Wednesday 11 January 2012

"அகதி"தாய்! $

வெளியில்-
 உள்ளதை-
உள்ளிழுக்கும்-
பேரலை!

என்னிலிருந்து-
வெளிவந்தாய்
மகளே!

உன் பசியமத்த -
நெஞ்சுல-
பால் இல்ல!

பொருளாதார தடை-
விதிச்சவனுக்கோ-
நெஞ்சுல-
ஈரம் இல்ல !

என்னென்னமோ-
செஞ்சுகிட்டு!

ஏதேதோ-
பண்ணிக்கிட்டு!!

மக்களை அழிக்கிறான்-
குண்டுகளை வீசி கொண்டு!

மகளே!
உன் அப்பனோட-
நான் "தங்கியது"-என்
தவறா?

என் கருவுல-
நீ "தங்கியது-"
உன் தவறா?

வலியும் சுகமாக-
இருந்தது-
நீ கருவுல-
நெளிந்திடும்போது!

புதை குழியில் அசைவற்று-
கிடப்பதை பார்க்கையில்-
அழுதிட மனம் வெதும்புது!

மகளே!
பொறந்த மண்ணுல -
மடிஞ்ச சந்தோசம்-
உனக்கு இருக்கலாம்!

இந்த நிலைக்கு-
நம்மை தள்ளியவனுக்கு-
அடக்கம் செய்ய-
ஒரு-
புடி மண்ணு 
இல்லாம போகலாம்!

இனத்தின் பேரல்-
மொழியின் பேரால்-
மக்கள் மடிகிறார்கள்-
ஆக்கிரமிப்பு போரால்!

காரணங்கள் தெரியாமல்.
இருக்குமோ!-
என்னவென்று. !


தெரிந்த காரணம் தான். -
அது "எண்ணெய்"என்று!

மாறிடுது உலகம்-
ஒவ்வொரு நாளும்!

நிலையில்லாதது-
எந்த நிலையும்!

உலகை மிரட்டிய -
கிட்லருக்கு கிடைத்தது-
தற்கொலை!

முசோலினிக்கு-
தூக்கு!

இது-
கடந்த கால-
வரலாறு!

இன்றைய அத்துமீற்பவர்களே!
இன்றைக்கும் நிலை மாறி வருதே!

நேற்று வரை -
நாட்டின் அதிபதி!

இன்று-
சிறை அறையில்-
கிடக்கிறார் அடைந்து!

அநீதி-
நிலைபெறாது!

ஒரு நாள் -
வெற்றி பெறும்-
நீதியானது!

மகளே!
பொறந்த மண்ணை-
விட்டு செல்கிறேன்!

சுவாசித்த காற்றை-
விட்டு செல்கிறேன்!

நாட்டை துறந்து -
செல்கிறேன்!
"அகதி'என்ற பேருக்குள்-
அடங்கிட போகிறேன்!

உயிர் வாழும் -
ஆசையில் இல்ல!

உயிரின் உருவமான-
மிச்ச குழந்தைகள்-
சாககூடாது-
என்பதாலே!

ஓ!
உலக மக்களே!
பதில் சொல்லுங்களேன்!

சொர்க்கம் என்-
குடும்பமாக இருந்தது!

நரகத்தை சுவைக்கத்தான்-
நான்-
போறதோ?

No comments:

Post a Comment