Monday 27 June 2011

கண் திருஷ்டியா..!

தங்க கொழுசுகள் -
தங்க நிற -
கால்களுக்கு!

கண்ணாடி -
வளையல்கள் -
கண்ணாடி போன்ற -
கைகளுக்கு!

கருத்த பொட்டு -
எதற்கு -!?
உன்-
கன்னத்திற்கு!?

கண் திருஷ்டி கழிய-
கண் மையா!?

ஏற்று கொள்வாயா -!?
என்னை!

காரணம் -
கருப்பு பொட்டை விட -நான்
கருப்பு!

எது வரை!

தொந்தரவே இல்லை -
தொட்டிலில்-
  இருக்கும் வரை!

பின்-
கஷ்டத்தை தவிர -
ஒன்றும் இல்லை-
கல்லறை -
செல்லும் வரை!

நல்ல வேளையாக..!

எப்போதோ -நான்
இறந்திருக்க வேண்டும்!
நான் கவரி மான் ஜாதியாக
இருந்திருந்தால்!

நல்ல வேளை-நான்
எப்படி வெட்டினாலும் -
பல்லை காட்டும் -வெள்ளரிக்காய்
ஜாதி!

அதனால்தான் என்னவோ-
நீ திட்டும் போதெல்லாம் -
பல் இழித்து கொண்டே செல்கிறேன்!

உதறி விடு!


அழகே!
"கொடுத்து" வைத்தது -
உன் துவாளை!

அதை தானே -
இறுக்கி கொள்கிறது-
உன் ஈர தலை!

என் முன்னால்-
நீ!-
குளிக்க வேணாம்!

அந்த தண்ணீ மீது -
நான் -
பொறாமை படவும் -
வேணாம்!

உதறி விடு -
உன் துவாளையை-
நான் -
உன் வீட்டை-
கடக்கும் போது!

துளிர் விடும் -
என் உயிர்-
சில்லென்று ஈரம் -
என் மீது படும் போது!

யார்!?

திட்டுகிறான் இயற்கையை -
மழை தண்ணி -வீட்டுக்குள்
வந்ததென்று !

வீடு கட்டிய இடம் -
கண்மாயாக இருந்த இடம் -
என்பதை மறந்து விட்டு!

எல்லை மீறியது
மழை தண்ணி அல்ல -
மனிதா நீ!!

மனைவியானவள்...!

அழகிய கோலமாக்கினால்-
கோடுகளால் இணைத்து -
அலங்கோலமாக சிதறி கிடந்த
புள்ளிகள் என்னை!

நிலை கொள்ள செய்தாள்-
நாடு கடலிலும் நங்கூரமாக -
அலை கடலில் அலைக்கழிக்க பட்ட -
கப்பலான என்னை!

பொருந்தி கொண்டாள்-
வாழ்க்கையில் !
பொறுமை எனும் சொல்லை -
படிக்க கூட பொறுமை -
இல்லாத என்னை!

இருக்க முடியும் -ஒரு தாயிக்கு
இரு குழந்தைகள் !

இருக்க முடியாது-ஒரு பிள்ளைக்கு
இரு தாயிக்கள் !

எத்தனையோ பேர்களுக்கு -
எத்தனையோ தாய்மார்கள்!

அதெப்படி என கேள்வி வரும் -
இப்படி!

என்னை குழந்தையாக -
பெற்ற தாய்!
எனக்கு குழந்தையாக -
பிறந்த தாய்!

ஒதுக்கினார்கள் -என்னை
தராதரம் இல்லையென்று!

உண்டாக்கினாள்-தராதானமான
வாழ்கை ஒன்று!
என் தாரமானவள் இன்று!

இல்லை சந்தோசம் -வீட்டு
மனைகளினால்!
குறையாத சந்தோசம் -வீட்டில்
உள்ள மனைவிகளால்!

நேசியுங்கள் மனைவியை-
மனைவி ஆக்க திட்டமிட்டவர்களையே
நேசியுங்கள்!

விரயமான வாழ்வு!

