

அத்தன்மைக்குள்-
இருந்துகொண்டால்-
சிறப்புண்டு!

முருங்கை மரம்-
கொஞ்ச வேகமான-
காற்றில்-
முறிந்து விடும்!

புளியமரம்-
நன்றாக-
வளைந்து -
கொடுக்கும்!

இரண்டும்-
மரவகைகள்தானே!?

ஆணும்-
பெண்ணும்-
இதுபோல்தானே...!?

//போக்கழிந்து-நாசமாக போவது//





5 comments:

  1. தண்மையாய் ... தங்களின்
    தன்மைகளை உணர்ந்தால்
    தரணியில் புகழுண்டாம்...

    நல்லா இருக்குது நண்பரே கவிதை...

    ReplyDelete
  2. நல்லதொரு ஓப்பீடுடன் நல்ல படைப்பு! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  3. விட்டுக்கொடுப்பு அற்ற வாழ்வு
    சுவைக்காது என்று பட்டும் படாமலும்
    சொன்ன புத்திமதிக் கவிதை அருமை!..
    தொடர வாழ்த்துக்கள் சகோ .

    ReplyDelete
  4. நல்ல ஒப்பீடு சீனு.

    வாழ்த்துகள்.

    ReplyDelete