Thursday 24 March 2011

2020

2020 வல்லரசாம் நம் நாடு 
ஊழல் இல்லாத நல்லரசு கொண்டு வர நாடு !

மானாட மயிலாட

கை தட்டி ரசிக்கலாம் 
தன பொண்டாட்டி அடுத்தவனோட ஆட 
அது தானே மானாட மயிலாட !

கறை

மனதில் கறை
உடலில் கறை 
சிந்தனயில் குறை 
நோய் வராமல் இருக்க ஆணுறை !

மனதை கொன்று 
உடல் மட்டும் வாழ்வது என்ன முறை !

முடியவில்லை

அருகில் இருந்தாய் 
வார்த்தை இழந்தேன் 
பேச முடியாமல் !

விட்டு விலகினாய் 
ஆகிவிட்டேன் 
வாழவும் முடியாமல் !

பால்!!

எனக்கு உன்னை-
 பிடித்ததில் -
ஆச்சர்யம்-
 ஒன்றும் இல்லை !

ஏனென்றால்-
 நான் செய்வது -
பால் வியாபாரம் !

உனக்கோ -
பால் வடியும் முகம் !

ஓட்டு

அலைவார்கள் ஓட்டுக்காக 
மக்களும் போடுவார்கள் நோட்டுக்காக !
கொஞ்ச காலம் எடுப்பார்கள் ஓட்டு பிச்சை 
பிறகு மக்கள் எடுப்பார்கள் வாழ்கை பிச்சை !

வாழ என் நாடு - தமிழ் நாடு !

ஒரு கணம்!

சிப்பிக்குள் -
கடல் !

யானை குட்டி போட்ட -
எறும்பு !

சுடாத -
சூரியன் !

வயதே கூடாத -
வாழ்கை !

எதையுமே -
எதிர் பாராத உறவு !

மன்னிக்க மட்டுமே-
 தெரிந்த மனிதன் !

இதெல்லாம் நடக்கலாம் -
என்று எண்ணி பார்க்கிறேன் !

ஆனால் என்னவளை-
மறந்து ஒரு கனமா!?-
"எண்ணிட" கூட -
முடியவில்லை!

இனம்

பெண்ணென்றால்-
 பேயும் இறங்குமாம் !

அது சரி !-
இனம் இனத்தோடு -
தானே சேரும் !

தோல்வி

காதல் -
தோல்வியா?

இனி உங்களுக்கு -
வெற்றி தான் !

உங்களை பிடித்த -
சனியன் தான் -
தொலைந்ததே !!!

புலம்பல்!

கருவிலயே-
கலைத்திருக்கணும் !

இல்லையென்றால்-
பெத்து குப்பை தொட்டியில-
போட்டிருக்கணும்!

அந்த -
மனிதர்களை போல-என
தாய் நாய்-
 திட்டியது குட்டியை !

தேடல்!

தேடினேன்-
 தேடினேன் !
உன்னை -
காணும் வரை !

உன்னை கண்ட -
பின்னும் தேடுகிறேன்!-
என்னை -
காணவில்லை ! 

இரவு!

கொஞ்ச நேரம்-
 நீளட்டுமே -
இந்த இரவு -
ஏங்குவது ?

புது மாப்பிள்ளை இல்லை -
திருடன் !

சிகரெட்

உன்னை கொல்லாமல் -
விட மாட்டேன் !-என 
கோபத்துடன் !

உதட்டில் 
புகைந்து கொண்டிருக்கும் -
சிகரெட் !

பொறுமை!

பொறுமை -
கடலினும் பெரிதாம் !

ஆனால் -
ஒரு தாயின் -
பொறுமைக்கு முன்னால் -
அந்த கடல் கூட -
ஒரு துளி தான் !

வெங்காயம்!

என்னை -
வெட்டி விட்டு !

நீ !
ஏன் அழுகிறாய் !?-
விளக்கம் கேட்பது 
வெங்காயம் !

தங்கம்!

தங்கத்தை -
விரும்பாத-
தங்கமே-
 விரும்பும் -
தங்கமடி-
 நீ !