குறி பார்க்க தெரியாதவனுக்கு-
துப்பாக்கி தோட்டாக்கள்-
விரயம்!

திசை தெரியாத மாலுமிக்கு-
கடல் பயணம் விரயம்!

துப்பில்லாத படகு -
நீரில் மிதப்பதால் -நதிக்கு
விரயம்!

முயற்சி இல்லாதவன் -
மூச்சு விடுவதும் விரயம்!

லட்சங்களை மட்டும்
சேர்த்து விட்டு-
லட்சியம் இல்லாதவன்-
வாழ்வதும் விரயம்!

எது நீ?

அன்பே,
எனக்கு-
 நீ,!
பால் வண்ண -
நிலவா!?
பாலை வன -
சுடு மணலா!?
எது நீ?

மஞ்சள் நிற -
சூரியனே!
உதிக்கும் போதும் !-
மறையும் போதும் ,!-
அதுவே -
உன் நிறமே!

எனக்கு-
 நீ !
தர போவது-
விடியலையா!?
அல்லது-
இருளையா!?
எது நீ?

மலர போகும் -
மொட்டே,!
நீ வெளியிட போவது-
நறு மணமா!?
அல்லது-
பூவின் நாகமா!?
எனக்கு-
எது நீ?

மழை தூறலே!
காய்ந்த -
பூமியின் மேல் விழுகிறாய் -
பூமியை குளிர செய்யவா !?அல்லது-
சட்டென்று நின்று -
பூமியை
சூடேற்றவா?

நீ !சூடா!?
குளிரா!?
எது நீ?

வருவாளே!
வருவாளே!-என்று
துடித்த மனதிற்கு
வந்தாயே வாளாக!

தன்னை காக்க வந்த-
போர் வாளா!?
அல்லது-
தண்டனை தர வந்த-
கொலை வாளா!?
எது நீ?

ஊர்வலமே!
ஊரும் உறவும் கூடி-
பூக்கள் சூடி-
நடக்கும் ஊர்வலம் !
எனக்கு நீ -
தர போவது-
மண விழா ஊர்வலமா!?
மரண ஊர்வலமா!?
எது நீ?

விரயம்!

அழுகிறார்கள் -சீரியல்
நடிகைகள் -பணம்
வாங்கி விட்டு !

அழுகிறார்கள் -நம்
வீட்டு பெண்கள் -சீரியலை
பார்த்து -கேபிள்
பணம் கொடுத்து விட்டு!

இலவசங்கள்!

யோசிப்பார்கள் -
வாங்குவதற்கு-
ஒரு பழம் -
ஒரு ரூபாய் என்றால்!

கூட்டம் கூடும் -
வாங்குவதற்கு -
ஒரு பழம் -
ரெண்டு ரூபாய் -
ஒரு பழம் -
இலவசம் என்றால்!

கொடுத்தார்கள் -
டி.வி இலவசம் !-
கேபிள் காசு கூடுது -
மாசா மாசம்!

அரிசி ஒரு ரூபாய்-
கழிவறை கட்டணம் -
அஞ்சு ரூபாய்!

இலவசமும் கூடுது -
விலை ஏற்றமும் கூடுது-
ஏமாற்றுபவர் பக்கமே -
மக்களும் கூடுது!

மிருகங்கள்...!

வேட்டையாடும் -
உடல் பசிக்கு!

இச்சையை -
தீர்க்க முயலும் எதனிடமாவது -
தீர்ந்த பின் அமைதி-
காட்டில் வாழும் மிருகம்!

கொலையும்-
 கொள்ளையும்-
செய்யும் -
பண பசி வந்தால்!

பணத்தின் மூலம் -
அடக்கிட முயலும்-
முடியவில்லை என்றால்-
காதல் பேசும்!

அப்படியும் முடியவில்லை என்றால் -
கற்பழிப்பு செய்யும் -
காம பசி வந்தால்!
நாட்டில் வாழும் மிருகம்!

செயல் ஓன்று தான்-
அறிவுகள் வேறாம் !

அதுகளுக்கு ஐந்தாம்-
இவர்களுக்கு ஆறாம்!?

