Monday 18 July 2011

ஆன்மா'சொல்வது!

 வெற்றி இலக்கை -
காட்டிட-
நான் தயார்!

பந்தாக உதைபட-
நீ தயாரா...!?

காகித சிற்பதிர்க்கு-
வெட்டு படும் காகிதமா-
நான் தயார்!

வெட்டும் -
கத்தரி கோலாக -
நீ தயாரா!?

பூமியாக -
நான் -
தாங்கிட-
தயார்!

சருகாக-
 நீ !
விழ -
தயாரா!?

நூலாக -
உன்னை -
நிலை நிறுத்த தயார்!

காற்றை எதிர்த்து -
பறக்கும் பட்டமாக -
நீ தயாரா!?

மண்ணுக்குள் -
புதையும் -
ஆணி வேராக -
நான் தயார்!

நிழல் தரும் -
ஆலமரமாக -
நீ தயாரா!?

வெற்றியின் இடத்தை -
நான் காட்ட
தயார்!

லட்சியத்தை மனதின் -
வெற்றியிடத்தில் நிரப்ப -
நீ தயாரா!?

ஆன்மா சொல்வது -
இதைத்தானே!

இறைவனின் -
உதவி கொண்டு-
முயற்சித்து கொண்டே -
இருப்போமே!!

யோகம்!?

வளர்க்குற -
எனக்கே-
சோறு இல்ல!

படம் மட்டும் -
ஒட்டிய -
உனக்கா -
யோகம் வரப்போகுது!?

கழுதை படம் -
ஒட்டிய-
கடையை -
பார்த்தவுடன்!

சலிப்புடன் -
முணுமுணுத்தார்-
சலவை தொழிலாளி!

தன் வினை..!

மாது -
சபிக்கிறாள்!

மருமகளோடு '-
தனியா'போன-
மகனை பார்த்து!

மணந்தவனை-
மாமியாரை -
விட்டு 'தனியா'-
கூட்டி வந்ததை -
மறந்து!

திருமணம் ஆகி போனவளே...!

அதிகாலையில்-
 நீ வந்த பின் -
அணைந்து அணைந்து -கேலியாக-
எரிந்த -
தெரு விளக்கு!

உன் வருகையை-
 கண்டு விட-
அணையாமல் -
எரியுதடி!

மூச்சு திணறி-
 கெடக்குதடி-
உன் வீட்டு-
முற்றம்!

முத்தம் தரும் -
உன் உள்ளங்கால்-
சூடு -
கிடைக்காமல் !

'இடையில் "-
அப்போ அப்போ -
ஒட்டிய -
ஈய வாளியும்!

இனி இடம் -
கிடைப்பது -
எப்போ எப்போ -என
ஏங்குதடி!

கன்னி
 உனது -
கன்னி பேச்சை -
காணாமல்!

கதவெல்லாம் -
கண்ணீர் -
வடிக்குதடி!

'இத்து'போயி -
கிடக்குதடி-
உன்-
கிணத்து வாளி -
கயிறு!

சல்லடையாக -
போனதடி-
உன் வீட்டு-
சன்னல் -
கம்பி களும்!

ஆனந்த கண்ணீராய் -
இருந்த -
உன் வீட்டு-
கிணத்து தண்ணி !-
இப்போ-
அழுகையின் கண்ணீராய் -ஆனதடி!

சுற்று சுவரும் -
'சுதி'இழந்ததடி-
உன்-
சுந்தர முகம் -
காணாமல்!

வார்த்தை-
 சொல்ல முடியாதற்காக!

நான்-
எழுதி விட்டேன் -'வக்காலத்தாக'!!

கட்ட பஞ்சாயத்து!?

ஊர் கூடி -
தேர்-
இழுக்கலாம்!

தேராட்டம் இருந்த -
தேவதையை -
'இழுத்து'கொண்டு-
போனாலுமா!?

ஊரே-
கூடனும்...!?

Monday 11 July 2011

கொள்ளை அழகு..!

பார்த்ததென்னவோ-
ஒரு நொடி தான்!

அடங்கியதென்னவோ-
உயிர் நாடி தான்!

சின்னதாக ஒரு -
புன்னகை!

சீரழிந்தது ஒரு -
வாழ்கை!

