Saturday 24 November 2012

கேவலபட்டவன்...."

மடியிலும் -
மார்பிலும்-
சுமந்தவள்!

உச்சி முகர்ந்து-
முத்தமிட்டவள்!

காய்ச்சலில்-
காய்ந்தபோது-
நெஞ்சு குழி-
கனன்றவள்!

விடிய விடிய-
விழித்திருந்தவள்!

விழியாக-
பார்த்து-
இருந்தவள்!

ஒண்ட இடமில்லாத-
என்னை-
"ராசா"-என
அழைத்தவள்!

அக்கம் பக்கம்-
அடிக்க முனைகையில்-
அரவணைத்தவள்!

அறிவு கெட்ட-
என்னை-
"அறிவு அறிவு"-என
கொஞ்சியவள்!

படுக்க-
 பாயில்லாதபோது-
தாவணியை-
விரித்து தூங்க-
வைத்தவள்!

"இவனா"-என
ஏளனமாக -
பார்த்தவர்கள்-
மத்தியில்-
"எம் பேரன்-"என
உரக்க சொன்னவள்!

அலை பேசியில்-
உறவுகளிடம்-
பேசி கொண்டிருந்தபோது!

அறிந்தேன்-
அவள் அருகில்-
இருந்ததை-
சப்தம் கேட்டபோது!

யாரென்று-
கேட்டாள்!

"சப்தாமாக"-
சொன்னபிறகு-
வாங்கி -
பேசினாள்!

என்னடா-
நல்லா இருக்கியா!?

-------------

சாப்பிட்டியா!?

----------------

எங்கேயும்-
சுத்தாதே!

---------------

கவலை -
படாதே!

-------------

பேச மாட்டியாடா!-
"கேவலபட்டவனே!?-என்று
சொல்லிவிட்டு!

காதும்-
கேட்கமாட்டேங்குது-
அலுத்து கொண்டு!

சென்றாள்-
அலை பேசியை-
கொடுத்து விட்டு!

நான்-
பேசியது-
அவள் காதில்-
விழவில்லை!

அவள்-
சொன்ன-
"கேவலபட்டவன்"-
வார்த்தை-
இனிக்காமல்-
இருக்கவில்லை!

என்னை-
தாங்கிய-
ஆச்சா (பாட்டி)-
உனக்கு!

என்ன செய்தாலும்-
கைம்மாறு ஆகுமா!?-
உனக்கு!

அப்படி என்றால்-
கேட்காமலே-
உன்னை போன்ற-
உறவுகளை தந்த -
இறைவனுக்கு!?

ஆனாலும்-
முயல்கிறேன்-
நன்றி செலுத்தும்-
கூட்டத்தாரில்-
இணைவதற்கு!




8 comments:

  1. உறவின் ஆழம்
    உணர்வின் நெகிழ்சி உணரச் செய்து போகும்
    அருமையான பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. அழகான கவிதை......
    எவ்வளவுதான் பெரிசுகள் திட்டினாலும் அவர்களை வெறுக்க மந்தே வராது...இப்படிப்பட்டவர்கள் ஒரு சிலர்தான் இந்த பூமியில்

    ReplyDelete
  3. கேட்காமலே-
    உன்னை போன்ற-
    உறவுகளை தந்த -
    இறைவனுக்கு!?

    அன்பாய் தாக்கும் ஆக்கம் .....

    ReplyDelete
  4. பாட்டி--- உணர்ச்சிக் கவிதை...

    அன்பாய் நெருங்கும் வரிகள்...

    ReplyDelete
  5. உணர்வுபூர்வமான அழகிய கவிதை! நன்றி!

    ReplyDelete
  6. அருமை வரிகள்... முடிவில் :

    /// நன்றி செலுத்தும்-
    கூட்டத்தாரில்-
    இணைவதற்கு! ///

    இனி எல்லாம் சுகமே...

    ReplyDelete
  7. அருமையான கவிதை சீனி.....

    ReplyDelete
  8. அருமையான வரிகள்! சிறப்பு! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete