Wednesday 12 December 2012

முகலாயர்களே......(4)

நிலவை-
வார்த்தையில்-
வடிப்பவன்-
கவி-
பித்தன்!

காதலுக்காக-
காலத்தை-
இழப்பவன்-
காதல்-
பித்தன்!

மண்ணில்-
நிலவை-
சலவை செய்து-
"அதிசயம்"-
செய்தவன்-
கலை-
பித்தன்!

அப்பித்தன்தான்-
தாஜ்மகால்-
கட்டிய-
முகலாய மன்னன்-
ஷாஜகான்!

இந்தியா -
என்றால்-
தாஜ்மகாலும்!

தாஜ்மகால்-
என்றால்-
இந்தியாவும்!

ஒன்று சேர-
நினைவுகள்-
வந்து விடும்!

வெண்ணிலாவிடம்-
ஒளியை கடன்-
வாங்கி கட்டியதுபோல்-
அற்புதம்!

பார்க்க-
பார்க்க-
வியக்க வைக்கும்-
கலைகளின்-
களஞ்சியம்!

உலகின்-
அதிசயங்களில்-
முதலிடம்!

அக்கட்டிடத்தின்-
சொந்தம் கொண்டாட-
கூடிய மக்களோ-
நாட்டில்-
கடைசி இடம்!

ஓ!
ஷாஜகானே!
முகலாய மன்னனே!

இன்று-
உன் வாரிசுகளுக்கு-
வாடைகைக்கு -
வீடுகள் கூட-
மறுக்குதே!

நாட்டை ஆண்ட-
சமூகம் -
நடுத்தெருவில்-
நிக்குதே!

எத்தனை-
கமிசன்கள்-
வச்சாச்சி!

அத்தனையும்-
அவலத்தை-
சொல்லிருச்சி!

நடை முறைபடுத்தாமல்-
மனசு ஏனோ-
அரசுகளுக்கு-
மரத்து போச்சி!

ஏன்-
நியாயம் தேடும்-
கண்களில்-
மண்ணு விழுந்திடுச்சி!?

தாஜ்மகால்-
உலகபோரின்போது-
குண்டுகளில் இருந்து-
பாதுகாக்க-
மூங்கில்களால்-
கட்டப்பட்டது!-

புகைபடியாமல்-
இருக்க-
குறிப்பிட்ட தூரம்-
புகைவண்டிக்கு-
தடை விதிக்கப்பட்டுள்ளது!

கட்டிடத்தை-
பாதுகாக்கும்-
உங்களுக்கு!

மக்களின் நிலையை-
 கண்டும் காணாமல்-
இருப்பது-
எதற்கு!?


(தொடரும்.....)




13 comments:

  1. அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா....
    வழமையான டயலொக்கை பெசிட்டு நாமும் இருக்கிறதுதான் அறிவுத் தனம் போல......

    பதிவுகள் தவறவிட்டுள்ளேன் படித்துவிட்டு வருகிறேன்

    ReplyDelete
  2. எல்லாம் அரசியல்....

    நன்றி,
    மலர்
    http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    ReplyDelete
  3. அரசியல் படுத்தும் பாடு.....!

    ReplyDelete
  4. ஆதங்கப்பட மட்டுமே நம்மால் இயலும்.

    ReplyDelete
  5. அருமையான கவிதை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  6. சிந்திக்கத் துாண்டும் கவிதை.

    ReplyDelete