Wednesday 28 September 2011

வியாபாரியின் மகளே..!



பெண்ணே!
உன் தகப்பன் இருக்கலாம்-
ஆயுத வியாபாரியாக!

உன் தகப்பனுக்கு -
என் தகப்பன் ஏதும் இருக்கிறதா-
கடன் பாக்கியாக!?

காசை வாங்கி கொண்டு-
ஏவுகணையை அனுப்புகிறான் -
அடுத்த நாட்டிற்கு!

உன் பார்வையின் வழியே-
நெருப்பு கணை அல்லவா-அனுப்புகிறான்
என் வீட்டிற்கு!

கடன் பாக்கியை -
இருவரும் பார்த்து பேசி கொள்ளட்டும்!

நீ-
என்னை 'பார்த்து பார்த்து'-
அதற்க்காக கொல்லணுமா?

பொய்யானவைகள்..!




குழந்தை பருவம் -
சொன்னது-
கருவறை -
நிலையில்லை-
என!

பள்ளி பருவம் -
சொன்னது-
குழந்தை பருவம் -
பொய் -என!

முதல் காதல் -
சொன்னது-
இளமை காலம் -
இனிமையாக கழியாது-
என-!

இழந்த காதல் -
சொன்னது-
'சேர்ந்து'விட -
நேசம் மட்டும் -
போதாது -
என!

திருமண வாழ்வு -
சொல்கிறது-
பெத்தவங்க முடிவு -
தவறாக-
இருக்காது-
என!

மனைவியை-
 பிரிந்த நேரம் -
சொன்னது-
பணம் மட்டும்-
மகிழ்ச்சியை -
தராது-
என!

விட்டு செல்லும் -
சோகம் சொன்னது-
கூத்தடிக்க மட்டும் -
கூட்டாளிகள் அல்ல-
என!

பத்திரிக்கைக்கு -
அனுப்பி -
திரும்பிய -
கவிதை-
 சொன்னது!
முதல் முயற்சி -
தோல்வி தான் -
என!

கடந்து செல்லும் -
'சவ' ஊர்வலம் -
சொன்னது!-
நடப்பவை -
எல்லாம்-
நிரந்தரம் -
இல்லை- 
என!

பட்டால் தான்..!



ஆசிரியர்-
 அருமை-
தெரிந்தது-
அந்நிய மொழி-
பேச -
தெரியாத போது!

தண்ணீரின்-
 தரம் -
தெரிந்தது-
தாகத்தில் -
அலைந்த போது!

பிரிவு -
வலியை தரும் -
என்பது-
 தெரிந்தது!
பிரியமானவளை -
பிரிந்த போது!

எதிரியாக-
 பார்ப்பார்கள்-
 சிலர்-
அவர்களின் -
வீட்டை கடந்து -
செல்லும் போது!

அர்த்தம் -
புரிந்தது-
என் வீட்டில் -
'வயசுக்கு' -வந்த
பொண்ணு -
இருந்த போது!

தகப்பனின்-
 கோபம் -
புரிந்தது-
தான் -
உழைச்ச காசை-
வீணாக-
செலவழிச்ச போது!

நதியின் -
ஓட்டம் -
மேடு பள்ளத்தை -
கடக்கிறது!

வாழ்வின் -
ஓட்டம் -
பாடங்களை -
தருகிறது!

பெண்சிசு...!



வாழ்க்கை-
கருவறையில்-
 துவங்கி-
கல்லறையில் -
முடிவது தானே-!?

கருவறையே-
கல்லறையாய்-
 ஆனதேனோ...!?

உருவம் -
அடைகிறதே-
உயிரணு -
ஒன்னு!

அதை -
'அழிச்சிட'-
அதிகாரம் -
எவன் தந்தான்னு-
சொல்லு!?

பொண்டாட்டியை -
உயிரோடு -
கொல்கிறாய்-
கருக்கலைப்பால்!

பொம்பள புள்ள -
பொறந்தாலும் -
ஊத்துறே-
கள்ளி பால்!

எதை -
விதைக்கிறாயோ-!
அதை தானே -
அறுப்பே!?

எங்களை -
கொன்று -
புதைக்கிறார்களே-
எதை-
'புடுங்க!'?


Sunday 25 September 2011

திரும்ப முடியாதது!


செல்லும்-
திரும்பாது-

வாழ்கை !
வார்த்தை!


அது-
'ஒரு வழி-
 சாலை'!

ரசிகன்.....!



ரசிகனே!
ரசனை-
 உள்ளவனே!

மனுசனுக்கும் -
மத்ததுக்கும்
மாறுபாடு-
ரசனை தானே!

