Wednesday 26 October 2011

தாய்-ஆனவன்!

மகனே!
நடையாய் -
நடந்தேன்-
பள்ளிக்கு!

நீ!
கல்வி -
பயில வேண்டும் -
என்பதற்கு!

உன்னை -
என் நெஞ்சில் -
சுமந்தேன்!

செத்த பின் -
என்-
உடலை தோளில்-
சுமப்பாய் -
என்பதற்காக!

நீ!
பிறந்தவுடன் -
காலமானாள்-
உன் தாய்!

உனக்காக -
தாயாக -ஆனவன்
நான்!

என் இளமை-
 பசிக்கு -
தேடவில்லை -
மறுமணம்
எனும் உணவை!

பயம்தான்-
வருபவள்
உன் வயித்து-
 பசிக்கு  தருவாளோ -
உணவை!

நீ!
பொருளியல் படிக்க -
பொருளாதாரத்தை-
 இழந்தவன்-
நான்!

உன் வீட்டில் -
இடமுண்டு
செல்ல பிராணி -
என்ற பெயரில்-
நாய்க்கு!

இடமில்லாமல் தான் -
போனதோ-!?
உன்னை செல்லமா -
வளர்த்த எனக்கு!

மனதின் வலியை-
எழுத-
தெரியவில்லை!

வரும் -
கண்ணீரை-
அடக்க முடியவில்லை!

சுமையை-
 கொடுத்தவனிடம்-
சுமையை -
கொடுத்து விட்டு -
போனாள்-
உன் அன்னை!

பெரும் சுமையாக -
கருதுகிறாயடா-
என்னை!

என்னை -
மறந்து விட்டாய் -
என் நிலையை -
உன் மகன்
பார்த்து வளர்கிறான்-
நீ !-
அதை ''மறந்து விடாதே'....?

No comments:

Post a Comment