திரும்பி பார்த்தாள்-
திமிருடன்!

திரும்ப வரவே இல்லை -
என் திமிர்!

கொஞ்சி கொஞ்சி -
பேசியே!

கெஞ்சி கெஞ்சி -
அலைய விட்டாயே!

கிழிஞ்ச பாய் கூட -இல்லை
படுக்க!

முயற்சிக்கிறேன் -உன் பிஞ்சு
பாதத்திற்கு பூ விரிக்க!

சேலை எனும் -திரைக்குள்
இருந்து கொண்டே!

காதலெனும் -சிறைக்குள்
என்னை தள்ளி விட்டே!

வெள்ளந்தியா -நீ
சிரித்தாய்!

தீயில் வெல்லமாக-எனை
ஆக்கினாய்!

என்னை கொள்ளை இட்டாய் -
உனதழகில்!

ஓ!
அதனால்தான் -உன்னை
'கொள்ளை'அழகு-
என்றார்களோ...!

பூக்களை...!

வெட்டி -
போடுகிறேன்-
என்-
வீட்டு -
பூக்களை!

எப்போதும் -
என்னிடம்-
சொல்லி கொண்டே -
இருக்கிறது -
அவளது -
நினைவுகளை..!


Monday 4 July 2011

பெத்தவளும்! என்னவளும்!

கண்ணீரை -
மறைத்துக்கொண்டு -
கஷ்டங்களை -
மறைத்தவள்!
பெத்தவள்!

பிரிவை தந்து -
கண்ணீரை-
மட்டும் தந்தவள் -
என்னவள்!

என் தாய்!
சிற்பமாக -
செதுக்கினாள்-
ஒரு -
பாறாங்கல்லை!

என்னவளோ!
சிதறடித்து விட்டாள்-
சிதறு தேங்காயை -
போல்!

பெத்தவள்!
திட்டுவத்தின் மூலம் -
பள்ளம் தோண்டினாள்-
விதை என்னை -
மரமாகக!

என்னவள்!
குவித்த-
 மண்ணோ-
கோபுரம் -
செய்யவல்ல -
என்னை -
சமாதியாக்க!

கருவுலகிலும் -
சுவாசிக்க-
வைத்தாள்-
என் தாய்!

கலிவுலகிலும்-
மூச்சடைக்க-
வைத்தாள் !
என்னவள்!

நம்பி -
வளர்த்தாள்-
என் தாய்!

நம்பிக்கை -
இல்லாமல் -
என்னை -
பிரிந்தாள்!
என்னவள்!

ஆண்களின் -
கண்ணீரை -
வெளியிட்டாலும்-
வெட்கம்!

மறைத்தாலும் -
துக்கம்!

துடி துடிக்குதே!

 தென்றலே!
தென்றலே!!
என்னை -
இப்படி செய்தவள் -
அவளே!
அவளே!!

ஓட முடிந்த-
 நதி -
நகர முடியாமல் -
இருக்கிறதே!

சுழற்றி அடித்த -
சூறாவளி -
கட்டி போட்ட -
கன்று குட்டி -
ஆனதே!

நீ!
போகும் -
வழியில் -
பூக்களை -
தழுவி இருப்பாய்!

வாசத்தையும் -
விஷத்தையும்-
எப்படி -
தாங்கி கொள்வாய்!?-
தென்றலே!

கற்று கொடு -
எனக்கு!

அந்த நிலைதான்-
எனக்கு!

காற்றே!
அவளது -
மூச்சு காற்றை -
அடையாளம் -
காட்டு!

மூச்சியிழுத்து -
உள்ளேயே -
வைத்துக்கொள்வேன்!

ஊரும் -
உலகமும்-
தூங்கி விட்டதே!

தூங்கினாலும் -
துடிக்கும் -
இதயத்தை போல்!

என்னை-
துடிக்க -
வைக்கிறதே!

அவளது -
நினைவே!

இன்னுமா புரியவில்லை....

வாசனை -
இல்லாத-
மல்லியா!?

அன்பே!
மல்லிகை -
உனக்கு-
என்ன தோழியா?

பூத்து -
சிரிப்பதும் -
நீ !
சொல்லியா!?