ரசிப்பது -
தப்பில்ல -!
ரசிப்பது மட்டுமே -
வாழ்கை -
இல்ல!

பாலூட்டியவளுக்கு -
சோறு இல்ல!

புள்ளைக்கு -
பாலில்ல!

கட் -வுட்டுக்கு-
 பால் ஊத்துரவனே-
உனக்கு வெட்கமா -
இல்ல!

நிழல் -
நாயகனுக்கு -
இழக்கனுமா -
நிஜ வாழ்கையை!?

நடிகர் -
யாரும் சொல்லல-
நீ சாவு -
நான் வாழ-என!

அப்படி எவனும் 
சொல்லியிருந்தா -
அவன் மனுசனே -
இல்ல!

சினிமாவில் -
போராடி சேர்த்து -
வைப்பார் -
காதலை!

வீட்டில் -
போட்டு அடிப்பார் -
காதல் செய்த -
மகளை!

மொழி ,மொழி -என
வசனம் பேசுவார் -
திரை படத்தில்!

மொழி பெயர்ப்பு செய்து -
பணம் சம்பாதிப்பார்-
இன்னொரு-
மாநிலத்தில்!

ஒரு படம் ஓட-
ஆயிரம் கைகள் -
உழைப்பு
தேவை!

ஆயிரம் கைகளை-
 மறந்துட்டு -
ஒருவரை மட்டும் -
கொண்டாடுவது -
தேவையா!?

எங்கேயும் -
இல்லாத -
அசிங்கம்!

தலைவனை -
நாம -
தேடுற இடம் -
திரை அரங்கம்!

வந்தாரை -
வாழ வைக்கும் -
தமிழகம்!

வாழ வைப்பது -
போதாதா!?-
ஆளவும் -
வைக்கணுமா!?

செத்தாதான் -
பாலூத்துவாங்க-
பலூத்த போயி -
கீழே விழுந்து -
சாவுறானுங்க!

நடிப்பது -
அவர்களது -
பொழப்புக்கு!

உன் -
பொழப்ப பாரு -
அடுத்த-
வேலை-
 சோத்துக்கு!

நடிப்பு வேறு-
உண்மை-
நடப்பு வேறு!

காமராசரும் -
காயித மில்லதும் -
தலைவர்கள் -
கிடைக்கலையா!?

அவர்கள் -
கிடைத்தது எங்கே-?
திரை துறையா!?

நடந்ததுக்கு -
வருந்துவோம் !
இனி-
நடப்பதுக்கு -
திருந்துவோம்!!

Friday 23 September 2011

ஒரு கண்ணீர் கதை......!



ஓய்வுக்கு-
 செல்கிறது -
சூரியன் -
மஞ்சளாக!

மடியில்-
 கிடந்தாள்-
மங்கை-
 அவள் -
கெஞ்சலாக!

கவலைகளை -
கரைக்கும் -
இடம் -
கடற்கரைகள்!

கவலையுடன் -
இருந்தது -
இரு கிளிகள்!

நிறுத்தினாள் -
அழுகையை!

பார்த்தாள் -
அவனது முகத்தை!

தீர்க்கமாக-
 பார்த்தாள் -
தீர்வு கண்டிட -
துடித்தாள்!

கூட்டி கொண்டு போ!-இல்லையினா
கொன்னுட்டு போ!-
என்றாள்!

பதிலை-
 எதிர்பார்த்தாள்-
பதிலாக- மௌனமே-
 கிடைத்தது!

நேரம்-
 கடந்தது !
அவளது-
அழுகை -
தொடர்ந்தது!

புரிந்து கொள்ள -
மாட்டாயா?-
கேட்டான் -
சலிப்புடன்!

சொல்லென்றாள்-'
சுள்ளென்ற "-
கோபத்துடன்!

முடியாதென்றான் -
இறுகிய-
 முகத்துடன் !

நேரங்காலம் -
தெரியாமல் -
சுற்றினான் -
காதலை சொல்ல!

தலையில் -
அடி பட்ட -
கோழியை போல!-
தலை சுற்ற வைத்தான் -
மெல்ல மெல்ல !

அவனையே -
கட்டி கொள்ளவா ?!-
கேட்டாள் கேள்வியுடன்!

எவனையும் -
கட்டி கொள் -
என்னை தவிர !-
முடித்தான் -
பதிலுடன்!

கடல்தான் -
பொங்கும்-
பௌர்ணமி-
 நிலவில்!

கோபத்தில் -
பொங்கினாள்-
கரையில் -
நிலவு இவள்!

