Monday 6 February 2012

என்ன கணக்கு ...

புத்தாண்டு பிறந்தாலும்-
"தொறக்கு"றான்!

செத்தவரை-
பிதைக்கும் வரை-
"ஊத்துறான்"!

கெட்டு போகுது -
பொழப்பு!

இது ஒரு கேடுகெட்ட -
பொழப்பு!

"குடிச்சி" அழிஞ்ச -
குடும்ப தலைவன்-
எத்தனை!?

அதனால்-
தெருவுல நிக்குற-
குடும்பங்கள்-எத்தனை!?

குடுச்சிட்டு நடந்த -
சண்டைகள் -எத்தனை!?

அதனால்-
பதிவான வழக்குகள்-
எத்தனை!?

குடியில வாகனம்-
ஓட்டுபவர்கள்-எத்தனை!?

அபராதம் கட்டியவர்கள்-
எத்தனை!?

அதனால் நடந்த-
விபத்துகள்-எத்தனை!?

உயிர் பலிகள்-
எத்தனை!?
சமூக சீரழிவுகள்-
எத்தனை!?

ஒழுக்க சீர்கேடுகள்-
எத்தனை!?

அரசுக்கு வருதாம்-
வருமானம்-கோடியில!

இந்த "எத்தனை"கள்-
கூட்டி பார்த்தால்-
வரும் மில்லியன் கணக்குல!

கள் "முட்டியில"-
இறக்க கூடாது!

மது "பாட்டிலில்"-
விற்ப்பது-கூடுமோ!?

அது என்ன-
"பிய்யி!"

இது என்ன-
நெய்யி"!

இரண்டும் ஒண்ணுதானே-
உண்மை!

No comments:

Post a Comment