Wednesday 28 November 2012

வெளிச்சங்கள்"! (3)

எத்தனை பேர்-
மடிந்தார்கள்-
சுதந்திர-
வேட்கையிலே!

இன்று-
சுதந்திரத்தை-
தேட வேண்டி -
உள்ளது-
தேசத்திலே!

காந்தியை-
நாம்-
அறிவோம்!

காந்தி-
சொன்ன-
"என் தோளில்-
இரு புலிகள்"-
அலி சகோதரர்கள்!-
என்றார்கள்!
அச்சகோதரர்களை-
எத்தனை பேர்-
நாம்-
அறிவோம்!?

போராட்டகளம்-
கண்டதால்-
சிறையில் -
அடைக்க பட்டார்கள்-
அச்சகோதரர்கள்!

வெளியில்-
வந்தவர்களுக்கு-
கொடுப்பட்டது-
பணமுடிப்புகள்!

அப்பணமுடிப்புகளை-
அப்படியே -
போராட்ட இயக்கத்திற்கு-
கொடுத்தார்கள்!

வெறும்-
கையுடன்-
வீடு திரும்பினார்கள்!

இன்று-
அத்தியாகிகளை-
எத்தனை பேர்-
அறிந்தவர்கள்!?

நேதாஜி-
நமக்கு-
தெரியும்!

அவருடன்-
கடைசி வரை-
பயணம் சென்ற-
கர்னல் ஹபிபுர் ரஹ்மானை-
நமக்கெல்லாம்-
தெரியும்!!?

கப்பலோட்டிய தமிழர்-
வ.உ .சி -
தெரியும்!

அக்கப்பல் வாங்க-
அன்றைய மதிப்பான-
இரண்டு லட்சம்-
கொடுத்த -
ஹாஜி பக்கீர் முஹம்மது-
எத்தனை பேர்களுக்கு-
தெரியும்!?

தூக்கு தண்டனை-
விதிக்க பட்டார்கள்-
பல போராட்ட-
தியாகிகள்!

அத்தியாகிகள்-
அழுது புரண்டு-
கேட்கவில்லை-
உயிர் பிச்சைகள்!!

சொன்னார்கள்-
தூக்கில் போடாதீர்கள்-
"கழுவ" மரத்தில்!

தூக்கில் போடுங்கள்-
தூக்கு மேடையில்!

எங்கள் உயிர்-
பிரிகையிலும்-
உடல் பட வேண்டும்-
எம்மண்ணில்!

மறுநாள்-
தொங்க -
வேண்டியவர்கள்!

மலர்ந்த-
முகம்-
கொண்டிருந்தார்கள்!

அத்தியாகிகள்-
வீர மரணம் -
அடைய போகிறார்கள்!

அதுதான்-
மகிழ்ச்சியில்-
இருக்கிறார்கள்-என்பதை
கேட்டறிந்த -
அதிகாரிகள்!

தண்டனைகள்-
மாற்றி-
கொடுத்தார்கள்-
ஆயுள் தண்டனைகள்!

சிறுபான்மை -
மக்களாக இருந்தாலும்-
பெரும்பான்மையாக-
நாட்டுக்காக -
உயிர் துறந்தார்கள்!

இவர்களையெல்லாம்-
ஏன் மறந்தார்கள்!?

அல்லது-

ஏன்-
மறைத்தார்கள்!

அத்தியாகிகளின்-
வாரிசுகளின்-
இன்றைய நிலைகள்...!?

(குமுறல்கள் தொடரும்)

17 comments:

  1. வேறென்ன...? மாறி விட்டார்கள் / மாற்றி விட்டார்கள் கயவர்கள்...

    ReplyDelete
  2. பகிர்வுக்கு மிக்க நன்றி....

    நன்றி,
    மலர்
    http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    ReplyDelete
  3. பெற்ற தாயையும் தவிக்க விட தெரிந்த மக்களுக்கு இவர்களை மறப்பது பெரிதான செயல் அல்லவே. வேதனைப் படத்தான் முடிகிறது.

    ReplyDelete
  4. "நான் என்ன செய்வேன்?" முதல் பதிவில் விட்டுச்சென்றது மீண்டு(ம்) வந்திருக்கிறேன்! தொடர்கிறேன் அண்ணா!

    "வெளிச்சங்கள்!" முதல் பதிவிலிருந்து தொடர்ச்சியாகவே படித்தேன்! குமுறல்களை கொட்டித்தீருங்கள் நல்ல மாற்றத்தை எதிர்ப்பார்ப்போம்! மாறவேண்டியது, மறைக்கப்பட்டது, மறுக்கப்பட்டது என அனைத்தும் நாம் வருத்தப்படவேண்டிய விஷயங்கள்! இன்னும் கண்டும் காணாததாய் சாமான்யனாய் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்!

    ReplyDelete
  5. இருட்டுக்குள் இருப்பதை
    வெளிச்சத்திற்கு கொண்டு வந்திருக்கிறீர்கள்.

    மனக்குமுறல்கள் தொடரட்டும்.

    ReplyDelete
  6. இன்று-
    சுதந்திரத்தை-
    தேட வேண்டி -
    உள்ளது-
    தேசத்திலே!

    உண்மைதான் கவிஞரே..

    ReplyDelete
  7. பாட்டன் சொன்னான் வெள்ளையனே வெளியேறு
    பேரன் நாக்கில் இருந்தான் வெள்ளையன்

    என்று எங்கோ படித்த கவிதை நினைவுக்கு வந்தது.

    ReplyDelete
  8. உண்மைகள் அறிகிறேன் நண்பரே...
    மறந்தவைகள் அல்ல மறக்கடிக்கப்பட்டவைகள் தான் அவைகள்...
    காந்தியின் நிகழ்வில் அறிந்தோமே உண்மையினை

    ReplyDelete