Saturday 23 March 2013

கண்ணியமா!? கலங்கமா!?(2)

"நோபலுக்கு"-
இணையான-
நிகழ்ச்சி அது!

நானும்-
கலந்துகொள்ள-
அழைப்பு வந்தபோது!

சவுதிக்கு-
போகணுமே-என்று
எண்ணியபோது!

மனதில்-
சஞ்சலம்-
ஏற்பட்டது!

தங்கும் விடுதியில்-
கண்ணியமாக-
சவுகரியமாக-
இருக்க -
பர்தா அணிய சொல்லி-
தந்தபோது!

வெறுப்பே-
மேலிட்டது!

பிரின்ஸ் சுல்தான்-
க்ராண்ட் செரமொனியல் ஹால்-
வந்தாச்சி!

பெண்கள் பகுதியில்-
பர்தா அணிந்தவர்களாகவே-
காட்சியாக-
இருந்திச்சி!

அங்கு நடந்த-
சம்பவங்களால்-
நானும் பர்தா-
அணிந்திட ஆர்வம்-
வந்திச்சி!

ஆம்-
சவுகரிமான-
உடை என -
மனதுக்கு-
பட்டுச்சி!

அரபு நாட்டுக்கு-
சென்ற பிறகு-
பர்தாவும்-
பிடிச்சி போச்சி !

அப்போது ஏன்!?-
பெண்ணடிமை என-
தூற்றபடுகிறது என-
கேள்வியும் மனதில்-
ஏற்பட்டுச்சி!

இச்சம்பவத்தை-
சுருக்கி கவிதையாக -
தந்ததுதான்-
நான்!

இச்சம்பவத்தை-
விளக்கியது-
சகுந்தலா நரசிம்ஹன்-என்ற
எழுத்தாளரான பெண்!

(தொடரும்...)

//// சகுந்தலா-முனைவர் பட்டம் பெற்றவர்.
பெண்ணுரிமைக்காக போராடுபவர்.
மேலும் முழுதகவல் அறிய இத்தொடர்பை படியுங்கள்!//

http://tamimansari.blogspot.sg/2012/11/blog-post.html?m=0

இத்தொடரை எழுதிட காரணமே இத்தகவல்.என்னை சேர்ந்ததுதான்.

4 comments:


  1. வணக்கம்!

    கண்ணியமாய் நீங்கள் கலக்கிய..பா! என்மனத்துள்
    திண்ணியமாய் நிற்கும் திரண்டு!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு


    ReplyDelete
  2. சகுந்தலா நரசிம்ஹன் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. தகவல்களை கவிதையாக்கி மகிழ்விக்கும் தங்களுக்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  4. ஒரு தகவல் மூலம் ஒரு கவிதையே படைத்து விட்டீர்கள் சகோ வாழ்த்துக்கள்!

    ReplyDelete