அன்பிற்கு -
இனியவளே!
மலரின் மொழி -
அறிந்த -
உனக்கு -!

என் மனதின் -
வலி மட்டும் -
தெரியலையா!?

இறைவா!

 மண்ணிலிருந்து-
மனிதனை -
படைத்தாய்!

உன்னிலிருந்து -
உடலில்-
உயிரை -
நுழைத்தாய்!

மண்ணால் -
படைக்கப்பட்ட -
மனிதனுக்கு -
மண்ணில் உணவை-
வைத்தாய்!

உன்னிலிருந்து வந்த -
உயிர் உரம் பெற-
உண்மையெனும் -
வேதம் தந்தாய்!

கண்களை -
படைத்தாய் -
கண்களில் -
ஒளியை வைத்தாய்!

மூடிக்கொள்ளவும்-
திறந்து கொள்ளவும் -
இமைகளை -
வைத்தாய்!

மூட -
திறக்க -
முடிவை -
மனிதனுக்கே -
கொடுத்தாய்!

பிறந்தவன் -
இறக்கவும்!
இறந்தவன் -
உயிர் பிக்கவும்-
செய்வாய்!

நன்மை,-
தீமை -
இரண்டையும்-
 வைத்தாய்!

எதை செய்வது -என்ற
முடிவை -
மனிதனுக்கே -
கொடுத்தாய்!

''இறுதி நாள் "-
"தீர்ப்பையோ''-
உன்னிடமே-
வைத்துக்கொண்டாய்!

வாழ்வென்பது-
எப்படியும் அல்ல!
இப்படி தான் -என
விளக்க-
வேதத்தை -
தந்தாய்!

பொன் மொழிகள் -
என்பார்கள் -
அறிஞர்கள் -
சொல்லை!

அவர்களுக்கு -
அறிவு கொடுத்த -
அருளாளா!
உன்-
அருமை -
என்னவென்று சொல்ல!

இறைவன் இல்லை -
என்பார்கள் -
ஒரு சாரார்!

இணை துணை -
வைப்பார்கள்-
ஒரு சாரார்!

இல்லவே இல்லை-
இறைவன் -
உன்னை தவிர -எனும்
சாராரிடம் எங்களை -சேர்ப்பாயாக!

இறைவா!
வணங்குகிறோம் -
உன்னையே!
நேர் வழியை -
வேண்டுகிறோம் -
உன்னிடமே!

சோக கீதம்...!

 நான்-
 பிச்சை -
எடுக்கவில்லை!

சீட்டு எடுப்பதால் -
பெறுகிறேன்-
இரு 'நெல்'லை!

என் விதியோ -
என்ன வென்று-
தெரியவில்லை!

இதில்-
உன் விதியை -
நான்-
என்ன சொல்ல!?

பறந்து சென்று -
உணவை -
தேடி கொள்வேன்!

நானா!?
உங்களிடம் -
பிச்சை -
கேட்கிறேன் !

கை கூடி வருமா?
காதல் -என
கை நீட்டி -
கேட்கிறான்!

கட்டியவளை விட்டு -
ஓடி வந்த-
கயவனிடம்!

நானும் !
மனிதனும் -
சிறை பட்டு தான்-
இருக்கிறோம்!

நான் இருப்பது -
கூண்டு சிறை!

அவன் இருப்பது -
மடமை எனும் -
சிறை!

இரண்டறிவு உள்ள -
என்னிடம்!

எதிர் காலத்தை -
கேட்கிறான்-
ஆறறிவு உள்ளவன்!


-ஜோசிய கிளியின்
சோக கீதம்!

மூக்குத்தி....!

 என்னவளே!
கண்மாயிலா !?
மூழ்கி போனது -
உன்-
மூக்குத்தி!

என் -
மயிலே!
மூக்குத்தி மட்டும் -
மூழ்கிடவில்லை!

அண்மையிலே தானே-
என்-
மனதும் -
அதில் -
ஒட்டி கொண்டது!

அடி பாவி!
தனிமையிலே-
சொல்கிறேன் !
காசுக்காரி -
உனக்கு -
ஒன்னு போனால்-
இன்னொன்னு!

உண்மையிலேயே!
எனக்கு -
இருந்த -
மனசோ-
ஒன்னே ஒன்னு!