பறிப்பது....!

பறித்தாலும் -
சிரிக்கும் -
பூக்கள்!

சிரித்தே -
உயிரை பறிப்பவர்கள் -
பெண்கள்!

வெறுத்து விட்டேன்!

வெறுத்து விட்டேன்
பூக்களை!

என்னை மட்டும் -
வெறுத்து விட்டாள்-அந்த
"பூங்கொடி!"

Thursday 23 June 2011

'''காலமாக ''' காத்திருக்கிறேன்!

ஆயுதங்கள் மிரட்டியது -
நாம் அஞ்சிடவில்லை !

வறுமை வாட்டியது -
நாம் வாடவும் இல்லை!


உறவுகள் உதறியது -நாம்
உடைந்திட வில்லை!

தேகத்தின் தேவை தீர்ந்த பின்னும் -நாம்
உறவை ''தீர்த்து ''கொள்ளவில்லை!

பிரியவே கூடாதென்று இருந்த -நாம்
பிரிந்தே இருக்கிறோமே!

மரணம் பிரிக்கவில்லையே!-
பிரித்தது நாம பெத்தபுள்ளைகளே!

சொத்தை பிரித்தார்கள் -
சொத்து சேர்த்து வைத்த -நம்மை ஏன்
பிரித்தார்கள் ''சொத்தை''கள்!

நாம ''சேர்ந்த ''தாலே -
பிறந்தவனுங்க !நம்மை
பிரிச்சி வச்சி டானுங்க!

உழச்ச சொத்தை
உருவுனானுங்க !
உன்னை விட்டு என்னை பிரிச்சி -
உசிரையுமே உருவிட்டானுங்க!

மூத்தவன் வீட்டில் -நானும்
இளையவன் வீட்டில் நீயும் !

பாக பிரி''வினை''போது -
பாசத்துக்கும் ''வினை''யாக -
அமைஞ்சது!

காதலுடன் -வாழ்தோம்
கவலையுடன் -வாழ்கிறோம்
''காலமான''பின்புதான் -சேர்வோமோ!

இப்படிக்கு,
முதுமையான முதியவர்.

நன்றி கடன்...!

 விரல் பிடித்து நடந்த -
கைகள்-
இன்று -
சுருக்கங்களால்!

ஓயாது நடந்த -
கால்கள்!-
இன்றோ!-
கிழிஞ்ச -
நார்களை போல்!

தளர்ந்த தாயே!
பாடு பட்டு-
 அடைச்சிடுவேன்-
பட்ட கடன் -
பணமா இருந்தா!?

எப்பாடு பட்டு -
அடைப்பேன்!-
என்தாயே!
பட்ட கடன் -
பாசமா இருந்தா!?

கருவின் வலியை-
அறிய-
எனக்கு -
வாய்ப்பில்லை!

காரணம் -
கர்ப்ப பை-
எனக்கில்லை!

என்ன புள்ள-
 பெத்தவளென!
என்ன வளர்ப்பு -
வளர்த்தவளென!
எத்தனையோ -
உனக்கு சொல்லடிகள்!

உச்சி முதல் -
உள்ளங்கால் வரை-
சொல்லடிகளை -
அடியா மாத்தி -
அடிச்சாலும்!

அடிகள் மிச்சமிருக்கும் -
உன் உடம்பில்-
 இடம் இருக்காது!

கடைசி காலத்தில் -
கஞ்சி ஊத்துரே -
பிள்ளைதானே-என்று-
கஷ்டமே தெரியாமல் -
வளர்த்தவளே!

உனக்கு -
கஞ்சி ஊத்த -
எந்த கஷ்டமும் -
நான் படுவேன்!

நன்றி செலுத்த-
 தெரியவில்லை-
ஒரு தாயின்-
 அன்புக்கு!

என்ன நன்றி -
செலுத்தி இருப்போம் -
எழுபது மடங்கு-
 அன்பு செலுத்தும் -
இறைவனுக்கு!?

கையடக்க தொலைபேசியே!

