Monday 17 December 2012

முகலாயர்களே....(9)

சிங்கம்டா-என
போஸ்டர் ஓட்டுறான்-
சிங்கிள் டீக்கு-
"சிங்கி"-
 அடித்தவனெல்லாம்!

"அப்பாடாக்கர்-"என
அலப்பரை கூட்டுறான்-
"அல்லக்கைகள்"-
எல்லாம்!

கொலை வழக்குல-
தலையிடுதுக-
கிளை செயலாளர்-
"பொறுப்புகள்"-
எல்லாம்!

மாநில பிரமுகரை-
வரவேற்பதில்-
கொலை வரை-
செல்கிறது-
மாவட்ட பொறுப்புகள்-
எல்லாம்!

சின்ன சின்ன-
பதவிகூட-
"பவுசு"-
காட்டுது!

"எக்ஸ்"என்ற -
அடையாளம்கூட-
"படம்-"
காட்டுது!

இவைகளெல்லாம்-
விளக்க தேவையில்லை-
ஆதாரங்கள்!

நாட்டில்-
நடக்கும்-
சாதாரண-
நிகழ்வுகள்!

அன்றைக்கு-
ஔரங்கசீப்-
உலகின் ஐந்து-
பெரிய சாம்ராஜ்யங்களில்-
ஒரு-
சக்ரவர்த்தி!

சிறிதளவு-
நம்-
சிந்தனைக்கு-
அவர் வாழ்வு முறை-
பற்றி!

முகலாய -
மன்னர்களில்-
மிகபெரும்-
செல்வந்தரும்-
அவர்தான்!

எளிமையாக-
வாழ்ந்தவரும்-
அவர்தான்!

தொப்பி-
விற்றும்!

உடைகள்-
விற்றும்!

அவ்வுணவில்-
மகிழ்ச்சி கொண்டது-
அவர் வாழ்வும்!

தலையணை கீழ்-
வைத்திருந்த பணத்தை-
செலவழித்து-
கொண்டது-
அவரது-
மரணம்!

இம்மன்னர்களை-
புகழ-
 இக்கவிதைகள்-
இல்லை!

இம்மன்னர்களின்-
வாயிலாக-
மனிதர்கள்-
மத்தியில்-
பிணக்கங்கள்-
உருவாக்கபடாமலில்லை!

பிணக்கங்கள்-
தவிர்க்க-
இணக்கங்கள்-
உருவாக -
இக்கவிதைகள்-
ஒரு துளியானால்-
என் மன-
மகிழ்வுக்கு-
அளவே இல்லை!

(தொடரும்......)




        

9 comments:

  1. ரொம்ப நல்லா இருக்கு....

    நன்றி,
    மலர்
    http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    ReplyDelete
  2. இன்றைய அரசியல் பிழைப்பாளிகளை விளாசித் தள்ளுகிறது அடையலங்க்காட்டுகிறது
    பாராட்டுகள் ....

    ReplyDelete
  3. தொடருங்கள் சகோ...

    ReplyDelete
  4. தொடருங்கள் சீனி ஐயா.
    தொடருகிறேன்.

    ReplyDelete