Friday 21 December 2012

முகலயர்களே.....(13 ) (600வது கவிதை!)

கல்வியானது!

ஆணும்-
பெண்ணும்-
காலமெல்லாம்-
கற்க வேண்டியது!

கற்க-
கற்க-
கல்வி-
கரையாதது!

ஆனால்-
இன்று-
கல்வியோ-
ஏழைகளுக்கு-
எட்டா கனியானது!

எட்டாத-
தூரத்திற்கு-
யார்-
விற்பனை-
பொருளாக்கியது!?

வீதி தோறும்-
பாடசாலை-
அமையனும்-
நம் முன்னோர்கள்-
சொல்லாகும்!

தெருவெங்கும்-
கள்ளு கடை-(டாஸ்மாக்)
வைத்ததே-
அரசின்-
சாதனையாகும்!

தன் மானத்தோடு-
வாழ்ந்தால்தான்-
மனுசனடா!!

மானங்கெட்ட-
குடி-
கேவலம்டா!!

அன்றைய-
அரசர்கள்-
என்றால்!

நமது-
மன கண்களுக்கு-
வருவது-
முன்னால்!

அந்தப்புரங்கள்!
அந்தரங்கங்கள்!

அழிச்சாட்டியங்கள்!
அழித்து கொள்ளும்-
சண்டைகள்!

சர்வாதிகாரம்!
தலை கணம்!

உடனடி-
நினைவுக்கு-
வருவது-
இவைகள்!

இவைகளையெல்லாம்-
செய்பவன் யாராகிலும்-
அரசன் அல்ல-
அசிங்கங்கள்!

இது-
பொருந்தும்-
முக்காலங்கள்!

பகதூர் ஷா-
மன்னன்!

கல்விமான்!

பலமொழிகள்-
அறிந்தவ்ரும்கூட!

பல நூல்கள்-
எழுதியவரும் கூட!

கவிஞரும்-
கூட!

அன்றைய-
பிரபலமான-
கவிஞர்கள்-
காலிப்-
ஜாக்-
இவர்களும்-
இருந்தார்கள்-
மன்னர் கூட!

இன்னும்-
சொல்கிறேன்-
கொஞ்சம் பயணியுங்கள்-
என் கூட!

(தொடரும்.....)



13 comments:

  1. சேர்ந்தே பயணிக்கிறோம்...
    வாழ்த்துக்கள் 600 +

    ReplyDelete
  2. (600வது கவிதை!) --வாழ்த்துகள்...

    ReplyDelete
  3. நிச்சயம் இது ஒரு சிறந்த சாதனை நண்பரே... நான் வாசிக்கும் வரையில் தங்களது கவிதை எல்லோரது கவிதைகலிளிருந்தும் சற்று வித்தியாசமானது! எளிமையான வார்த்தைகளை பயன்படுத்தி அருமையான கவிதைகளை புனைந்து கொண்டிருக்கும் தங்களது பயணம் மேலும் தொடரட்டும்! வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. உங்கள் 600-வது கவிதைக்கு என் வாழ்த்துக்கள்....

    நன்றி,
    மலர்
    http://www.tamilcomedyworld.com/

    ReplyDelete
  5. முதலில் 600வது கவிதைக்கு வாழ்த்துகள். இன்றைய கவிதையும் சிறப்பு தொடருங்கள்.

    ReplyDelete
  6. 600-வது கவிதைக்கு வாழ்த்துகள் சீனி. பயணத்தில் தொடர்கிறோம்!

    ReplyDelete