நீ!
ஆம்பளையினு -
சொல்லிடாதே!
இனி-
காதல் பேசி -
எவ வாழ்கையும் -
கெடுத்திடாதே!

வாதத்திற்கு -
முடிவு கட்டினாள்!
திரும்பி பார்க்காமல் -
நடை யை கட்டினாள்!

வெறித்து பார்த்தான்--
அவள்-
மறையும் வரை!

வெறுத்து போய் -
பார்த்தான் -
கடலை கண்ணு கெட்டும் -
தூரம் வரை!

வெளியேற வழி -இல்லையென்றால்-
அணையை உடைக்கும் -
வெள்ளம் போல!

முற்றும் துறந்தவன் -என 
சொல்லி கொண்டு-
முழுசா தொறந்து கொண்டு -அலையும்-
போலி துறவிகளை -
போல!

அடக்கிய வேதனைகள் -
எல்லாம்-
கன்னத்தில் வடிந்தது -
கண்ணீர் களாக!

கத்தினான்-
கதறினான் -
கனவு கோட்டைகள் -
கலைந்ததால்.....!

அழுகையின் -
ஊடே-
அலை பேசி -
அலறியது!

சொன்னான்-
எல்லாம் முடிந்தது -என
மறுமுனையில்-
 நண்பன்!

!ம்ம்ம்...!என்று -
சொன்னான்-
அலை பேசியை -
அணைத்தான்!

நினைத்து-
 வருந்தினான்-
தன் நிலையை!

எண்ணி இருந்தான்-
நேற்று வரை!
காதலியோடு வாழலாம் -
காலம் வரை!

இருந்தது திட்டம் -
பறந்து விட !
தன் காதலியோடு -
ஓடி விட!

தகவல் அவனுக்கு -
வந்தது இடியென!

தங்கை-
 ஓடி விட்டாள்-
ஏதோ ஒரு -
'தடியனோடு!

பெத்தவங்கள -
மறந்துட்டு -
ஓடுரவுங்க!

மறக்காம -
எழுதி வச்சிட்டு -
போவாங்க -
கடிதம் ஒன்னு!

கிராமங்களில் -
சொல்வதுண்டு-
குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சு!

இங்கே!
துண்டு சீட்டு-
 கடிதத்தால்-
ஒரு குடும்பமே -
தற்கொலை பண்ணி -
செத்து போச்சி!

ஒரு காதல் வாழ-
ஒரு குடும்பம்-
 சாகனுமா!?

ஒரு புள்ளியில் -
ஆரம்பிக்கும் -
எழுத்தை போல!

தன் குடும்பம்-
" போனது போல-"
இன்னொரு குடும்பம் போகனுமா!?

மாற்றம்-
 ஒண்ணுதான் -
மாறாதது!

இன்றைய சம்பவம் -
நாளைய சம்பவத்தை -
மாற்றியது!

முடியாது என்ற -
வார்த்தையில் -
முடித்து கொண்டான் -
தன்-
காதலை !

குற்ற பதிவு இல்லாமல்-
மருத்துவ மனையில் -
-அனுமதிக்க மாட்டார்
மருத்துவர் கூட!

எந்த பதிவும்-
 இல்லாமல் கூட -
காப்பாற்ற முயற்சிப்பார்-
ஆம்புலன்ஸ் -
ஓட்டுனருக்கு -
மனிதாபி மானம் கூட!

ஓட்டுனரின் -
மன நிலை தான்-
இவனுக்கு கூட!

அதனாலே -
ஒதுக்கினான் -
தன் -
காதலை கூட!

நொந்து -
செத்தவர்களின் -
உடலை குத்தி -
கிழிப்பார்கள் -
பிரேத பரிசோதனை -என்ற
பெயரில்!

ஆறுதல் வார்த்தை -
சொல்வதாக -
குத்தி கிழிப்பார்கள் -
இவனை-
உறவு முறை -
என்ற பெயரில்!

நடந்ததுக்காக -
அவர்கள் -
பிணமானார்கள்!
நடந்தவைகளுக்காக -
இவன்
நடமாடும் -
பிணமானான்!

வெற்றிகரமான -
கணவன் - மனைவி
உறவுக்கு பின்னால் -
ஒரு-
காதல் இருக்கும்!

தோல்வி அடைந்த-
 ஒவ்வொரு -
காதலுக்கு பின்னால்-
ஒரு 'கண்ணீர்'கதை-
இருக்கும்!

நேற்று நடந்த-
கதையை-
என் காதில் -
சொன்னது
கடற்கரை காத்து!

வேதனை-
 தாளாமல் -
ஊருக்கே-
 சொல்லி விட்டது -
என்னுடைய எழுத்து!!