தொலை பேசியே !
உலகை அடக்கி கொண்டாய்-
உன்னுள்ளே!

பேசி பேசியே!
மனிதன் வாழ்வை -
முடக்கி விட்டாய் -
உனக்குள்ளே!!

கேட்காமலே!

அழுது பசியை-
  சொன்னால்தான் -
அன்னை கூட -
பாலூட்டுவாள்!
அவளே !-
போற்றுதலுக்கு உரியவள்!

கருதரிதவுடன் -
நெஞ்சில் பாலை சுரக்க -
வைத்தவனே!
கருணையாளன் ஆன -
வணக்கத்திற்கு உரிய -
இறைவன்!

(அ)சிங்கம்!

காக்கைக்கு தன்-
குஞ்சு பொன் குஞ்சு தானே!

அன்னையே !
அதனாலேயே !

வந்தவளுக்காக ஒதுக்கினேனே!
வளர்த்த உன்னையே!

அசிங்கம் என்னை -நீ
ஆண் சிங்கம் என -
'பீத்து'கின்றாயே!!

சிரிப்போ சிரிப்பு !

சிரித்துகொண்டோம் -
நாம் -
ஒருவரை ஒருவர் -
பார்த்து!

நீயோ!
சென்று விட்டாய் -
என்னை மறந்து -
 இன்னொருவனை மணந்து!

முடியவில்லை என்றாலும் -
முயற்சிக்கிறேன்!-
உன்னை-
மறந்து விட!-
புது  வாழ்வு
தொடங்கி விட!

மணந்திடவும் விடாது -
மறந்திடவும் விடாது -
நாம பொறந்த-
மண்!

காயங்கள் மாறலாம்-
காலபோக்கில் !

குத்தமே சொல்லி -
குதறுகிறார்கள் -
காயத்தை -
பேச்சு வாக்கில்!

காதலித்த போது -
வெறுத்த ஊரு!

பிரிந்தபோதும் -நம்மை பத்தி
சிரிப்பாய் சிரிக்குதடி-
அதே ஊரு!!

காற்றாக நீ!

தென்றலானாய் -
காதலியாக-
வந்த போது!

சூறாவளியாக மாறினாய் -
நீ!-
மனை வியானபோது!

சுவாசிக்க முடியவில்லை-
உன்னை-
நான் பிரிந்து -
வாழும்போது!

சொல்கிறேன் -
முத்தாய்ப்பாய் -
இருந்து இருக்கிறாய்-
நீ என் மூச்சு  காற்றாய்!

Monday 6 June 2011

வந்து விடு!

என்னவளே!
நீயாக சென்று-
கடலில் குளித்து விடு !

முடியாதென்றால் -
நீ குளித்த-
நீரை கொஞ்சம் -
கடலில் கொட்டி விடு!

அழகியே!
பலர் மகிழ்வதுண்டு-
கடலில் குளிப்பதால் !

கடலுக்கு மகிழ்ச்சியோ -
நீ வந்து -
குளிப்பதால்!

முத்தாக-
 ,மழை விழுந்திட -
வேண்டும்!
சிப்பியை கண்டு!

இந்த கடல் -
முத்தாக
மின்னுவதோ -
உன்னை கண்டு!

காலைக்குள்-
 வந்து விடு -
கண்டு விட -
கடலை !

இல்லைஎன்றால் -
உன்னை-
காண வந்து விடும் -
ஒரு ஆழி பேரலை!

புகைச்சல்!!

தீக்குச்சியாக -
இருந்து கொள்வோம் -
கரு மருந்து நீயாக-
குச்சி நானாக -
உன்னோடு நானும்-
எரிந்து கொள்வேன்!

குத்து விளக்காக -
இருந்து கொள்வோம் -
நெருப்பு நீயாக -
திரி நானாக-
உனக்குள் நான்-
மூழ்கிகொள்வேன்!

அகல் விளக்காக -
இருந்து கொள்வோம்-
எண்ணெய் நீயாக -
குடுவை நானாக -
உன்னை நான்-
சுமந்து கொள்வேன்!

