Monday 19 September 2011

தொடங்கு உன்னிலிருந்து...

'தண்ணி'-
 அடிக்கிறானே-என
தன் மகனை -
திட்டும் தகப்பனே!

உனது நாட்கள்-
 தொடங்குவதும் -
முடிவதும் -
மது கடையில தானே!

எப்படியெல்லாம் -
வளர்த்தேன்-
இப்படி விட்டுட்டு -
போறானே!
கதறும் -
கருவில் -
சுமந்தவளே!

வட்டியும் -
முதலுமாக -
வரதட்சணை-
வாங்கியதை -
மறந்துட்டாளே!

கடைக்காரனிடம் கூட -காதலியானவள் -
பேசினாலும் -
கடு கடுப்பாயே!

அளந்து விடுவியே -
காதலியிடமே-
உன்னை-
கடந்து செல்லும் -
பெண்ணை !

அப்போ-
உன்னை -
எதால அடிக்க!?

கட்டு பட்டு -
கட்டு பாடோடு -
இருக்கணும் -
கட்டியவள் -
மட்டும் !

கட்டவிழ்த்து விட்ட -
கழுதையை போல் -
'ஊர் மேயலாம் ' -
நீ மட்டும்!

நன்றி கெட்ட -
நண்பன் என்கிறாய் -
நண்பனுக்கு -
நீ என்ன நன்மை -
செய்திருக்கிறாய்!

குற்றங்களை -
கவனிக்கிறாய்-
சுற்றி-
உள்ளவர்களிடம்!

குற்றங்களை -
கவனிக்க -
தவறிட்டாயே-
உன்னிடம்!

பேசி தெரிகிறோம் -
அடுத்தவன்-
கண்ணில் -
தூசி உள்ளதென!

யோசிக்க -
மறந்துட்டோமே!-
மலைக்கும்
அளவுக்கு -
அழுக்கு உள்ளதே-
நம்-
கண்ணுல !


கையில உள்ளதை -
வீசுகிறாய்-
தலைக்கு மேல!

அது தானே -
விழும் மீண்டும் -
உன்-
தலை மேல!

மண்ணுனா -
மண்!

மலருன்னா -
மலர்!

நீ!
வீச போவது -
எதை !

முடிவு செய் -
அதை!

No comments:

Post a Comment