Sunday 16 December 2012

முகலாயர்களே...(8)

செலுத்துகிறோம்-
நாம் ஈட்டிய-
வருமானத்தில்-
வருமான வரி!

வாங்க -
முடியாத-
விலைவாசியானாலும்-
பொருளில்-
சேர்ந்திருக்குது-
விற்பனை வரி!

பொறுத்து -
கொள்கிறோம்-
மின்சாரமே -
இல்லாமல்-
மின்சார கட்டண-
உயர்வு!

வாழ்வாதார-
பால்-
விலை உயர்வு!

உயிரை உறிஞ்சும்-
மது விற்பனை-
சாதனை -
அளவு!

இன்னும்-
என்னன்னா -
விற்கிறதோ-
அத்தனையிலும்-
இருக்கிறது-
வரி!

நாட்டுக்குத்தானே-
போகிறது-
வரி!

நினைத்து-
கொண்டால்-
அதுவும்-
சரி!

இதனை-
மனதில்-
நிறுத்துவோம்!

அடுத்து-
வரலாற்றுக்கு-
போவோம்!

என்ன-
இந்த -
ஜிஸ்யா வரி!?

இது-
முகலாயர்கள் மீது-
பெரிதுபடுத்தப்படும்-
ஒரு வகுப்புவாத-
வதந்தீ!

இவ்வரியாவது(ஜிஸ்யா வரி)-
முஸ்லிம்கள் அல்லாத-
மக்கள் மீது-
விதிக்கப்படும்-
பாதுகாப்பு -
வரி!

இப்பணம்-
மன்னரின் -
சமூகத்திற்கு-
செலவழிக்கபட்டதா-
சிந்திப்பதே-
சரி!?

இல்லை-
என்பதே-
சரி!

மன்னரின்-
சமூகத்திற்கும்-
இருந்தது-
வரி!

அதன்-
பெயர்-
ஏழை வரி!(ஜகாத்)

இருக்கும்-
வீட்டை -
தவிர்த்து!

கணிசமான-
அளவிற்கு மேல் -
அசையும் சொத்து-
அசையா சொத்து-
அத்தனைக்கும்-
வரி வாங்கப்பட்டது!

இத்தனையும்-
அரசு கஜானாவில்-
சேர்க்கபட்டது!

சொல்லுங்கள்-
சொந்தங்களே!

இதில்-
யாருக்கு-
அதிக வரி!

ஏன்-
ஒருதலைபட்சமாக-
பிரசாரத்தின் வழி-
விதைக்கபடுது-
கொலை வெறி!?

(தொடரும்.....)

(குறிப்பு-ஜகாத் பணம் யார் நிர்பந்தமும் இல்லாமல் இறைவனுக்காக கொடுப்பவர்களும்-
இருக்கிறார்கள்-கொடுக்காதவரை நிற்பதிந்து கொடுக்கவும் -வைக்கப்பட்டுள்ளார்கள்!
இது ஜகாத் இஸ்லாமியர்களின்-
நான்காவது கடைமையும் கூட)






4 comments:

  1. //விற்பனை வரி - ஜிஸ்யா வரி - ஏழை வரி (ஜகாத்)//

    அழகா சொல்லியிருக்கீங்க சகோ. வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. asmaa!

      ungal muthal varavukku-
      mikka nantri!

      Delete