எரி மலையாக -
இருந்து கொள்வோம்-
நெருப்பு பிழம்பு நீயாக -
மலை நானாக -
என் மீது -
நீ!வடிந்து கொள்வாய்!

அப்படியெல்லாம் -
இல்லாமல் -
எரியும் நெருப்பாக-
நான் இருக்கும்போது -
ஈர "சாக்காக" -
என் மீது-
விழுந்து விட்டாயே!

புகை கிளம்பி-
பலருக்கு-
 கண் எரிச்சல் -
உண்டானதே!

காரணம் -
தெரிந்த பின்னே -
கண் எரிச்சல் -
வயிதெரிச்சலாக-
மாறியதே!

கட்டைகள்!

நல்ல கட்டை !
நாட்டு கட்டை,!

தேக்கு கட்டை,!
சந்தன கட்டை,!-
என்றெல்லாம் !

வஞ்சிகளை வர்ணிக்கும்
வாலிபர்களே!

வர்ணிப்புகளுடன்
நிறுத்தி கொள்ளுங்கள் !

பட்டவன் சொல்கிறேன் !

தொட்டு விடாதீர்கள்!

அவர்கள் சுடும்
''கொள்ளி'' கட்டைகள்!

குறுக்கிடாதே!

 தூரத்தில் -
இருந்து கொண்டே-
கூட்டத்தில் -
இருக்கும் என்னை-
தாக்கும் உனது கண்ணே!

உனது பார்வையும் ,சிரிப்பும்-
என்னை மகிழ்ச்சியில் -ஆழ்த்தியது !
என்பதை விட நெருப்பில் அல்லவா -
வீழ்த்தியது!

பார்வை பார்த்து கொண்டு -இருக்கும்போதே -
காலம் கழிந்து கொண்டும் -
கரைந்து கொண்டும் இருந்த்தது!

பட்டு சேலை படபடக்க-
பொன்னகை மினுமினுக்க-
சிரிப்பு கலகலக்க-
காரில் வந்தியாம்-கூடவே
உன் கணவனிருக்க!

இவ்வாறு கேள்விபட்டேன்!
மனம் புண்பட்டேன்!

நீ!பார்த்த பார்வையை-
நான் நினைத்தேன்-
அன்பென்று!

நீ!பார்த்ததோ-
நான் தூசிஎன்று!

பரவவில்லை!
உனக்கு பின் -
யார் மீதும்-
எனக்கு பாசம்-
வரவே  இல்லை!

ஏமாற்றம் எனக்கு -
ஒன்றும்
புதிதல்ல !

காசில்லாதவனை-
எவளுக்கும்ஏற்றுகொள்ள-
மனமில்லை!

ஏமாற்றம் நிறைந்த-
என் வாழ்வில் உன்னால் வரும் -
மாற்றம் என நினைத்தேன் -
மீண்டும் ஏமாற்றமே!

வாழ்கை எனும் புத்தகத்தில்
காதலென்பது ஒரு பக்கம்!
என்னமோ தெரியவில்லை -
அப்பக்கம் மட்டும் -
புரியவில்லை எனக்கும்!

வாகனம் ஓட்டுபவனின்
திறமை எதில் உள்ளதென்றால்-
எதிரில் வருபவனை அனுசரித்து-
ஓட்டுவதில்!

என் வாழ்கை பயணத்தில்-
உன் வாழ்க்கை வாகனம்-
குறுக்கிட வேண்டாம்!

ஏனென்றால் !
வாகன விபத்தில் -காயத்தின்
வலி ஆறும் வரைக்கும் !

வாழ்கை விபத்தின் -காயத்தின்
வலி தலை முறைக்கும்!

கொட்டாமலே..!

 தேள் -
கொட்டினால்தான்-
ஏறும்-
 விஷம்!

அழகே!

நீயோ!
இமை கொட்டாமல்-
பார்த்தாலும் -
விஷம் ஏறுவதுபோல்-
துடிக்குதடி-
தேகம்!

மது!

நாசமாக போக -
என்னை-
நாடலாம் -என்றது
'மது பான கடை'!